Realme 9i 5G ஸ்மார்ட்போனின் அறிமுக தேதி அறிவிப்பு.. எகிறும் எதிர்பார்ப்பு!
ரியல்மி நிறுனம் வரும் ஆகஸ்ட் 18-ம் தேதி ரியல்மி 9ஐ 5ஜி (Realme 9i 5G) எனும் ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் 5ஜி ஆதரவுடன் பட்ஜெட் விலையில் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

ரியல்மி 9ஐ 5ஜி
மேலும் கடந்த ஜனவரி மாதம் இந்தியாவில் ரியல்மி 9ஐ 4ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது ரியல்மி 9ஐ 5ஜி ஸ்மார்ட்போன்அறிமுகமாகும் என்பதால் இந்தியாவில் நல்ல வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோல் இந்த புதிய ரியல்மி 9ஐ 5ஜி ஸ்மார்ட்போன் ஆகஸ்ட் 18-ம் தேதி மதியம் 12.30 மணிக்கு அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இப்போது ஆன்லைனில் கசிந்த ரியல்மி 9ஐ 5ஜி ஸ்மார்ட்போனின் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

தரமான சிப்செட்
ரியல்மி 9ஐ 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது மீடியாடெக் Dimensity 810 5ஜி சிப்செட் ஆதரவுடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவேஇந்த ஸ்மார்ட்போனை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். பின்பு இந்த புதியபோனில் ஆண்ட்ராய்டு 12 இயங்குதளம் உள்ளதாகக்
கூறப்படுகிறது.

பெரிய டிஸ்பிளே
புதிய ரியல்மி 9ஐ 5ஜி ஸ்மார்ட்போன் 6.7-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே வசதியுடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 450 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது
இந்த அட்டகாசமான ரியல்மி 9ஐ 5ஜி ஸ்மார்ட்போன்.

அட்டகாசமான கேமரா
ரியல்மி 9ஐ 5ஜி ஸ்மார்ட்போனில் 50எம்பி ரியர் கேமரா, 16எம்பி செல்பீ கேமரா வசதி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன்உதவியுடன் அட்டகாசமான புகைப்படங்களை எடுக்க முடியும். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ரியல்மி நிறுவனம்.

நீங்கள் எதிர்பார்த்த பேட்டரி வசதி
அதேபோல் ரியல்மி 9ஐ 5ஜி ஸ்மார்ட்போன் 5000 எம்ஏஎச் பேட்டரி, 33W பாஸ்ட் சார்ஜிங் வசதி, 6ஜிபி ரேம், 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் ரூ.15,000-க்குள் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்நிறுவனம் சமீபத்தில் இந்தியாவில் அறிமுகம் செய்த ரியல்மி நார்சோ 50 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனின் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

ரியல்மி நார்சோ 50 ப்ரோ 5ஜி
ரியல்மி நார்சோ 50 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் 6.4-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் Super AMOLED டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1000 நிட்ஸ் ப்ரைட்னஸ், கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு போன்ற அம்சங்களுடன் இந்த புதிய ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.
அதேபோல் ரியல்மி நார்சோ 50 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனில் Dolby Atmos உடன் இணைக்கப்பட்ட இரட்டை ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் ஆதரவு உள்ளன.

ரியல்மி நார்சோ 50 ப்ரோ 5ஜி சிப்செட்
ரியல்மி நார்சோ 50 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் மீடியாடெக் Dimensity 920 5ஜி சிப்செட் வசதி உள்ளது. பின்பு Realme UI 3.0 சார்ந்த ஆண்ட்ராய்டு 12 இயங்குதளம், 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் போன்ற சிறப்பான வசதியை கொண்டுள்ளது இந்த ரியல்மி போன்.

சூப்பரான கேமரா
ரியல்மி நார்சோ 50 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் 48எம்பி பிரைமரி சென்சார் + 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 2எம்பி மேக்ரோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமராஆதரவைக் கொண்டுள்ளது. பின்பு செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த ரியல்மி போன்.

ரியல்மி நார்சோ 50 ப்ரோ 5ஜி விலை
குறிப்பாக 5000 எம்ஏஎச் பேட்டரி ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ரியல்மி நார்சோ 50 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன். மேலும் 5ஜி, 4ஜி எல்டிஇ, வைஃபை,புளூடூத், ஜிபிஎஸ்/ஏ-ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் போன்ற கனெக்டிவிட்டி ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த ரியல்மி நார்சோ போன்.
ரியல்மி நார்சோ 50 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனின் ஆரம்ப விலை ரூ.21,999-ஆக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஹைப்பர் பிளாக் மற்றும் ஹைப்பர் ப்ளூ நிறங்களில் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications