வரிசைல வாங்கப்பா: ரூ.14,999 விலையில் Realme 9i 5G- ஆஃபர் உடன் தொடங்கிய விற்பனை!

|

Realme 9i 5G ஸ்மார்ட்போன் இன்று மதியம் 12 மணி முதல் இந்தியாவில் விற்பனைக்கு கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் அம்சம், விலை மற்றும் ஆஃபர்கள் குறித்த விவரத்தை பார்க்கலாம்.

அற்புதமான லுக்கும் வடிவமைப்பும்

அற்புதமான லுக்கும் வடிவமைப்பும்

Realme 9i 5G ஸ்மார்ட்போனானது மீடியாடெக் டைமன்சிட்டி 810 5ஜி சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. மலிவு விலை ஸ்மார்ட்போனுக்கு புகழ் பெற்ற நிறுவனங்களில் ரியல்மியும் ஒன்று. இந்த ஸ்மார்ட்போனின் லுக்கும் வடிவமைப்பும், இது மலிவு விலை ஸ்மார்ட்போனா, நம்பவே முடியலயே என்று ஆச்சரியப்படும் அளவிற்கு அருமையாக இருக்கும்.

லேசர் லைட் டிசைன்

லேசர் லைட் டிசைன்

இந்த பட்ஜெட் விலை ஸ்மார்ட்போனில் 50 எம்பி டிரிபிள் ரியர் கேமரா, லேசர் லைட் டிசைன் மற்றும் 90HZ அல்ட்ரா ஸ்மூத் டிஸ்ப்ளே அம்சம் என பல குறிப்பிடத்தக்க அம்சங்களைக் கொண்டிருக்கிறது. Realme 9i 5G ஸ்மார்ட்போனானது இரண்டு வண்ண விருப்பங்களில் கிடைக்கிறது.

இன்றுமுதல் இந்தியாவில் விற்பனை

இன்றுமுதல் இந்தியாவில் விற்பனை

ரியல்மி நிறுவனம் கடந்த வாரம் அதன் Realme 9i 5G ஸ்மார்ட்போனை ரூ.14,999 என்ற ஆரம்ப விலையில் அறிமுகம் செய்தது.

இந்த ஸ்மார்ட்போனானது இன்றுமுதல் இந்தியாவில் விற்பனைக்கு கிடைக்கும். லேசர் லைட் வடிவமைப்பைக் கொண்டிருக்கிறது இந்த ஸ்மார்ட்போன்.

மெட்டாலிக் கோல்ட் மற்றும் ராக்கிங் பிளாக் என்ற இரண்டு வண்ண விருப்பத்தில் விற்பனைக்கு கிடைக்கிறது.

Realme 9i 5G விலை சலுகைகள்

Realme 9i 5G விலை சலுகைகள்

Realme 9i 5G இரண்டு வேரியண்ட்களில் விற்பனைக்கு கிடைக்கிறது. அது 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ், 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் ஆகும்.

இதன் 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் விலை ரூ.14,999 எனவும் 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் விலை ரூ.16,999 எனவும் இருக்கிறது.

Realme 9i 5G கிடைக்கும் தன்மை மற்றும் சலுகைகள்

Realme 9i 5G கிடைக்கும் தன்மை மற்றும் சலுகைகள்

Realme 9i 5G ஸ்மார்ட்போனானது இன்று மதியம் 12 மணி முதல் Flipkart மற்றும் Realme.com தளத்தில் வாங்குதலுக்கு கிடைக்கிறது.

ஐசிஐசிஐ வங்கி டெபிட் கார்ட் மற்றும் கிரெடிட் கார்ட்கள் மூலம் ஸ்மார்ட்போனை வாங்கும் பட்சத்தில் ரூ.1000 தள்ளுபடி கிடைக்கிறது.

Realme 9i 5G சிறப்பம்சங்கள்

Realme 9i 5G சிறப்பம்சங்கள்

Realme 9i 5G சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கையில், இதில் 6.6 இன்ச் 90Hz அல்ட்ரா ஸ்மூத் டிஸ்ப்ளே பொருத்தப்பட்டிருக்கிறது.

இந்த டிஸ்ப்ளே ஆனது 180Hz டச் மாதிரி வீதம், 2400×1080 பிக்சல்கள் தீர்மானத்துடன் முழு HD+ ரெசல்யூஷன் வசதியைக் கொண்டிருக்கிறது.

இந்த ஸ்மார்ட்போனானது MediaTek Dimensity 810 5G சிப்செட் ஆதரவைக் கொண்டிருக்கிறது. ஆண்ட்ராய்டு 12 அடிப்படையிலான Realme UI 3.0 மூலம் இந்த ஸ்மார்ட்போன் இயக்கப்படுகிறது. இதன் எடை 187 கிராம் ஆகும்.

50MP அல்ட்ரா HD முதன்மை லென்ஸ்

50MP அல்ட்ரா HD முதன்மை லென்ஸ்

Realme 9i 5G ஸ்மார்ட்போனானது பின்புறத்தில் டிரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது.

50MP அல்ட்ரா HD முதன்மை லென்ஸ், 4cm மேக்ரோ சென்சார் மற்றும் போர்ட்ரெய்ட் ஷூட்டர் ஆகிய வசதியை கொண்டுள்ளது.ஸ்மார்ட்போனின் முன்புறத்தில் 8MP செல்பி கேமரா வசதி உள்ளது.

பேட்டரி அம்சத்தை பொறுத்தவரை, இந்த ஸ்மார்ட்போனானது 18W ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்ப ஆதரவைக் கொண்டுள்ளது. 5,000mAh பேட்டரி இதில் பொருத்தப்பட்டுள்ளது.

பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை ஸ்கேனர்

பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை ஸ்கேனர்

Realme 9i 5G ஸ்மார்ட்போனில் பாதுகாப்பு அம்சத்துக்கு என பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை ஸ்கேனர் ஆதரவு இருக்கிறது. டூயல் சிம் ஆதரவு, 5ஜி இணைப்பு மற்றும் 11ஜிபி வரையிலான டைனமிக் ரேம் வசதி உள்ளது. இந்த ஸ்மார்ட்போனை வாங்கத் திட்டமிட்டால் பிளிப்கார்ட் தளத்தை அணுகலாம்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Realme 9i 5G Sale Start in India today with Huge offers: Right to Buy?

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X