Realme 9i 5G போனை வாங்கலாமா? வேண்டாமா? நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய குயிக் ரெவியூ.!

|

ஸ்மார்ட்போன் விற்பனையில் இரண்டாவதாக இருக்கும் Realme நிறுவனம் தனது அடுத்த வரவான Realme 9i 5G மாடலை இந்தியாவில் இந்த ஆண்டின் தொடக்கத்தில் அறிமுகம் செய்தது. மெட் காலா 2022வின் தீம்மில் இருந்து கவரப்பட்டு இந்த ஸ்மார்ட் போன் வேரியண்ட்டை விண்டேஜ் சிடி போன்ற வெளிப்புற தோற்றத்தில் நிறுவனம் வடிவமைத்து பலரது கவனத்தை முழுமையாக ஈர்த்தது. பட்ஜெட் விலையில் கிடைக்கும் 5ஜி போன்களில் இப்போது இந்த மாடலும் இந்தியாவில் வாங்கக் கிடைக்கிறது. இந்த போனை வாங்கலாமா? வேண்டாமா? என்று பார்க்கலாம்.

ரியல்மி 9i 5ஜி ஸ்மார்ட்போன் விலை என்ன?

ரியல்மி 9i 5ஜி ஸ்மார்ட்போன் விலை என்ன?

இந்த ரியல்மி 9i 5ஜி ஸ்மார்ட்போன் இரண்டு வேரியண்ட்டில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது 4GB ரேம் மற்றும் 64GB ஸ்டோரேஜ் உடன் ரூ.14,999 விலையில் வருகிறது. அதேபோல், இதன் 6GB ரேம் மற்றும் 128GB ஸ்டோரேஜ் மாடல் விலை ரூ. 16,999 ஆக விற்பனைக்குக் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் பிளிப்கார்ட் மற்றும் ரியல்மி இன் இணையதளத்தில் விற்பனைக்குக் கிடைக்கிறது. இப்போது இந்த ஸ்மார்ட்போனை வாங்க என்ன சிறப்பிருக்கிறது? எந்த விஷயங்களை நீங்கள் கவனிக்க வேண்டும் என்பது பற்றிய விவரங்களை இப்போது பார்க்கலாம்.

3 லென்ஸ் பின்புற கேமெரா

3 லென்ஸ் பின்புற கேமெரா

ரியல்மி 9i 5Gயின் வெளிப்புற தோற்றம் அந்த கால சிடியை போல் மல்டி கலர் ரிப்லெக்ஷன் போன்ற தன்மையுடன் வடிவமைக்கப்பட்டிருப்பது இதன் சிறப்பம்சம். என்ன தான் சிடியைப் போல் பல நிறங்களில் இது முழுமையாக மிளிரவில்லை என்றாலும், ஸ்மார்ட்போனில் இந்த அம்சம் புதிய அனுபவத்தைத் தருகிறது என்பதே உண்மை. குறிப்பாக, இது ஸ்மார்ட்போனின் லுக்கை சற்று சிறப்பாக மாற்றியுள்ளது. இதன் மற்றுமொரு சிறப்பம்சமாக 3 லென்ஸ் பின்புற கேமெராவை கூறலாம். இது பிளாட் எட்ஜ் மற்றும் கர்வுடு ஓரங்கள் இதைக் கையாள்வதை மிகவும் சுலபமாக ஆகியுள்ளது.

உங்க WiFi கனெக்ஷன் திடீர் திடீர்னு கட் ஆகுதா? அப்போ இதான் காரணம்! இதை சரி செய்வது எப்படி?உங்க WiFi கனெக்ஷன் திடீர் திடீர்னு கட் ஆகுதா? அப்போ இதான் காரணம்! இதை சரி செய்வது எப்படி?

ரியல்மி 9i 5Gயின் டிஸ்பிளே எப்படி இருக்கிறது?

ரியல்மி 9i 5Gயின் டிஸ்பிளே எப்படி இருக்கிறது?

இதன் வலது ஓரத்தில் உள்ள பவர் பட்டன் ஆன் ஆப் வேலையை தாண்டி பிங்கர் பிரிண்ட் ஸ்கேனர் ஆகவும் இருக்கிறது என்பது கவனிக்கத்தக்கது. இடது புற ஓரத்தில் வாலியூம் பட்டன்கள் மற்றும் சிம் கார்டு மற்றும் SD கார்ட் ஸ்லாட் அமைந்துள்ளது. மேலும் அடிப்பாகத்தில் 3.5mm ஹெட் போன் ஜாக், ஸ்பீக்கர் மற்றும் மைக்ரோ போன் அமைந்துள்ளது. ரியல்மி 9i 5Gயின் முன்பக்கம் 6.6' இன்ச் FHD+ 90Hz IPS LCD டிஸ்பிளேவை கொண்டுள்ளது. டிஸ்பிளேயின் பிரைட்னஸ் கண்களுக்கு இதமானதாக இருந்தாலும் வெயிலில் செல்லும்போது போன் உபயோகிக்கும் அனுபவத்தைக் கடினமாக்குகிறது.

குறையும் இல்லை நிறையும் இல்லையா?

குறையும் இல்லை நிறையும் இல்லையா?

டிஸ்பிளேவை பாதுகாப்பதற்கு உபயோகப்படுத்த பாண்டா கிளாஸ் அதன் வேலையை சிறப்பாக செய்கிறது. ஆனால் 90Hz ரிப்ரேஷ் ரேட்டை அதிகப்படுத்தினால் இன்னும் சிறப்பாக இருக்கும். எனவே டிஸ்பிளேவை பொறுத்தவரை குறை கூறும் அளவிற்கு இது மோசமானதாக இல்லை என்றாலும் சிறப்பாகக் கூறும் அளவிற்கு நிறையும் இல்லை என்றுதான் கூற வேண்டும். என்னதான் ரியல்மி 9i 5G ஸ்மார்ட்போன் கேமிங் நோக்கத்தில் உருவாக்கப்படவில்லை என்றாலும் சில லைட் கேம்ஸ் விளையாடும்பொழுது நல்ல அனுபவத்தைத் தருகிறது.

iPhone 14 அறிமுக தேதி உறுதியானது.! ஆப்பிள் Far Out ஈவென்ட் நடக்கும் நேரம் இது தான்.!iPhone 14 அறிமுக தேதி உறுதியானது.! ஆப்பிள் Far Out ஈவென்ட் நடக்கும் நேரம் இது தான்.!

1TB வரை ஸ்டோரேஜ்-ஆ?

1TB வரை ஸ்டோரேஜ்-ஆ?

ஆனால் அதிக கிராபிக்ஸ் உள்ள கேம்ஸ் விளையாடும்பொழுது சிறிது தடுமாற்றத்தை நம்மால் உணர முடிந்தது. இது ஒரு பட்ஜெட் 5ஜி ஸ்மார்ட்போன் சாதனம் என்றாலும் கூட, இதில் ஸ்டோரேஜ் பற்றிய கவலை உங்களுக்கு இல்லை. காரணம், இத்துடன் கொடுக்கப்பட்டுள்ள 1TB கூடுதல் ஸ்டோரேஜ் மற்றும் 5GB விர்சுவல் ஸ்டோரேஜ் நம்மை மேலும் கவரும் ஒரு அம்சமாக இருக்கிறது. ஸ்டோரேஜ் பற்றி கவலை இல்லாமல் சிறப்பாக இந்த போனை நீங்கள் உபயோகிக்க முடியும் என்பதில் எந்த சந்தேகமுமில்லை.

கேமரா அம்சம் எப்படி இருக்கு?

கேமரா அம்சம் எப்படி இருக்கு?

இந்த ஸ்மார்ட்போன் 50MP பிரைமரி லென்ஸ் மற்றும் 2MP செக்கெண்டரி டெப்த் சென்சார் மற்றும் 2MP டேர்னரி மேக்ரோ சென்சார் பொருத்தப்பட்டுள்ளது. ஆனால், பிரைமரி லென்ஸை போல் மீதம் உள்ள சென்சார்கள் பெரிதாக நல்ல அனுபவத்தைத் தரவில்லை என்று தான் கூற வேண்டும். இது ஆண்ட்ராய்டு 12 ரியல்மி 9i 5G ஸ்மார்ட் போனின் பூட்டிங்கை சீராகவும் சிறப்பாகவும் வைத்துள்ளது. மேலும், இதன் 5000 mAh பேட்டரி 18W பாஸ்ட் சார்ஜிங் தன்மையுடன் வருகிறது.

இப்படி ஒரு டபுள் ட்ரம் வாஷிங் மெஷினா? Xiaomi அறிமுகம் செய்த MIJIA பார்ட்டிஷன் வாஷிங் மெஷின்!இப்படி ஒரு டபுள் ட்ரம் வாஷிங் மெஷினா? Xiaomi அறிமுகம் செய்த MIJIA பார்ட்டிஷன் வாஷிங் மெஷின்!

சரி, இறுதி தீர்வு என்ன?

சரி, இறுதி தீர்வு என்ன?

ஆனால், எதிர்பார்த்த வேகம் கிடைக்கவில்லை. 100% சார்ஜ் ஆகா பொதுவாக 2 மணிநேரம் வரை எடுத்துக்கொள்கிறது என்பதை நிச்சயமாக நீங்கள் விரும்பப்போவதில்லை. ரியல்மி 9i 5G ஸ்மார்ட் போன் பார்ப்பதற்குக் கண்ணிற்குக் கவர்ச்சியாக இருந்தாலும் எதிர்பார்க்கப்பட்ட சிறந்த அனுபவத்தை தரவில்லை என்பது தான் உண்மை. இதைவிட 4G வேரியண்ட் சிறந்த அம்சங்களை கொண்டிருந்தது என்பது கவனிக்கத்தக்கது. அதேபோன்று, இந்த 5G ஸ்மார்ட்போனில் கொண்டு வந்திருந்தால் சிறப்பாக இருக்கும் என்பது தான் எங்கள் கருத்து.

Best Mobiles in India

English summary
Realme 9i 5G Review: Should You Buy This Mid-Range Smartphone?

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X