வாடிக்கையாளர்கள் தேவைக்கு ஏற்ப வரும் என அறிவிப்பு- விரைவில் அறிமுகமாகும் ரியல்மி 9 தொடர்!

|

ரியல்மி 9ஐ ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டதையடுத்து நிறுவனம் இந்த தொடரில் இருக்கும் பிற ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய தயாராகி வருகிறது. ரியல்மி நிறுவனத்தின் ரியல்மி 9 மற்றும் ரியல்மி 9 ப்ரோ ஸ்மார்ட்போன்கள் விரைவில் இந்தியாவிற்கு வரும் என அந்த நிறுவனத்தின் துணைத் தலைவர் மாதவ் ஷெத் உறுதி அளித்துள்ளார்.

ரியல்மி 9 தொடர் ஸ்மார்ட்போன் விவரங்கள்

ரியல்மி 9 தொடர் ஸ்மார்ட்போன் விவரங்கள்

விபி-ஐ மேற்கோள் காட்டி 91 மொபைல்ஸ் தெரிவித்துள்ள அறிக்கையின்படி, நிறுவனம் 5ஜி இணைப்புக்கான ஆதரவுடன் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்வதற்கு தயாராக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ.15000-க்கு மேல் இருக்கும் என கூறப்படுகிறது. மேலும் மாதவ் ஷேத் பதிவிட்டுள்ள டுவிட் தகவல்களை பார்க்கலாம். அதில், நாட்டில் எந்த ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும் என ரசிகர்கள் நினைக்கிறார்கள்., ரியல்மி 9 அல்லது ரியல்மி 9 ப்ரோ. பொதுமக்களின் தேவை அறிந்து விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என டுவிட்டில் குறிப்பிட்டுள்ளார்.

ரியல் 9 ப்ரோ மற்றும் ரியல்மி 9 ப்ரோ+

ரியல் 9 ப்ரோ மற்றும் ரியல்மி 9 ப்ரோ+

அதேபோல் ஒரு நேர்காணலில், ஷேத் பிராண்டின் மற்ற இரண்டு ஸ்மார்ட்போன்களான ரியல் 9 ப்ரோ மற்றும் ரியல்மி 9 ப்ரோ+ ஆகியவை 5ஜி இணைப்புடன் அறிமுகப்படுத்தப்படும் என குறிப்பிட்டார். இந்த சாதனங்கள் கண்ணை கவரும் வடிவமைப்போடு வரும் என கூறப்படுகிறது. இந்த ரியல்மி 9 ஸ்மார்ட்போனானது ரூ.15,000 என்ற விலைப்பிரிவுடன் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரியல்மி 9 மற்றும் ரியல்மி 9 ப்ரோ விரைவில்

ரியல்மி 9 மற்றும் ரியல்மி 9 ப்ரோ விரைவில்

ரியல்மி 9 ஸ்மார்ட்போன் குறித்து வெளியான தகவல்களை பார்க்கலாம், ரியல்மி 9 மற்றும் ரியல்மி 9 ப்ரோ ஆகியவை சமீபத்தில் பிஐஎஸ் போன்ற சான்றிதழ் தரவுத்தளங்களில் காணப்பட்டன. இதன்மூலம் இந்த சாதனத்தின் குறிப்பிட்ட தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றன. ரியல்மி 9 ப்ரோ மற்றும் ரியல்மி 9 ப்ரோ+ ஸ்மார்ட்போன்கள் மீடியாடெக் டைமன்சிட்டி 810 மற்றும் டைமன்சிட்டி 920 செயலிகள் மூலம் இயக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

6.5 இன்ச் முழு எச்டி ப்ளஸ் டிஸ்ப்ளே வசதி

6.5 இன்ச் முழு எச்டி ப்ளஸ் டிஸ்ப்ளே வசதி

இதன் உயர்நிலை மாறுபாடாக இருக்கும் ரியல்மி 9 ப்ரோ+ ஸ்மார்ட்போனானது 6.5 இன்ச் முழு எச்டி ப்ளஸ் டிஸ்ப்ளே வசதியை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனானது 50 எம்பி பிரைமரி கேமரா சென்சார், 13 எம்பி இரண்டாம் நிலை கேமரா, 8 எம்பி மூன்றாம் நிலை கேமரா மற்றும் 2 எம்பி கேமரா என குவாட் ரியர் கேமரா அமைப்புடன் வருகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போனில் செல்பி வசதிக்கு என 16 மெகாபிக்சல் முன்புற கேமரா பொருத்தப்பட்டிருக்கிறது. சிக்யூசி தரவுத்தள பட்டியலின்படி, வரவிருக்கும் ரியல்மி ஸ்மார்ட்போனானது 5000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 65 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பத்தோடு வருகிறது. விரைவில் ரியல்மி 9 ஸ்மார்ட்போன் குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டிரிபிள் ரியர் கேமராக்கள், ஸ்னாப்டிராகன் 680 எஸ்ஓசி வசதி

டிரிபிள் ரியர் கேமராக்கள், ஸ்னாப்டிராகன் 680 எஸ்ஓசி வசதி

சமீபத்தில் ரியல்மி 9ஐ ஸ்மார்ட்போன் டிரிபிள் ரியர் கேமராக்கள், ஸ்னாப்டிராகன் 680 எஸ்ஓசி வசதியோடு இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. ரியல்மி 9ஐ ஸ்மார்ட்போன் டிரிபிள் ரியர் கேமராக்கள், ஸ்னாப்டிராகன் 680 எஸ்ஓசி வசதியோடு இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த ஸ்மார்ட்போனானது ரூ.13,999 என்ற ஆரம்ப விலையுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது 5000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 33 லாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவோடு வருகிறது. இந்த சாதனத்தி பூஜ்ஜியத்தில் இருந்து 100 சதவீதம் வரை 70 நிமிடங்களில் சார்ஜ் செய்யலாம். இந்த ஸ்மார்ட்போனை ஒருமுறை சார்ஜ் செய்தால் 48.4 மணி நேர பேச்சு நேரத்தையும், 995 மணி நேர காத்திருப்பு நேரத்தையும் வழங்குகிறது.

33 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு

33 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு

ரியல்மி 9ஐ ஸ்மார்ட்போனானது இந்தியாவில் செவ்வாய்க்கிழமை அறிமுகம் செய்யப்பட்டது. கடந்த ஆண்டு அறிமுகமான ரியல்மி 8ஐ ஸ்மார்ட்போனின் வாரிசாக இந்த புதிய ரியல்மி சாதனம் இருக்கிறது. ரியல்மி 9ஐ ஸ்மார்ட்போனானது ஆக்டோ கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 680 எஸ்ஓசி மற்றும் 33 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவோடு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனானது இரண்டு வேரியண்ட்களில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த சாதனம் இரட்டை ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் மற்றும் மூன்று பின்புற கேமராக்களுடன் வருகிறது. ரியல்மி 9ஐ ஸ்மார்ட்போனானது 90 ஹெர்ட்ஸ் டிஸ்ப்ளேவை கொண்டிருக்கிறது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Realme 9 Series India Launch has been Confirmed: Expected Specs, Price

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X