ரியல்மி 9 5ஜி, ரியல்மி 9 5ஜி எஸ்இ ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் அறிமுகம்.! விலை மற்றும் அம்சங்கள்.!
ரியல்மி 9 5ஜி, ரியல்மி 9 5ஜி எஸ்இ ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன்கள் தனித்துவமான அம்சங்களுடன் பட்ஜெட் விலையில் வெளிவந்துள்ளது. அதேபோல் இந்த சாதனங்கள் 5ஜி ஆதரவுடன் வெளிவந்துள்ளதால் அதிகளவில் விற்பனை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்போது ரியல்மி 9 5ஜி, ரியல்மி 9 5ஜி எஸ்இ ஸ்மார்ட்போன்களின் விலை மற்றும் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

ரியல்மி 9 5ஜி விலை
4ஜிபி ரேம் மற்றம் 64ஜிபி மெமரி கொண்ட ரியல்மி 9 5ஜி ஸ்மார்ட்போனின் விலை ரூ.14,999-ஆக உள்ளது. அதேபோல் இதன் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் விலை ரூ.17,499-ஆக உளளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் வரும் மார்ச் 14-ம் தேதி பிளிப்கார்ட், ரியல்மி.காம் போன்ற தளங்களில் விற்பனைக்கு வரும். அதேபோல் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த ஸ்மார்ட்போனை வாங்கினால் ரூ.1500 தள்ளுபடி கிடைக்கும். மேலும் Meteor Black மற்றும் Stargaze White நிறங்களில் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ரியல்மி 9 5ஜி அம்சங்கள்
- டிஸ்பிளே: 6.5-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே
- 1,080x2,400 பிக்சல்கள் தீர்மானம்
- 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்
- 600 நிட்ஸ் ப்ரைட்னஸ்
- சிப்செட்: மீடியாடெக் Dimensity 810 SoC
- Realme UI 2.0 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளம்
- ரேம்: 4ஜிபி/6ஜிபி
- மெமரி: 64ஜிபி/128ஜிபி
- மைக்ரோ எஸ்டி கார்டு ஆதரவு உள்ளது
- ரியர் கேமரா: 48எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி போர்ட்ரெயிட் சென்சார் + 2எம்பி மேக்ரோ கேமரா
- செல்பீ கேமரா: 16எம்பி கேமரா
- பேட்டரி: 5000 எம்ஏஎச் பேட்டரி
- 18 வாட் குவிக் சார்ஜ் ஆதரவு
- 5ஜி, 4ஜி எல்டிஇ, வைஃபை,
- புளூடூத் வி5.1, ஜிபிஎஸ்/ஏ-ஜிபிஎஸ்
- எடை : 188 கிராம்
- டிஸ்பிளே: 6.6-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே
- 1,080x2,400 பிக்சல் தீர்மானம்
- 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்
- 600 நிட்ஸ் ப்ரைட்னஸ்
- சிப்செட்: ஸ்னாப்டிராகன் 778ஜி சிப்செட்
- Realme UI 2.0 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளம்
- ரேம்:6ஜிபி/8ஜிபி
- மெமரி:128ஜிபி
- ரியர் கேமரா: 48எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி போர்ட்ரெயிட் சென்சார் + 2எம்பி மேக்ரோ கேமரா
- செல்பீ கேமரா: 16எம்பி கேமரா
- பேட்டரி: 5000 எம்ஏஎச்; பேட்டரி
- 30 வாட் குவிக் சார்ஜ் ஆதரவு
- 5ஜி, 4ஜி எல்டிஇ, வைஃபை,
- புளூடூத் வி5.2, ஜிபிஎஸ்/ஏ-ஜிபிஎஸ்
- எடை : 199 கிராம்

ரியல்மி 9 5ஜி எஸ்இ விலை
6ஜிபி ரேம் மற்றம் 128ஜிபி மெமரி வசதி கொண்ட ரியல்மி 9 5ஜி எஸ்இ ஸ்மார்ட்போனை ரூ.19,999-விலையில் வாங்க முடியும். பின்பு 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ரியல்மி 9 5ஜி எஸ்இ மாடலை ரூ.22,999-விலையில் வாங்க முடியும். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் வரும் மார்ச் 14-ம் தேதி பிளிப்கார்ட், ரியல்மி.காம் தளங்களில் விற்பனைக்கு வருகிறது. அதேபோல் தேர்வுசெய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த ஸ்மார்ட்போனை வாங்கும் பயனர்களுக்கு ரூ.2000 தள்ளுபடி கிடைக்கும். மேலும் Meteor Black மற்றும் Stargaze White நிறங்களில் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.



Click it and Unblock the Notifications