ஏப்.,7 அறிமுகமாகும் ரியல்மி 9 4ஜி- 108 எம்பி கேமரா உடன் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்: அம்சம் உச்சம்., விலை குறைவு!
ரியல்மி 9 4ஜி ஸ்மார்ட்போனானது இந்தியாவில் ஏப்ரல் 7 ஆம் தேதி அறிமுகப்படுத்த இருக்கிறது. ரியல்மியின் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனான ஜிடி 2 ப்ரோ அதே நாளில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் என தெரிவிக்கப்படுகிறது. புதிய ரியல்மி புக் லேப்டாப்-ம் இந்திய சந்தையில் ஏப்ரல் 7 ஆம் தேதி அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது.

ரியல்மி 9 4ஜி ஸ்மார்ட்போன்
நீண்ட காலமாக வெளியான தகவலுக்கு பிறகு இந்த ரியல்மி 9 4ஜி ஸ்மார்ட்போனின் வெளியீடு இறுதியாக உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. சிறந்த கேமராக்கள் உடன் சாதனம் வாங்க திட்டமிட்டிருந்தால் இது உங்களுக்கு சிறந்த தேர்வாக இருக்கும். ரியல்மி 9 4ஜி ஸ்மார்ட்போனானது 108 எம்பி பிரதான கேமரா உடன் வருகிறது. ரியல்மி 9 4ஜி ஸ்மார்ட்போனானது 9எக்ஸ் ஃபோக்சிங் துல்லியத்துடன் வரும் என ரியல்மி டுவிட்டில் தெரிவித்திருக்கிறது. ஆனால் ஃபோக்சிங் துல்லியம் என்றால் என்ன என்பது குறித்த தகவல் தெளிவாகத் தெரியவில்லை.

108 எம்பி கேமரா அம்சம்
முன்னதாக வெளியான ரியல்மி 8 ப்ரோ ஸ்மார்ட்போனிலும் இதே சென்சார் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. ரியல்மி 9 4ஜி ஸ்மார்ட்போனானது ரியல்மி 8 ப்ரோ போன்றே சந்தையில் சிறந்த வரவேற்பை பெறும் என தகவல்கள் தெரிவிக்கிறது. ரியல்மி 8 ப்ரோ ஸ்மார்ட்போனானது கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த ஸ்மார்ட்போனும் 108 எம்பி கேமரா உடன் வந்த ரியல்மி நிறுவனத்தின் முதல் ஸ்மார்ட்போனாக இருந்தது. ரியல்மி 8 ப்ரோ சிறந்த கேமராவை கொண்டிருந்தது. ரியல்மி 8 ப்ரோ ஸ்மார்ட்போன் பல்வேறு கேமரா பதிவு அம்சங்களை கொண்டிருந்தது. அதேபோல் ரியல்மி 9 4ஜி ஸ்மார்ட்போனும் சிறந்த கேமரா முறைகளை கொண்டிருக்கிறது.

16 எம்பி முன்புற செல்பி கேமரா
ரியல்மி 9 4ஜி ஸ்மார்ட்போனானது 16 எம்பி முன்புற செல்பி கேமரா அம்சங்களை கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரியல்மி 9 4ஜி ஸ்மார்ட்போனின் டிஸ்ப்ளேவில் ஒரு பஞ்ச் ஹோல் வடிவமைப்போடு இருக்கும் என கூறப்படுகிறது. மேலும் டிப்ஸ்டர் அபிஷேக் யாதவ் வெளியிட்ட தகவலின்படி, ரியல்மி 9 4ஜி ஸ்மார்ட்போன் போஸ்டரை டுவிட் செய்துள்ளார். ரியல்மி 9 4ஜி ஸ்மார்ட்போனில் 90 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீத காட்சியுடன் வரும் என கூறப்படுகிறது.

அமோலெட் டிஸ்ப்ளே வசதி
ரியல்மி 9 4ஜி ஸ்மார்ட்போன் அமோலெட் டிஸ்ப்ளே வசதியைக் கொண்டிருக்கும் எனவும் 360 ஹெர்ட்ஸ் டச் மாதிரி வீதத்தை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இதன்மூலம் இந்த சாதனத்தில் கேம்கள் விளையாடும் போது மென்மையான அனுபவத்தை வழங்கும் என கூறப்படுகிறது. ரியல்மி 9 4ஜி ஸ்மார்ட்போன் அமோலெட் டிஸ்ப்ளே மற்றும் 1000 நிட்ஸ் உச்ச பிரகாசம் கொண்டிருக்கும் எனவும் பாதுகாப்பு அம்சத்துக்கு டிஸ்ப்ளே கைரேகை ஸ்கேனர் வசதி இடம்பெறும் என கூறப்படுகிறது.

பிற அம்சங்கள் குறித்த விவரங்கள்
ரியல்மி 9 4ஜி ஸ்மார்ட்போனில் 108 எம்பி ஐசோசெல் எச்எம்6 இமேஜிங் சென்சார் ஆதரவோடு வருகிறது. இந்த கேமரா சென்சார் சாம்சங் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது. வரவிருக்கும் ரியல்மி 9 4ஜி ஸ்மார்ட்போனின் பிற அம்சங்களை நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. மேலும் இந்த ஸ்மார்ட்போனானது இடைநிலை பிரிவில் வரும் என கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனானது ரூ.20,000-க்கு குறைவான விலையில் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏப்ரல் 7 ஆம் தேதி அறிமுகம்
ரியல்மி 9 4ஜி ஸ்மார்ட்போனானது ஹாலோகிராபிக் வடிவமைப்பைக் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் ரியல்மி 9 4ஜி ஸ்மார்ட்போனானது சன்பர்ஸ்ட் கோல்ட், ஸ்டார்கேஜ் வைட் மற்றும் மெட்டாய்ர் பிளாக் வண்ண விருப்பத்தோடு வருகிறது. ரியல்மி 9 4ஜி ஸ்மார்ட்போனானது 108 எம்பி கேமரா இடம்பெறும் எனவும் 120 வியூ ஃபீல்ட் மேக்ரோ சென்சார் கொண்ட சூப்பர் வைட் ஆங்கிள் சென்சார் கொண்டிருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. ரியல்மி 9 4ஜி ஸ்மார்ட்போனானது ஏப்ரல் 7 ஆம் தேதி வெளியாகும் எனவும் இந்த நிகழ்வு ஏப்ரல் 7 ஆம் தேதி இந்தியாவில் மதியம் 12:30 மணிக்கு நடக்கும் எனவும் அதிகாரப்பூர்வ ரியல்மி சமூகவலைதளத்தில் நேரலை பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications