Home
Mobile

108எம்பி கேமராவுடன் விரைவில் அறிமுகமாகும் ரியல்மி 9 4ஜி ஸ்மார்ட்போன்.! முழு விவரம்.!

ரியல்மி நிறுவனம் விரைவில் புதிய ரியல்மி 9 4ஜி ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்ய உள்ளது. குறிப்பாக இந்த புதிய ரியல்மி 4ஜி ஸ்மார்ட்போன் ஆனது 108எம்பி கேமரா ஆதரவுடன் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. மேலும் இப்போது ஆன்லைனில் கசிந்த ரியல்மி 9 4ஜி ஸ்மார்ட்போனின் அம்சங்களை பார்ப்போம்.

ரியல்மி 9 4ஜி

ரியல்மி 9 4ஜி ஸ்மார்ட்போனில் மீடியாடெக் Dimensity சிப்செட் வசதி இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு இது ஆண்ட்ராய்டு 12இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ரியல்மி 9 4ஜி ஸ்மார்ட்போனின் பின்புறம் 108எம்பி கேம

ரியல்மி 9 4ஜி ஸ்மார்ட்போனின் பின்புறம் 108எம்பி கேமரா உட்பட மொத்தம் நான்கு கேமராக்கள் இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமரா ஆதரவுடன் இந்த புதிய ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். அதேபோல் இந்தபுதிய ஸ்மார்ட்போன் ரூ.15,000-க்கு கீழ் அறிமுகம் செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

ரியல்மி 9 4ஜி ஸ்மார்ட்போனில் 6ஜிபி/8ஜிபி ரேம்

ரியல்மி 9 4ஜி ஸ்மார்ட்போனில் 6ஜிபி/8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு கூடுதலாக மெமரிநீட்டிப்பு ஆதரவுடன் இந்த புதிய ஸ்மார்ட்போன் வெளிவரும். அதாவது மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் கொடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் கருப்பு, வெள்ளை, தங்க நிறங்களில் இந்த புதிய ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் இந்நிறுவனம் ஏற்கனவே அறிமுகம் செய்த ரியல்மி நார்சோ 50ஏ பிரைம் ஸ்மார்ட்போனின் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

ரியல்மி நார்சோ 50ஏ பிரைம்

ரியல்மி நார்சோ 50ஏ பிரைம்

ரியல்மி நார்சோ 50ஏ பிரைம் ஸ்மார்ட்போன் ஆனது 6.6-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளது. மேலும் 2,408x1,080 பிக்சல் தீர்மானம், 600 நிட்ஸ் ப்ரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு இந்த புதிய ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

 50ஏ பிரைம் ஸ்மார்ட்போனில்

ரியல்மி நார்சோ 50ஏ பிரைம் ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் Unisoc T612 சிப்செட் வசதி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும். குறிப்பாக Realme UI R Edition சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த புதிய ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

 புதிய ஸ்மார்ட்போனில் 4ஜிபி ரேம் மற்றும்

இந்த புதிய ஸ்மார்ட்போனில் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி உள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டு இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்துவதற்கு ஒரு ஸ்லாட் கொடுக்கப்பட்டுள்ளது. ரியல்மி நார்சோ 50ஏ பிரைம் ஸ்மார்ட்போனின் பின்புறம் 50எம்பி பிரைமரி சென்சார் + 2எம்பி மோனோக்ரோம் சென்சார் + 2எம்பி போர்ட்ரெயிட் சென்சார்என மொத்தம் மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. பின்பு செல்பீகளுக்கும், விடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமரா ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். அதேபோல் எல்இடி பிளாஷ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இவற்றுள் அடக்கம்.

50ஏ பிரைம் ஸ்மார்ட்போனில்

ரியல்மி நார்சோ 50ஏ பிரைம் ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே நீண்ட நேரம் கேம் விளையாட முடியும். பின்பு 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி, கைரேகை ஸ்கேனர் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன். 4ஜி வோல்ட்இ, வைஃபை, புளூடூத் 5.0, ஜிபிஎஸ், 3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த ரியல்மி நார்சோ 50ஏ பிரைம் ஸ்மார்ட்போன் மாடல்.

Best Mobiles in India

English summary
Realme 9 4G May Launching Soon in India: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X