Home
Mobile

இன்று விற்பனைக்கு வரும் ரியல்மி 8எஸ் 5ஜி ஸ்மார்ட்போன்.! விலை மற்றும் விவரங்கள்.!

ரியல்மி நிறுவனத்தின் புதிய ரியல்மி 8எஸ் 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது இன்று பிளிப்கார்ட் மற்றும் ரியல்மி.காம் வலைத்தளத்தில் விற்பனைக்கு வருகிறது. குறிப்பாக இந்த புதிய சாதனம் 64எம்பி கேமரா, Dimensity சிப்செட்,5000 எம்ஏஎச் பேட்டரி உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது.

128ஜிபி மெமரி கொண்ட

6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ரியல்மி 8எஸ் 5ஜி ஸ்மார்ட்போனின் விலை ரூ.17,999-ஆக உள்ளது. பின்பு 8ஜிபி
ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ரியல்மி 8எஸ் 5ஜி மாடலின் விலை ரூ.19,999-ஆக உள்ளது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த சாதனத்தை வாங்கும் பயனர்களுக்கு ரூ.1500 வரை தள்ளுபடி கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்போது இந்த சாதனத்தின் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

6.5-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே

6.5-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே

ரியல்மி 8எஸ் 5ஜி ஸ்மார்ட்போன் 6.5-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 1,080x2,400 பிக்சல் தீர்மானம் மற்றும் 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் வெளிவந்துள்ளது ரியல்மி 8எஸ் 5ஜி. மேலும் இதன் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

ரியல்மி 8எஸ் 5ஜி ஸ்மார்ட்போன்

ரியல்மி 8எஸ் 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது ஆக்டோ-கோர் மீடியாடெக் Dimensity 810 சிப்செட் வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது. மேலும் Realme UI 2.0 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த சாதனம் வெளிவந்துள்ளது. எனவே பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

 6ஜிபி/8ஜிபி ரேம்

இந்த புதிய ஸ்மார்ட்போனில் 6ஜிபி/8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி உள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவைக் கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் கொடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் Universe Blue மற்றும் Universe Purple நிறங்களில் இந்த புதிய சாதனம் வெளிவந்துள்ளது.

5ஜி சாதனத்தின் பின்புறம் 64எம்பி

ரியல்மி 8எஸ் 5ஜி சாதனத்தின் பின்புறம் 64எம்பி பிரைமரி சென்சார் + 2எம்பி monochrome portrait சென்சார் + 2எம்பி மேக்ரோ லென்ஸ் என மொத்தம் மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி செல்பீ கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

5000 எம்ஏஎச் பேட்டரி

ரியல்மி 8எஸ் 5ஜி ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. பின்பு 33 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, கைரேகை சென்சார் உட்பட பல்வேறு சிறப்பான அம்சங்களுடன் இந்த அட்டகாசமான ரியல்மி 8எஸ் 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.

 5ஜி ஸ்மார்ட்போனில் 5ஜி, 4ஜி

ரியல்மி 8எஸ் 5ஜி ஸ்மார்ட்போனில் 5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை 802.11ஏசி,ப்ளூடூத் வி5.1, ஜிபிஎஸ்/ஏ-ஜிபிஎஸ்,யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன். குறிப்பாக கேமிங் உட்பட பல்வேறு
வசதிகளுக்கு இந்த புதிய ஸ்மார்ட்போன் அருமையாக உதவும் என்றே கூறலாம்.

Best Mobiles in India

English summary
Realme 8s 5G Sale Starts Today in India: Price, Offers and More: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X