Home
Mobile

செப்டம்பர் 9: இந்தியாவில் களமிறங்கும் ரியல்மி 8எஸ் 5ஜி, ரியல்மி 8ஐ ஸ்மார்ட்போன்கள்.!

ரியல்மி 8எஸ் 5ஜி, ரியல்மி 8ஐ ஸ்மார்ட்போன்கள் செப்டம்பர் 9-ம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் எனத் தகவல் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களும் சிறப்பான அம்சங்களுடன் பட்ஜெட் விலையில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் களமிறங்கும் ரியல்மி 8எஸ் 5ஜி, ரியல்மி 8ஐ ஸ்மார்ட்போன்கள்.!

ரியல்மி 8எஸ் 5ஜி, ரியல்மி 8ஐ ஸ்மார்ட்போன்கள் 5000 எம்ஏஎச் பேட்டரி வசதியுடன் வெளிவரும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சாதனத்துடன் ரியல்மி பேட் சாதனமும் அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது. மேலும் ஏற்கனவே ஆன்லைனில்
கசிந்த ரியல்மி 8எஸ் 5ஜி, ரியல்மி 8ஐ ஸ்மார்ட்போன்களின் அமசங்களைப் பார்ப்போம்.

ரியல்மி 8எஸ் 5ஜி
ரியல்மி 8எஸ் 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது மீடியாடெக் டைமென்சிட்டி 810 சிப்செட் வசதியுடன் வெளிவரும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த சிப்செட் வசதி கேமிங் உட்பட பல்வேறு வசதிகளுக்கு பயன்படுத்த அருமையாக இருக்கும். மேலும் ரியல்மி 8எஸ் ஸ்மார்ட்போன் 6.5-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு
90ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த புதிய ரியல்மி 8எஸ் ஸ்மார்ட்போன் வெளிவரும்.

ரியல்மி 8எஸ் ஸ்மார்ட்போனின் பின்புறம் 64எம்பி பிரைமரி கேமரா உட்பட மொத்தம் மூன்று கேமராக்கள் இடம்பெறும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக அல்ட்ரா வைடு லென்ஸ் மற்றும் டெப்த் சென்சார் ஆதரவுடன் இந்த அசத்தலான ரியல்மி 8எஸ் ஸ்மார்ட்போன் வெளிவரும். மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி செல்பீ கேமரா ஆதரவு கொண்டுள்ளது இந்த ரியல்மி 8எஸ் ஸ்மார்ட்போன். குறிப்பாக இந்த சாதனத்தின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

இந்தியாவில் களமிறங்கும் ரியல்மி 8எஸ் 5ஜி, ரியல்மி 8ஐ ஸ்மார்ட்போன்கள்.!

ரியல்மி 8எஸ் ஸ்மார்ட்போன் ஆனது Realme UI 2.0 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ரியல்மி 8எஸ் ஸ்மார்ட்போனில் 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி உள்ளடக்க மெமரி வசதி உள்ளதாக கூறப்படுகிறது. ரியல்மி 8எஸ் ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. அதேபோல் 33 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி, கைரேகை ஸ்கேனர் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன்.

இந்தியாவில் களமிறங்கும் ரியல்மி 8எஸ் 5ஜி, ரியல்மி 8ஐ ஸ்மார்ட்போன்கள்.!

ரியல்மி 8ஐ
ரியல்மி 8ஐ ஸ்மாரட்போன் ஆனது 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதியுடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை
பயன்படுத்த ஒரு ஸ்லாட் கொடுக்கப்பட்டுள்ளது.

ரியல்மி 8ஐ ஸ்மார்ட்போனின் பின்புறம் 50எம்பி பிரைமரி சென்சார் + 2எம்பி எம்பி டெப்த் சென்சார் + 2எம்பி மேக்ரோ லென்ஸ் என மொத்தம் மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி செல்பீ கேமராவை கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன்.

கடந்த வாரம் டிப்ஸ்டர் ஸ்டீவ் ஹெமர்ஸ்டாஃபர் வெளியிட்ட தகவலின் படி, Realme 8i சாதனம் 6.59' இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்ப்ளே மற்றும் 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்துடன் வெளிவரும். அதேபோல் 5000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ள இந்த அசத்தலான ரியல்மி 8ஐ ஸ்மார்ட்போன்.

இந்தியாவில் களமிறங்கும் ரியல்மி 8எஸ் 5ஜி, ரியல்மி 8ஐ ஸ்மார்ட்போன்கள்.!

இந்த புதிய ரியல்மி 8ஐ ஸ்மார்ட்போனில் மீடியாடெக் சிப்செட் வசதி உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு பதிலாக ஸ்னாப்டிராகன் சிப்செட் வசதி இருந்தால் இன்னும் அருமையாக இருக்கும். மேலும் ரியல்மி 8ஐ மற்றும் ரியல்மி 8எஸ் ஸ்மார்ட்போன்கள் இந்திய சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. அதேபோல் இந்த சாதனங்கள் பட்ஜெட் விலையில் வெளிவரும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Realme 8s 5G, Realme 8i with 5,000mAh Battery Launching in India on September 9: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X