108 எம்பி கேமராவுடன் வெளிவர தயாராகும் ரியல்மி 8 ஸ்மார்ட்போன்.. சுவாரசியமான டீசர் தகவல்..

|

ரியல்மி 7 அறிவிக்கப்பட்ட ஐந்து மாதங்களுக்குள், நிறுவனம் இப்போது அதன் வாரிசான ரியல்மி 8 தொடரை டீஸ் செய்யத் தொடங்கியது. ரியல்மி 8 தொடரில் ரியல்மி 8 மற்றும் ரியல்மி 8 ப்ரோ ஆகிய ஸ்மார்ட்போன்களை நாம் இந்தியாவில் எதிர்பார்க்கலாம் என்று தெரிகிறது.

ரியல்மி 8 ஸ்மார்ட்போன்

ரியல்மி 8 ஸ்மார்ட்போன் பற்றிய இந்தியா டீசரை ட்விட்டரில் ரியல்மி தலைவர் மாதவ் ஷெத் பதிவிட்டுள்ளார். ரியல்மி பட்ஸ் ஏர் 2 உடன் இணைந்து நாட்டில் நார்சோ 30 ப்ரோ மற்றும் நார்சோ 30 ஏ ஸ்மார்ட்போன்களை நிறுவனம் சமீபத்தில் தான் அறிமுகம் செய்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. ரியல்மி 8 ஸ்மார்ட்போன் 108 எம்.பி கேமராவுடன் வெளிவரலாம் என்று கருதப்படுகிறது.

108 மெகா பிக்சல் கேமரா

மற்றொரு புறம் டாப்-எண்ட் ரியல்மி 8 ப்ரோ ஸ்மார்ட்போனில் இந்த 108 மெகா பிக்சல் கேமரா சென்சார் பொருத்தப்பட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இந்த ட்வீட்டில் ரியல்மி 8 ஐ சரியாக குறிப்பிடவில்லை, ஆனால் அதில் #InfiniteLeapWith8 என்று குறிப்பிட்டு 108 என்கிற ரகசிய படத்துடன் டீசர் 108 எம்.பி சென்சாரைக் குறிக்கிறது. அந்த ட்வீட்டில் "108 என்றால் என்ன என்று உங்களுக்குத் தெரியுமா?" என்று கேட்கப்பட்டுள்ளது.

பிஎஸ்என்எல் ரூ.47 திட்டம் அறிமுகம்: 28 நாட்கள் வேலிடிட்டி.! என்னென்ன நன்மைகள் தெரியுமா?பிஎஸ்என்எல் ரூ.47 திட்டம் அறிமுகம்: 28 நாட்கள் வேலிடிட்டி.! என்னென்ன நன்மைகள் தெரியுமா?

ரியல்மி 8

அவரது ட்வீட்டின் படி, ரியல்மி 8 பற்றிய கூடுதல் விவரங்கள் நாளை வெளிப்படும் என்று தெரிகிறது. வரவிருக்கும் ரியல்மி 8 தொடர்களைப் பற்றி மேலும் அறிய நாளை வரை நாம் காத்திருக்க வேண்டும். அதேபோல், சமீபத்திய கீக்பெஞ்ச் பட்டியலிலும் ரியல்மி 8 சாதனம் RMX3092 என்ற மாடல் எண்ணுடன் காணப்பட்டுள்ளது.

மீடியாடெக் டைமன்சிட்டி 720 ஆக்டா கோர்

இதில், இந்த போன் மீடியாடெக் டைமன்சிட்டி 720 ஆக்டா கோர் சிப்செட் மூலம் இயக்கப்படும் என்றும், இது 8 ஜிபி ரேம் உடன் இணைக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த சாதனம் ஆண்ட்ராய்டு 11 இல் இயங்கக்கூடிய ரியல்மி யுஐ 2.0 உடன் வெளிவரும். மேலும் இதில் 65W பாஸ்ட் சார்ஜிங்கை கொண்டிக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Realme 8 with 108MP camera teased to launch in India: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X