ரியல்மி 8 ஸ்மார்ட்போன் டைமன்சிட்டி 720 மூலம் இயக்கப்படும் என தகவல்!
ரியல்மி 8 ஸ்மார்ட்போனானது விரைவில் வெளியாகும் எனவும் இது டைமன்சிட்டி 720 மூலம் இயக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

ரியல்மி புதிய சாதனம்
ரியல்மியின் புதிய சாதனம் கீக்பெஞ்சில் மாதிரி எண் ஆர்எம்எக்ஸ்3092 என்ற எண் உடன் பட்டியலிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனிற்கு ரியல்மி 8 என பெயரிடப்படலாம் என தெரிவிக்கப்படுகிறது. இது ரியல்மி 7 இன் வாரிசாக இருக்கலாம் என கூறப்படுகிறது.

5ஜி ஆதரவுடன் வெளியாகும்
இதுகுறித்து டிப்ஸ்டரின் முகுல்சர்மா மற்றும் அபிஷேக் யாதவ் இருவரும் வெளியிட்ட தகவல்களில் மாடல் எண்ணானது ரியல்மி 8 உடன் ஒத்துப்போகிறது. கீக்பெஞ்ச் பட்டியலில் இதுகுறித்த தகவல் குறைவாகவே இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனானது 5ஜி இணைப்புடன் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மீடியாடெக் டைமன்சிட்டி 720 ஆக்டோ கோர்
இந்த சாதனம் குறித்து வெளியான தகவலின்படி இது மீடியாடெக் டைமன்சிட்டி 720 ஆக்டோ கோர் செயலி மூலம் இயக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் 8ஜிபி ரேம் கொண்டிருக்கும் எனவும் ஆண்ட்ராய்டு 10 மூலம் இயக்கப்படும் எனவும் தெரிகிறது.

65 வாட்ஸ் வேகமான சார்ஜிங்
ரியல்மி 8 ஸ்மார்ட்போன் 65 வாட்ஸ் வேகமான சார்ஜிங் ஆதரவை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இந்த சாதனம் குறித்த தகவல் தற்போதுவரை வெளியாகவில்லை. இருப்பினும் இந்த ஸ்மார்ட்போன் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரியல்மி ஸ்மார்ட்போன் 7
முன்னதாக வெளியான ரியல்மி ஸ்மார்ட்போனானது 7 6.5 அங்குல முழு எச்டி+ எல்சிடி டிஸ்ப்ளே, ஆக்டோகோர் மீடியாடெக் ஹீலியோ ஜி95 செயலி மூலம் இயக்கப்படும் என தெரிகிறது. இதில் 64 மெகாபிக்சல் பிரதான கேமரா, 8 மெகாபிக்சல் இரண்டாம் நிலை கேமரா மற்றும் இரட்டை 2 மெகாபிக்சல் கேமரா கொண்டுள்ளது. மேலும் செல்பி வசதிக்கென முன்பக்கத்தில் 16 மெகாபிக்சல் கேமரா பொருத்தப்பட்டுள்ளது.
File Images
Source: themobileindian.com


Click it and Unblock the Notifications