ரியல்மி 8 சீரிஸ் ஸ்மார்ட்போன் குறித்து வெளியான தகவல்: மார்ச் 24 அறிமுகமா?
ரியல்மி 8 சீரிஸ் ஸ்மார்ட்போன் மார்ச் 24 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகமாகும் என கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் குறித்து வெளியான தகவல்களை பார்க்கலாம். ரியல்மி 8 ஸ்மார்ட்போன் 6.4 இன்ச் சூப்பர் அமோலெட் டிஸ்ப்ளே இருக்கும் எனவும் இந்த ரியல்மி 8 தொடரில் ரியல்மி 8 மற்றும் ரியல்மி 8 ப்ரோ ஸ்மார்ட்போன் இடம்பெறும் என தகவல் தெரிவிக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனின் வெளியீட்டு தேதி குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

டுவிட்டர் பயனரான டெபயன் ராய் தகவலின்படி, ரியல்மி 8 ஸ்மார்போன் மார்ச் 24 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகமாகும் என தெரிவிக்கப்படுகிறது. இதுகுறித்த முந்தைய அறிக்கையின்படி ரியல்மி விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடும் என தெரிவிக்கப்படுகிறது.
ரியல்மி 8 மற்றும் ரியல்மி 8 ப்ரோ ஸ்மார்ட்போன் அமோலெட் டிஸ்ப்ளே இடம்பெறும் எனவும் மார்ச் 15 ஆம் தேதி இங்கிலாந்தில் அறிமுகமாகும் எனவும் கூறப்படுகிறது. ரியல்மி தலைமை நிர்வாக அதிகாரி மாதவ் ஷேத் ரியல்மி 8 தொடரின் பின்புற பேனல் குறித்த டீஸ் செய்துள்ளார். வரவிருக்கும் ஸ்மார்ட்போனின் பின்புற பேனலின் ஒளிரும் வண்ண விருப்பத்தை கொண்டிருக்கும் எனவும் இது டேர் டு லீப் லோகோவுடன் கொண்டிருக்கும் எனவும் காணப்படுகிறது.
இதுகுறித்த முந்தை கசிவின்படி ரியல்மி 8 இரண்டு வகைகளில் வரும் எனவும் 4ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு, 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்சேமிப்பை கொண்டிருக்கும் எனவும் கூறப்படுகிறது. இது சைபர் சில்வர் மற்றும் சைபர் பிளாக் வண்ண விருப்பங்களில் வருகிறது.

ரியல்மி 8 ப்ரோ ஸ்மார்ட்போன் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்சேமிப்பு, 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்சேமிப்பு ஆகிய வேரியண்ட்களில் கிடைக்கும் எனவும் இது கருப்பு, ப்ளூ, மற்றும் ஒளிரும் மஞ்சள் ஆகிய வண்ண விருப்பங்களில் கிடைக்கும் எனவும் கூறப்படுகிறது.
சமீபத்தில் ரியல்மி தலைமை நிர்வாக அதிகாரி மாதவ் ஷேத் ரியல்மி 8 பெட்டியை பகிர்ந்திருந்தார். இது 6.4 இன்ச் சூப்பர் அமோலெட் டிஸ்ப்ளே, ஆண்ட்ராய்டு 11 ஆதரவு ஆகியவைகளுடன் இயங்கும் என கூறப்படுகிறது.
ரியல்மே 8 ஸ்மார்ட்போனானது 64 எம்.பி குவாட்-கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. இது சதுர வடிவ கேமரா, இரட்டை எல்இடி பிளாஷ் கொண்டிருக்கும் எனவும் இதில் மீடியாடெக் ஹீலியோ ஜி95 கேமிங் செயலி பொருத்தப்பட்டிருக்கும் எனவும் கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் 5000 எம்ஏஎச் பேட்டரி மூலம் இயக்கப்படும் எனவும் இது 30 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவை கொண்டிருக்கும் எனவும் கூறப்படுகிறது.
ரியல்மி 8 ஸ்மார்ட்போன் 4ஜிபி ரேம், 6 ஜிபி ரேம் என்ற இரண்டு வேரியண்டிலும், 64 ஜிபி 128 ஜிபி ஆகிய இரண்டு ஸ்டோரேஜ் வகைகளில் கிடைக்கும் எனவும் கூறப்படுகிறது. ரியல்மி 8 ப்ரோ 108 எம்பி முதன்மை கேமரா பொருத்தப்பட்டிருக்கும், இந்த ஸ்மார்ட்போன் 4500 எம்ஏஎச் பேட்டரி ஆகியவற்றுடன் 65 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் வரும் எனவும் கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 720ஜி எஸ்ஓசி மூலம் இயக்கப்படும், 6ஜிபி, 8ஜிபி ரேம் ஆகிய வசதியுடன் வரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. ரியல்மி 8 ப்ரோ பாதுகாப்பு அம்சத்திற்கு இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சாருடன் வரும் என கூறப்படுகிறது.

சமீபத்தில் ரியல்மி நிறுவனம் நார்சோ 30 ப்ரோ 5ஜி மற்றும் ரியல்மி 30ஏ ஆகிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து விற்பனைக்கு வந்தது. இது 6.5 இன்ச் முழு எச்டி ப்ளஸ் டிஸ்ப்ளே, 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்ப வீதம் ஆகியவை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் பஞ்ச் ஹோல் வடிவமைப்போடு வருகிறது. எல்பிடிடிஆர் 4 எக்ஸ் ரேம் ஆக்டோ கோர் மீடியாடெக் 800 யூஎஸ்ஓசி மூலம் இயக்கப்படுகிறு. இரட்டை நானோ சிம்கார்டு ஸ்லாட் இதில் இருக்கிறது. ஆண்ட்ராய்டு 10 ஆதரவோடு இந்த ஸ்மார்ட்போன் வருகிறது.
ரியல்மி மூன்று பின்புற கேமராக்களுடன் வருகிறது. 48 எம்பி முதன்மை கேமரா, 8 எம்பி இரண்டாம் நிலை கேமரா, 2 எம்பி மூன்றாம் நிலை கேமராக்கள் இருக்கிறது. முன்பக்கத்தில் 16 எம்பி செல்பி கேமரா பொருத்தப்பட்டுள்ளது.
ரியல்மி நார்சோ 30 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனில் 128 ஜிபி வரை மெமரி விரிவாக்க வசதி இருக்கிறது. இதில் மெமரி விரிவாக்க வசதிக்கு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 5000 எம்ஏஎச் பேட்டரி 30 வாட்ஸ் டார்ட் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு ஆகியவை உள்ளது. சாதனத்தின் பக்கவாட்டில் பாதுகாப்பு அம்சத்திற்காக கைரேகை சென்சார் பொருத்தப்பட்டுள்ளது.
ரியல்மி நார்சோ 30 ப்ரோ இணைப்பு விருப்பங்கள் குறித்து பார்க்கையில், 4ஜி எல்டிஇ, யூஎஸ்பி டைப்சி போர்ட் ஆகியவை இருக்கிறது. இந்தியாவில் கிடைக்கும் குறைந்த விலை 5ஜி ஸ்மார்ட்போனில் இது ஒன்றாகும்.


Click it and Unblock the Notifications