ரியல்மி 8 சீரிஸ் 5ஜி அறிமுகம் உறுதி: அதுவும் விரைவில்., அம்சங்கள் சும்மா அல்லுது!

|

ரியல்மி 8 5ஜி மற்றும் ரியல்மி 8 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன்கள் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என உறுதி செய்யப்பட்டுள்ளது. ரியல்மி 8 5ஜி ஸ்மார்ட்போனானது ஆண்ட்ராய்டு 11 மற்றும் 5000 எம்ஏஎச் பேட்டரி உடன் வரும் என கூறப்படுகிறது.

ரியல்மி 8 மற்றும் ரியல்மி 8 ப்ரோ

ரியல்மி 8 மற்றும் ரியல்மி 8 ப்ரோ

ரியல்மி 8 மற்றும் ரியல்மி 8 ப்ரோ ஸ்மார்ட்போன்களை நிறுவனம் சமீபத்தில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. இதன் ரியல்மி 8 சீரிஸ் 5ஜி மாடல்கள் வேரியண்ட் இந்தியாவில் விரைவில் அறிமுகம் செய்யப்படும் என ரியல்மி இந்தியா மற்றும் ஐரோப்பாவின் தலைமை நிர்வாக அதிகாரியான மாதவ் ஷெத் உறுதிப்படுத்தியுள்ளார்.

ரியல்மி இந்தியாவின் அதிகாரப்பூர்வ கணக்கு

ரியல்மி இந்தியாவின் அதிகாரப்பூர்வ கணக்கு

இதுகுறித்து ரியல்மி இந்தியாவின் அதிகாரப்பூர்வ கணக்கில் தெரிவித்த தகவல்களை பார்க்கலாம். அதில் ரியல்மி நிறுவனம் 5ஜி வேரியண்ட்களை மிக விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யும் என உறுதிப்படுத்தியுள்ளது. இருப்பினும் 5ஜி மாடல்களில் சரியான வெளியீட்டு தேதியை நிறுவனம் இன்னும் உறுதிப்படுத்தவில்லை. இதுகுறித்து பயனர் டுவிட்டுக்கு பதிலளித்த, ரியல்மி இந்தியா வாடிக்கையாளர் பராமரிப்பு நிறுவனம், ரியல்மி 8 ப்ரோ மற்றும் ரியல்மி 8 ப்ரோ 5ஜி ஆகியவற்றை விரைவில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது என தெரிவித்துள்ளது.

ரியல்மி 8 5ஜி ஸ்மார்ட்போன்கள்

ரியல்மி 8 5ஜி ஸ்மார்ட்போன்கள்

ரியல்மி 8 5ஜி நிறுவனம் சமீபத்தில் உள்ள ஃபெடரல் கம்யூனிகேஷன் கமிஷனின் ஒப்புதலை பெற்றது. இந்த ஸ்மார்ட்போன் 5000 எம்ஏஎச் பேட்டரி மூலம் இயக்கப்படும். இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 11 அடிப்படையிலான ரியல்மி யூஐ 2.0 தளத்தில் இயங்கும் என கூறப்படுகிறது. ரியல்மி நிறுவனம் அறிமுகம் செய்யும் ரியல்மி 8 5ஜி மற்றும் ரியல்மி 8 ப்ரோ 5ஜி சாதனத்தின் எடை 185 கிராம் ஆக இருக்கும் என தெரியப்படுத்தியுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 5ஜி, வைஃபை, ஜிபிஎஸ்,. க்ளோனாஸ் போன்ற இணைப்பு அம்சத்தை குறிக்கிறது. பாதுகாப்பு அம்சத்திற்கு பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை ஸ்கேனர் வசதி இருக்கிறது.

மீடியா டெக் ஹீலியோ ஜி95 சிப்

மீடியா டெக் ஹீலியோ ஜி95 சிப்

ரியல்மி 8 5ஜி ஸ்மார்ட்போன் முன்னதாக மாதிரி எண் RMX3241 உடன் வருகிறது. ரியல்மி 8 5ஜி சாதனமானது மீடியா டெக் ஹீலியோ ஜி95 சிப் மூலம் இயக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 720ஜி சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. ரியல்மி 8 ப்ரோ 4ஜி வேரியண்ட்களின் விலை குறித்து பார்க்கையில், இது இரண்டு வேரியண்ட்களில் வருகிறது. ரியல்மி சாதனமானது 6ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி வேரியண்ட் விலை ரூ.17,999 ஆகவும் 8ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் விலை ரூ.19,999 ஆக இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் கருப்பு மற்றும் ப்ளூ வண்ண விருப்பங்களில் கிடைக்கிறது.

ரியல்மி 8 ப்ரோ அம்சங்கள்

ரியல்மி 8 ப்ரோ அம்சங்கள்

 • டிஸ்பிளே: 6.4-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் Super AMOLED டிஸ்பிளே (1,080x2,400 பிக்சல்கள்)
 • 180 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட்
 • 90.8 சதவிகிதம் ஸ்க்ரீன் டூ பாடி விகிதம்
 • 1,000 nits பிரைட்நஸ் வசதி
 • சிப்செட்: குவால்காம் ஸ்னாப்டிராகன் 720ஜி சிப்செட்
 • ரேம்: 6ஜிபி/8ஜிபி
 • மெமரி: 128ஜிபி
 • ரியர் கேமரா: 108எம்பி பிரைமரி சென்சார் +8எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ் + 2எம்பி மேக்ரோ லென்ஸ் + 2எம்பி பிளாக் அண்ட் ஒயிட் சென்சார்
 • செல்பீ கேமரா: 16எம்பி சோனி ஐஎம்எக்ஸ் 471 செல்பீ கேமரா
 • பேட்டரி: 4500 எம்ஏஎச் பேட்டரி
 • 50 வாட் சூப்பர் டார்ட் சார்ஜ் பாஸ்ட் சார்ஜிங் வசதி
 • இன்-டிஸ்ப்ளே கைரேகை ஸ்கேனர்
 • டூயல் பேண்ட் வைஃபை, 4 ஜி, ப்ளூடூத் வி 5.0,
 • ஜிபிஎஸ், 3.5 மிமீ ஹெட்ஃபோன் ஜாக்
 • யூ.எஸ்.பி டைப்-சி போர்ட்
 • இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 11
 • எடை: 176 கிராம்
 • நிறம்: கருப்பு மற்றும் நீல நிறங்களில் கிடைக்கும்
 • ரியல்மி 8 அம்சங்கள்

  ரியல்மி 8 அம்சங்கள்

  • டிஸ்பிளே: 6.4-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் Super AMOLED டிஸ்பிளே (1,080x 2,400 பிக்சல்கள்)
  • 180 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட்
  • 90.8 சதவிகிதம் ஸ்க்ரீன் டூ பாடி விகிதம்
  • 1,000 nits பிரைட்நஸ் வசதி
  • சிப்செட்: ஆக்டா கோர் மீடியா டெக் ஹீலியோ ஜி 95 சிப்செட்
  • ரேம்: 4ஜிபி/6ஜிபி/8ஜிபி
  • மெமரி: 128ஜிபி
  • ரியர் கேமரா: 64எம்பி பிரைமரி சென்சார் + 8எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ் + 2எம்பி மேக்ரோ லென்ஸ் + 2எம்பி பிளாக் அண்ட் ஒயிட் சென்சார்
  • செல்பீ கேமரா: 16எம்பி சோனி ஐஎம்எக்ஸ் 471 செல்பீ கேமரா
  • பேட்டரி: 5000 எம்ஏஎச் பேட்டரி
  • 30 வாட் சூப்பர் டார்ட் சார்ஜ் பாஸ்ட் சார்ஜிங் வசதி
  • இன்-டிஸ்ப்ளே கைரேகை ஸ்கேனர்
  • டூயல் பேண்ட் வைஃபை, 4ஜி, ப்ளூடூத் வி 5.0,
  • ஜிபிஎஸ், 3.5 மிமீ ஹெட்ஃபோன் ஜாக்
  • யூ.எஸ்.பி டைப்-சி போர்ட்
  • எடை: 177 கிராம்
  • இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 11
  • நிறம்: சைபர் பிளாக் மற்றும் சைபர் சில்வர் நிறங்களில் கிடைக்கும்

Most Read Articles
Best Mobiles in India

English summary
Realme 8 Series 5G Version Launching Soon in India: Expected Specs

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X