ரியல்மி 8 ப்ரோ சாதனம் இந்தியாவில் அறிமுகமா? என்னவெல்லாம் எதிர்ப்பார்களாம்?
இந்தியச் சந்தையில் இந்த ஆண்டு ஸ்மார்ட்போன்களின் அறிமுகங்கள் படு வேகமாகவும், படு மும்முரமாகவும் நிகழ்ந்து வருகிறது. ஒவ்வொரு முன்னணி ஸ்மார்ட்போன் நிறுவனங்களும் அதன் பட்டியலில் இருந்து பல புதிய சாதனங்களை அறிமுகம் செய்து கொண்டே இருக்கிறது, அந்த வரிசையில் தற்பொழுது ரியல்மி நிறுவனம் தனது புதிய ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்ய தயாராகி வருகிறது என்று செய்திகள் வெளியாகியுள்ளது.

சமீபத்திய தகவல் படி, ரியல்மி நிறுவனம் விரைவில் அதன் புதிய ஸ்மார்ட்போன் மாடலான ரியல்மி 8 ப்ரோ ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்ய இருக்கிறது என்று கூறப்பட்டுள்ளது. புதிய ஸ்மார்ட்போன் ரெட்மி நோட் 10 ப்ரோ மேக்ஸ் மாடலுக்கு போட்டியாக வெளியாகும் என்பது தெரிகிறது. கூடுதல் சிறப்பு தகவலாக இந்த ஸ்மார்ட் போனில் 108 எம்பி பிரைமரி கேமரா கொடுக்கப்படும் என்று நிறுவனம் கூறியுள்ளது.
இந்த நிலையில், ரியல்மி 8 ப்ரோ ஸ்மார்ட்போனின் சில முக்கிய விவரங்கள் மற்றும் தகவல்கள் சத்தமில்லாமல் இணையத்தில் தற்போது வெளியாகி இருக்கிறது. அதன்படி புதிய ஸ்மார்ட்போன் RMX3081 எனும் மாடல் நம்பர் கொண்டு உருவாகி இருக்கிறது. இது ரியல்மி 8 ப்ரோ 4ஜி வேரியண்ட்டாக இருக்கும் என தெரிகிறது. இந்த ஸ்மார்ட்போன் 4500 எம்ஏஹெச் பேட்டரி, 65 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் வெளிவரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக கடந்த ஆண்டு வெளியான ரியல்மி 7 ப்ரோ ஸ்மார்ட்போனினை 30 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டிருந்தது. புதிய தகவல்களுடன் ரியல்மி ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 730ஜி பிராசஸர் கொண்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் கேமரா பற்றிய தகவல் மற்றும் விலை பற்றிய எந்த தகவலும் இன்னும் வெளியாகவில்லை.


Click it and Unblock the Notifications