இருளில் ஒளிரும் பிரைட்டான 'Realme 8 Pro Illuminating Yellow' வேரியண்ட் அறிமுகம்.. விலை இவ்வளவு தானா?

|

கடந்த வாரம் அறிமுகமான Realme 8 Pro இல்லுமினேட்டிங் எல்லோவ் வேரியண்ட் இப்போது இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் இருட்டில் ஒளிரும் ஒரு அட்டகாசமான பின்புற பிரத்தியேக பூச்சுடன் வருகிறது. அதன் பின்புற நிறத்தைத் தவிர, ரியல்மி 8 புரோ இல்லுமினேட்டிங் எல்லோவ் வேரியண்ட் மாடலில் அணைத்து அம்சங்களும் கடந்த மாதம் வெளியிடப்பட்ட ரியல்மி 8 ப்ரோ ஸ்மார்ட்போனின் அம்சங்களுடன் அப்படியே மாற்றம் இன்றி ஒத்துப்போகிறது.

ரியல்மி 8 புரோ இல்லுமினேட்டிங் எல்லோவ் வேரியண்ட் மாடல்

ரியல்மி 8 புரோ இல்லுமினேட்டிங் எல்லோவ் வேரியண்ட் மாடல்

இதன் பொருள், ரியல்மி 8 புரோ இல்லுமினேட்டிங் எல்லோவ் வேரியண்ட் மாடல் முழு எச்டி பிளஸ் கொண்ட சூப்பர் அமோலேட் டிஸ்ப்ளேவுடன் வருகிறது. அதேபோல், இது ரியல்மி 8 ப்ரோ மாடலில் வழங்கப்பட்டுள்ளதைப் போன்ற 108 மெகாபிக்சல் முதன்மை கேமராவைக் கொண்டுள்ளது. ரியல்மி 8 ப்ரோ ஸ்மார்ட்போன் எப்படி 128 ஜிபி ஸ்டோரேஜ் விருப்பத்துடன் வந்ததோ அதே ஸ்டோரேஜ் விருப்பத்துடன் இந்த புதிய ரியல்மி 8 புரோ இல்லுமினேட்டிங் எல்லோவ் வேரியண்ட் மாடல் இப்போது விற்பனைக்குக் கிடைக்கிறது.

ரியல்மி 8 புரோ இல்லுமினேட்டிங் எல்லோவ் வேரியண்ட் விலை என்ன?

ரியல்மி 8 புரோ இல்லுமினேட்டிங் எல்லோவ் வேரியண்ட் விலை என்ன?

Realme 8 புரோ இல்லுமினேட்டிங் எல்லோவ் வேரியண்ட் இருளில் ஒளிரக் கூடிய பிரகாசமான மஞ்சள் நிறம் பூச்சுடன் வருகிறது. இந்த புதிய ரியல்மி 8 புரோ இல்லுமினேட்டிங் எல்லோவ் வேரியண்ட் இப்போது பிளிப்கார்ட், Realme.com மற்றும் ஆஃப்லைன் சில்லறை கடைகள் வழியாக வாங்குவதற்குக் கிடைக்கிறது. ரியல்மி 8 புரோ இல்லுமினேட்டிங் எல்லோவ் வேரியண்ட்டின் 6 ஜிபி + 128 ஜிபி ஸ்டோரேஜ் மாடல் வெறும் ரூ. 17,999 விலையில் கிடைக்கிறது.

திருட வந்த பெண்களின் வீட்டில் ஆபாச படங்கள் டவுன்லோட்.. பெண்கள் பயன்படுத்திய 'அந்த' பொருள் அபேஸ்..திருட வந்த பெண்களின் வீட்டில் ஆபாச படங்கள் டவுன்லோட்.. பெண்கள் பயன்படுத்திய 'அந்த' பொருள் அபேஸ்..

8 ஜிபி + 128 ஜிபி ஸ்டோரேஜ் மாடல் விலை என்ன?

8 ஜிபி + 128 ஜிபி ஸ்டோரேஜ் மாடல் விலை என்ன?

அதேபோல், ரியல்மி 8 புரோ இல்லுமினேட்டிங் எல்லோவ் வேரியண்ட்டின் 8 ஜிபி + 128 ஜிபி ஸ்டோரேஜ் மாடல் ஸ்மார்ட்போன் வெறும் ரூ.18,999 விலையில் தற்பொழுது விற்பனைக்கு வாங்குவதற்குக் கிடைக்கிறது. இந்த புதிய பிரைட்டான ரியல்மி 8 புரோ இல்லுமினேட்டிங் எல்லோவ் வேரியண்ட் உடன் ரியல்மே 8 ப்ரோ ஸ்மார்ட்போன் சைபர் பிளாக் மற்றும் சைபர் சில்வர் ஷடோவ் ஆகிய இரண்டு கூடுதல் நிறங்களில் வாங்குவதற்குக் கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Realme 8 Pro இல்லுமினேட்டிங் எல்லோவ் வேரியண்ட் சிறப்பம்சம்

Realme 8 Pro இல்லுமினேட்டிங் எல்லோவ் வேரியண்ட் சிறப்பம்சம்

ரியல்மி 8 புரோ இல்லுமினேட்டிங் எல்லோவ் வேரியண்ட் ஒரு பிரகாசமான மஞ்சள் நிற கேமரா தொகுதி மற்றும் அதேபோல் வண்ண 'டேர் டூ லீப்' பிராண்டிங் எழுத்துக்கள் கொண்ட பின்புற கேஸை கொண்டுள்ளது. இவை இருளில் ஒளிரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. பின்புற பேனலின் மீதமுள்ள பகுதிகளிலும் மஞ்சள் நிற டிசைனிங் பெயிண்ட் வேலை உள்ளது, ஆனால் அது இருளில் ஒளிரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், விவரக்குறிப்புகள் முன்னர் அறிமுகம் செய்யப்பட்ட ரியல்மி 8 புரோ மாடலுடன் ஒத்துப் போகிறது.

'மனித இனம் மிகவும் இழிவானது' என்று கூறிய செக்ஸ் ரோபோட்.. இறுதியில் சொன்ன விஷயம் இருக்கே..ஐயையோ.!'மனித இனம் மிகவும் இழிவானது' என்று கூறிய செக்ஸ் ரோபோட்.. இறுதியில் சொன்ன விஷயம் இருக்கே..ஐயையோ.!

ஸ்னாப்டிராகன் 720 ஜி சிப்செட்

ஸ்னாப்டிராகன் 720 ஜி சிப்செட்

இதன் பொருள், இந்த ஸ்மார்ட்போன் 6.4 அங்குல முழு எச்டி பிளஸ் கொண்ட 1,080 x 2,400 பிக்சல்கள் உடைய சூப்பர் அமோலேட் டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. இது 20: 9 விகிதத்துடன் உள்ளது. இது ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 720 ஜி சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. மேலும், இது 8 ஜிபி வரை எல்பிடிடிஆர் 4 எக்ஸ் ரேம் மற்றும் 128 ஜிபி வரை கொண்ட ஸ்டோரேஜ் உடன் இருக்கிறது.

குவாட் ரியர் கேமரா அமைப்பு

குவாட் ரியர் கேமரா அமைப்பு

ரியல்மி 8 ப்ரோ 108 மெகாபிக்சல் முதன்மை சென்சார் கொண்ட குவாட் ரியர் கேமரா அமைப்பையும் கொண்டுள்ளது.முன்பக்கத்தில் 16 மெகாபிக்சல் செல்பி கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. ரியல்மி 8 ப்ரோ இல்லுமினேட்டிங் எல்லோவ் ஸ்மார்ட்போன் மாடல் 4,500 எம்ஏஎச் பேட்டரியுடன் வருகிறது. இது 50W பாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கிறது. இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் இதில் உள்ளது. பிரைட்டான நிறத்தில் புதிய ஸ்மார்ட்போன் வேண்டும் என்ற பயனர்களுக்கு இது அருமையான சாய்ஸ்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Realme 8 Pro Illuminating Yellow Variant Goes on Sale in India : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X