Home
Mobile

ரூ.14,999-விலையில் அசத்தலான ரியல்மி 8 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்.! முழு விவரங்கள்.!

ரியல்மி நிறுவனம் தனது புதிய ரியல்மி 8 5ஜி ஸ்மார்ட்போன் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. அதுவும் தரமான சிப்செட் வசதியுடன் பட்ஜெட் விலையில் இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. வரும் ஏப்ரல் 28-ம் தேதி முதல் இந்த புதிய ரியல்மி 8 5ஜி ஸ்மார்ட்போன் பிளிப்கார்ட் மற்றும் ரியல்மி.காம் வலைத்தளங்களில் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

6.5-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே

6.5-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே

ரியல்மி 8 5ஜி ஸ்மார்ட்போனில் 6.5-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பு இடம்பெற்றுள்ளது. மேலும் 1,080x2,400 பிக்சல் தீர்மானம், 20:9 என்ற திரைவிகிதம், 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 600 nits பிரைட்னஸ் உட்பட பல்வேறு அருமையான அம்சங்களை கொண்டுள்ளது இந்த சாதனம். குறிப்பாக சிறந்த பாதுகாப்பு வசதியுடன் வெளிவந்துள்ளது ரியல்மி 8 5ஜி ஸ்மார்ட்போன்.

 Dimensity 700 5ஜி சிப்செட்

Dimensity 700 5ஜி சிப்செட்

இந்த புதிய ரியல்மி 8 5ஜி ஸ்மார்ட்போனில் மிகவும் எதிர்பார்த்த மீடியாடெக் Dimensity 700 5ஜி சிப்செட் உடன் ஏஆர்எம் மாலி-ஜி52 எம்சி2 ஜிபியு வசதி இடம்பெற்றுள்ளது. எனவே கேமிங் உட்பட பல்வேறு அம்சங்களுக்கு வேகமாக செயல்படும் இந்த ஸ்மார்ட்போன். மேலும் Realme UI 2.0 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

4ஜிபி/8ஜிபி ரேம்

இந்த ஸ்மார்ட்போனில் 4ஜிபி/8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டு வெளிவந்துள்ளது இந்த ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் வழங்கப்பட்டுள்ளது.

 48எம்பி பிரைமரி சென்சார்

48எம்பி பிரைமரி சென்சார்

ரியல்மி 8 5ஜி ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பிரைமரி சென்சார் + 2எம்பி மேக்ரோ சென்சார் + 2எம்பி monochrome சென்சார் என மொத்தம் மூன்று கேமராக்கள் இடம்பெற்றுள்ளன. மேலும் வீடியோ கால் அழைப்புகளுக்கு என்றே 16எம்பி செல்பீ கேமரா இவற்றுள் அடக்கம். பின்பு நைட்ஸ்கேப், 48 எம் மோட், புரோ மோட், ஏஐ ஸ்கேன் மற்றும் சூப்பர் மேக்ரோ போன்ற அம்சங்களையும் கொண்டுள்ளன இந்த ஸ்மார்ட்போனின கேமராக்கள்.

5000 எம்ஏஎச் பேட்டரி

5000 எம்ஏஎச் பேட்டரி

ரியல்மி 8 5ஜி ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. மேலும் 18 வாட் குவிக் சார்ஜ் ஆதரவுடன் வெளிவந்துள்து இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். மேலும் கைரேகை சென்சார் உட்பட பல்வேறு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த புத்தம் புதிய ஸ்மார்ட்போன்.

நீலம் போன்ற நிறங்களில் இந்த

5ஜி, 4ஜி எல்டிஇ, வைஃபை 802.11 ஏசி, புளூடூத் வி 5.1, ஜிபிஎஸ் / ஏ-ஜிபிஎஸ் மற்றும் யூ.எஸ்.பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த ரியல்மி 8 5ஜி ஸ்மார்ட்போன் மாடல். சூப்பர்சோனிக் கருப்பு மற்றும் சூப்பர்சோனிக் நீலம் போன்ற நிறங்களில் இந்த சாதனம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ரியல்மி 8 5ஜி ஸ்மார்ட்போனின் விலை

4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி கொண்ட ரியல்மி 8 5ஜி ஸ்மார்ட்போனின் விலை ரூ.14,999-ஆக உள்ளது. மேலும் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி கொண்ட ரியல்மி 8 5ஜி ஸ்மார்ட்போனின் விலை ரூ.16,999-ஆக உள்ளது.

Best Mobiles in India

English summary
Realme 8 5G with 48 Mega Pixel Camera Launched: Specs, Features and More: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X