அறிமுகமாவது உறுதி., அதுவும் விரைவில்: ரியல்மி 8 5ஜி அம்சங்கள்!
ரியல்மி 8 மற்றும் ரியல்மி 8 ப்ரோ ஆகிய ஸ்மார்ட்போன்களை ரியல்மி நிறுவனம் சமீபத்தில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. இந்த நிலையில் ரியல்மி 8 சீரிஸ் 5ஜி ஸ்மார்ட்போன்கள் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்பதை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

ரியல்மி இந்தியா
ரியல்மி இந்தியா மற்றும் ஐரோப்பாவின் தலைமை நிர்வாக அதிகாரி மாதவ் ஷெத் மூலமாக இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ரியல்மி 8 தொடர் 5ஜி ஸ்மார்ட்போன்கள் அறிவிப்பு குறித்து டுவிட் செய்துள்ளார். இதுகுறித்த டுவிட்டின்படி, ரியல்மி8சீரிஸ் என்ற ஹேஸ்டேக் உடன் 5ஜி வகை சோதனை இறுதி கட்டத்தில் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

ரியல்மி 8 சீரிஸ் 5ஜி ஸ்மார்ட்போன்
ரியல்மி 8 சீரிஸ் 5ஜி ஸ்மார்ட்போன் உடன் ரியல்மி 8ஐ ஸ்மார்ட்போனும் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என ஃபைனான்சியல் எக்ஸ்பிரஸ் தளம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அறிவித்த மாதவ் ஷெத், விரைவில் ரியல்மி 8 5ஜி பதிப்பை பெறுவோம் எனவும் அது 5ஜி சேர்ப்பு கூட்டுடன் இருக்கும் எனவும் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ரியல்மி 8 மற்றும் ரியல்மி 8 ப்ரோ
இந்தியாவில் ரியல்மி 8 5ஜி விலை குறித்து பார்க்கையில் அது ரியல்மி 8 மற்றும் ரியல்மி 8 ப்ரோ விலைக்கு நடுவில் கிடைக்கும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் விலை முறையே ரூ.14,999 முதல் ரூ.17,999 வரையில் நடுவில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. அதேபோல் ரியல்மி 8ஐ விவரக்குறிப்புகள் குறித்த தகவல்கள் தற்போதுவரை தெரியவில்லை.

மேலும் ரியல்மி ஜிடி முதன்மைரக ஸ்மாரட்போனாக இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய நிறுவனம் தயாராகி வருவதாகவும் இந்தாண்டு முன்னதாகவே சீனாவில் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகப்படுத்தப்பட்டது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்குநடுவில் ரியல்மி 8 5ஜி தாய்லாந்தின் தேசிய ஒளிபரப்பு மற்றும் தொலைத்தொடர்பு ஆணையத்தின் வலைதளமான மாதிரி எண் RMX3241 உடன் வெளிவந்திருக்கிறது.

ரியல்மி 8 ப்ரோ அம்சங்கள்
டிஸ்பிளே: 6.4-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் Super AMOLED டிஸ்பிளே (1,080x2,400 பிக்சல்கள்)
180 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட்
90.8 சதவிகிதம் ஸ்க்ரீன் டூ பாடி விகிதம்
1,000 nits பிரைட்நஸ் வசதி
சிப்செட்: குவால்காம் ஸ்னாப்டிராகன் 720ஜி சிப்செட்
ரேம்: 6ஜிபி/8ஜிபி
மெமரி: 128ஜிபி
ரியர் கேமரா: 108எம்பி பிரைமரி சென்சார் +8எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ் + 2எம்பி மேக்ரோ லென்ஸ் + 2எம்பி பிளாக் அண்ட் ஒயிட் சென்சார்
செல்பீ கேமரா: 16எம்பி சோனி ஐஎம்எக்ஸ் 471 செல்பீ கேமரா
பேட்டரி: 4500 எம்ஏஎச் பேட்டரி
50 வாட் சூப்பர் டார்ட் சார்ஜ் பாஸ்ட் சார்ஜிங் வசதி
இன்-டிஸ்ப்ளே கைரேகை ஸ்கேனர்
டூயல் பேண்ட் வைஃபை, 4 ஜி, ப்ளூடூத் வி 5.0,
ஜிபிஎஸ், 3.5 மிமீ ஹெட்ஃபோன் ஜாக்
யூ.எஸ்.பி டைப்-சி போர்ட்
இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 11
எடை: 176 கிராம்
நிறம்: கருப்பு மற்றும் நீல நிறங்களில் கிடைக்கும்

ரியல்மி 8 ப்ரோ விலை
6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ரியல்மி 8 ப்ரோ ஸ்மார்ட்போனின் விலை ரூ.17,999-ஆக உள்ளது.
8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ரியல்மி 8 ப்ரோ ஸ்மார்ட்போனின் விலை ரூ.19,999-ஆக உள்ளது.

ரியல்மி 8 அம்சங்கள்
டிஸ்பிளே: 6.4-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் Super AMOLED டிஸ்பிளே (1,080x 2,400 பிக்சல்கள்)
180 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட்
90.8 சதவிகிதம் ஸ்க்ரீன் டூ பாடி விகிதம்
1,000 nits பிரைட்நஸ் வசதி
சிப்செட்: ஆக்டா கோர் மீடியா டெக் ஹீலியோ ஜி 95 சிப்செட்
ரேம்: 4ஜிபி/6ஜிபி/8ஜிபி மெமரி: 128ஜிபி ரியர்
கேமரா: 64எம்பி பிரைமரி சென்சார் + 8எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ் + 2எம்பி மேக்ரோ லென்ஸ் + 2எம்பி பிளாக் அண்ட் ஒயிட் சென்சார்
செல்பீ கேமரா: 16எம்பி சோனி ஐஎம்எக்ஸ் 471 செல்பீ கேமரா
பேட்டரி: 5000 எம்ஏஎச் பேட்டரி
30 வாட் சூப்பர் டார்ட் சார்ஜ் பாஸ்ட் சார்ஜிங் வசதி
இன்-டிஸ்ப்ளே கைரேகை ஸ்கேனர்
டூயல் பேண்ட் வைஃபை, 4ஜி, ப்ளூடூத் வி 5.0, ஜிபிஎஸ், 3.5 மிமீ ஹெட்ஃபோன் ஜாக்
யூ.எஸ்.பி டைப்-சி போர்ட்
எடை: 177 கிராம்
இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 11
நிறம்: சைபர் பிளாக் மற்றும் சைபர் சில்வர் நிறங்களில் கிடைக்கும்

ரியல்மி 8 விலை
4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ரியல்மி 8 ஸ்மார்ட்போனின் விலை ரூ.14,999-ஆக உள்ளது.
6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ரியல்மி 8 ஸ்மார்ட்போனின் விலை ரூ.15,999-ஆக உள்ளது.
8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ரியல்மி 8 ஸ்மார்ட்போனின் விலை ரூ.16,999-ஆக உள்ளது.


Click it and Unblock the Notifications