ரியல்மி 8 5ஜி இப்படிதான் இருக்கும்: பிளிப்கார்ட் தெரிவித்த தகவல் இதுதான்!

|

ரியல்மி 8 5ஜி மீடியாடெக் டைமன்சிட்டி 700 எஸ்ஓசி உடன் வரும் என பிளிப்கார்ட் டீசர் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஏப்ரல் 22 துவங்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது. ரியல்மி 8 5ஜி ஸ்மார்ட்போனானது மீடியாடெக் டைமன்சிட்டி 700 எஸ்ஓசி செயலி மூலம் வரும் இந்தியாவின் முதல் ஸ்மார்ட்போனாக இருக்கும் என கூறப்படுகிறது.

ரியல்மி 8 5ஜி ஸ்மார்ட்போன்

ரியல்மி 8 5ஜி ஸ்மார்ட்போன்

ரியல்மி 8 5ஜி ஸ்மார்ட்போனானது இந்திய வெளியீடு குறித்து பிளிப்கார்ட்டில் அதிகாரப்பூர்வமாக டீஸ் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் வெளியீட்டு தேதியை குறிப்பிடாமல், ரியல்மி 8 5ஜி குறித்த தகவலும் இல்லை என்றாலும் ரியல்மியில் இருந்து 5ஜி ஸ்மார்ட்போன் குறித்து டீஸ் செய்துள்ளது. இது கடந்தமாதம் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட ஸ்மார்ட்போனின் 5ஜி மாறுபாடாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிறுவனம் சில காலமாக ரியல்மி 8 தொடரின் 5ஜி வகைகள் குறித்து டீஸ் செய்து வருகிறது. அதேபோல் ரியல்மியின் தாய்லாந்து பேஸ்புக் பக்கத்தில் சமீபத்திய பதிவு குறித்து பார்க்கையில், இந்த ஸ்மார்ட்போன் ஏப்ரல் 21 ஆம் தேதி அறிமுகமாகும் என தகவல் தெரிவிக்கிறது.

பிளிப்கார்ட் பிரத்யேக தகவல்

பிளிப்கார்ட் பிரத்யேக தகவல்

5ஜி அறிமுகம் கொண்ட ரியல்மி ஸ்மார்ட்போனின் பிரத்யேக பக்கம் பிளிப்கார்ட்டில் நேரலையில் உள்ளது. மேலும் அதில் ஸ்மார்ட்போன் பெயர் மற்றும் வெளியீட்டு தேதியை குறிப்பிடாமல் விரைவில் வரும் என மட்டும் குறிப்பிடப்பட்டுள்ளது. வலைப்பக்கத்தில் பட்டியலிட்டுள்ளபடி நாட்டில் முன்னதாக நான்கு 5ஜி ஸ்மார்ட்போன்கள் இருப்பதால் அடுத்து வருவது ரியல்மி 8 5ஜி ஆக இருக்கிறது என நம்பப்படுகிறது. ரியல்மி எக்ஸ் 50 ப்ரோ 5ஜி, ரியல்மி எக்ஸ் 7 ப்ரோ 5ஜி, ரியல்மி எக்ஸ் 7 5ஜி மற்றும் ரியல்மி நார்சோ 30 ப்ரோ 5ஜி ஆகியவையின் அடுத்த பாய்ச்சல் எடுக்கும் என தலைப்பு குறிப்பிட்டுள்ளது. 5ஜி தொழில்நுட்பத்தில் ரியல்மி 8 அடுத்த இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மீடியாடெக் டைமன்சிட்டி 700 5ஜி எஸ்ஓசி

மீடியாடெக் டைமன்சிட்டி 700 5ஜி எஸ்ஓசி

ஸ்மார்ட்போன் சமீபத்தில் அறிவிக்கப்பட்ட மீடியாடெக் டைமன்சிட்டி 700 5ஜி எஸ்ஓசி உடன் 4ஜி மற்றும் 5ஜி இணைப்புக்கு இடையேயான சில ஒப்பீடுகளை கொண்டுள்ளது என பிளிப்கார்ட் பக்கம் கொண்டிருக்கிறது. அதேபோல் டைமன்சிட்டி 700 5ஜி எஸ்ஓசி உடன் இந்தியாவின் முதல் ஸ்மார்ட்போனாக இது இருக்கும் என இந்த பக்கம் கூறுகிறது.

ஏப்ரல் 22 ஆம் தேதி வெளியாகும்

ஏப்ரல் 22 ஆம் தேதி வெளியாகும்

ரியல்மி 8 5ஜி ஸ்மார்ட்போனானது ஏப்ரல் 21 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படும் என ரியல்மி தாய்லாந்து பேஸ்புக் பக்கம் தெரிவிக்கிறது. அதேபோல் ஏப்ரல் 22 ஆம் தேதி இந்த ஸ்மார்ட்போன் இந்திய சந்தையை எட்டும் என அறிக்கை தெரிவிக்கிறது. ரியல்மி தாய்லாந்து பேஸ்புக் பக்க பதிவில் ஒரு டீசர் வீடியோ வெளியிட்டது. இதில் வடிவமைப்பு குறித்த விவரத்தை வெளியிட்டது. இதில் 48 மெகாபிக்சல் முதன்மை கேமரா உடன் மூன்று கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது.

5000 எம்ஏஎச் பேட்டரி

5000 எம்ஏஎச் பேட்டரி

ரியல்மி 8 5ஜி கீக்பெஞ்ச் பட்டியலின்படி காணப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் மீடியாடெக் டைமன்சிட்டி 700 எஸ்ஓசி உடன் 8ஜிபி ரேம் மற்றும் ஆண்ட்ராய்டு 11 உடன் வரும் என தெரிவித்தது. கடந்த வாரம் வெளியான வலைதள பட்டியலின்படி ரியல்மி 8 5ஜி 5000 எம்ஏஎச் பேட்டரி கொண்டிருக்கும் என தகவல்கள் தெரிவிக்கிறது.

File Images

Best Mobiles in India

English summary
Realme 8 5G may Launching on April 22: Specs Leaked on Flipkart

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X