Home
Mobile

ரியல்மி வாடிக்கையாளர்களுக்கு ஒரு நற்செய்தி: கிடைத்தது ஆண்ட்ராய்டு 11 அப்டேட்!

ரியல்மி நிறுவனம் தனது ரியல்மி 7ஐ ஸ்மார்ட்போனுக்கு ஆண்ட்ராய்டு 11 அடிப்படையிலான ரியல்மி யூஐ 2.0 புதுப்பிப்பை வெளியிடத் தொடங்கியிருக்கிறது. இந்த புதுப்பிப்பானது ரியல்மி 7ஐ-க்கான RMX2103_11_C.05 என்ற எண்ணுடன் வருகிறது. இது குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பயனர்களுக்கு மட்டுமே தோராயமாக கிடைக்கிறது. இதன்பின் இதில் உள்ள முக்கிய பிழைகள் கண்டறியப்பட்டு உறுதி செய் பின்னரே வரும் நாட்களில் அனைத்து பயனர்களுக்கும் கிடைக்கும். இதை பெற விரும்பும் பயனர்கள் ரியல்மி 7ஐ செட்டிங்க்ஸ் தேர்வுக்குள் சென்று ரியல்மி 7ஐ-ல் ரியல்மி யூஐ புதுப்பிப்பு கிடைக்கும் நிலை குறித்து சரிபார்க்கலாம். இதில் பிழைகள் எதுவும் காணப்படாதபட்சத்தில் வரவிருக்கும் நாட்களில் முழு வெளியீடு வரும் என கூறப்படுகிறது.

3 நாட்கள் பேட்டரி ஆயுள்

3 நாட்கள் பேட்டரி ஆயுள்

கணினி செயல்பாட்டு செயல்திறனை மேம்படுத்த, பாதுகாப்பாக செயல்படவும் அபாயங்களை அகற்றவும் போன்ற பல்வேறு செயல்பாடுகளை இந்த அப்டேட் கொண்டு வரும் என கூறப்படுகிறது. அதேபோல் ஸ்மார்ட்போன் முழுமையாக சார்ஜ் செய்த பிறகும் 5 மணி நேரம் போனை அதேநிலையில் வைத்திருக்கும் பட்சத்தில் சாதனம் சாதாரண பயன்பாட்டில் 3 நாட்களுக்கு நீடிக்கும்.

ஆண்ட்ராய்டு 11 அப்டேட்

ஆண்ட்ராய்டு 11 அப்டேட்

ஆண்ட்ராய்டு 11 அடிப்படையிலான ரியல்மி யூஐ 2.0 புதிய அம்சங்கள் குறித்து பார்க்கையில், இது மேம்படுத்தப்பட்ட இருண்ட பயன்பாடு, மூன்றாம் தரப்பு ஐகான் ஆதரவு, மேம்படுத்தப்பட்ட விளையாட்டு பதிப்பு உள்ளிட்ட அம்சங்களை கொண்டிருக்கிறது.

மூன்றாம் தரப்பு ஐகான் ஆதரவு

மூன்றாம் தரப்பு ஐகான் ஆதரவு

இந்த அப்டேட் மூலம் உங்கள் புகைப்படங்களில் இருந்து வண்ணங்களை தேர்ந்தெடுத்து சொந்த வால்பேப்பராக வைக்கலாம். ஸ்க்ரீன் மெயின் பேஜ்ஜில் பயன்பாடுகளுக்கான மூன்றாம் தரப்பு ஐகான் ஆதரவு இருக்கிறது. மூன்று வகை டார்க் மோட் பயன்முறை, ஃப்லோட்டிங் முறையில் உரை, படங்கள் மற்றும் ஃபைல்களை ஸ்பிளிட் செய்து பார்க்கலாம். இதில் உகந்த நைட் மோட் சார்ஜிங் வசதி சேர்க்கப்பட்டுள்ளது. பேட்டரி ஆயுள் நீட்டித்து வழங்க இரவில் சார்ஜ் வேக கட்டுப்பாடுக்கு ஏஐ வழிமுறை வசதி இருக்கிறது. மேலும் இந்த அப்டேட் மூலம் பயனர்கள் ஏணைய புதுப்பிப்பு ஆதரவுகளை பெறலாம்.

90 ஹெர்ட்ஸ் எல்சிடி டிஸ்ப்ளே

90 ஹெர்ட்ஸ் எல்சிடி டிஸ்ப்ளே

ரியல்மி 7I 6.5 இன்ச் 90 ஹெர்ட்ஸ் எல்சிடி டிஸ்ப்ளே, அதோடு 720p ரெசல்யூஷனுடன் வருகிறது. ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 662 செயலி மூலம் இயக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் மேல்புறத்தில் கார்னிங் கொரில்லா கண்ணாடி பாதுகாப்பு வசதி உள்ளது. அதோடு டிஸ்ப்ளேயில் இருந்து உடல் விகிதம் 90% ஆகும். இதில் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்புடன் இணைக்கப்பட்டுள்ளது.

5000 mAh பேட்டரி

5000 mAh பேட்டரி

ரியல்மி 7ஐ ஸ்மார்ட்போனில் மெமரி நீட்டிப்புக்கு மைக்ரோ எஸ்டி ஸ்லாட் வசதி உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் Android 10 அடிப்படையிலான Realmy UI இல் இயங்கியது. இந்த ஸ்மார்ட்போனின் பின்புறத்தில் கைரேகை சென்சார் உள்ளது. ரியல்மி 7i 5000 mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. சாதனத்தில் யூ.எஸ்.பி-சி போர்ட் உள்ளது.

Best Mobiles in India

English summary
Realme 7I Smartphone Gets Android 11 based Realme UI 2.0 Update!
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X