64எம்பி கேமராவுடன் ரியல்மி 7ஐ ஸ்மார்ட்போன் அறிமுகம்.! விலை மற்றும் விபரங்கள்.!
ரியல்மி நிறுவனம் தனது ரியல்மி 7ஐ ஸ்மார்ட்போனை இந்தோனேசியாவில் அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் பட்ஜெட் விலையில் சிறந்த தொழில்நுட்ப வசதியுடன் அறிமுகம் செய்துள்ளது. விரைவில் இந்தியா உட்டப பல்வேறு நாடுகளில் இந்த
ரியல்மி 7ஐ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

ரியல்மி 7ஐ ஸ்மார்ட்போன் ஆனது 6.5-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 1600 x 720 பிக்சல் திர்மானம் மற்றும் 90Hz refresh rate, கார்னிங் கொரில்லா பாதுகாப்பு வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகளைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

இந்த ஸ்மார்ட்போனில் மிகவும் எதிர்பார்த்த 2ஜிகாஹெர்ட்ஸ் ஸ்னாப்டிராகன் 662 ஆக்டோ-கோர் பிராசஸர் வசதி இடம்பெற்றுள்ளது. மேலும் ஆணட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும்
அருமையாக இருக்கும்.

ரியல்மி 7ஐ ஸ்மார்ட்போனில் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது, பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டு வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். மேலும் இந்த சாதனத்தில் கைரேனை ஸ்கேனர் வசதியும் இடம்பெற்றுள்ளது.

ரியல்மி 7ஐ ஸ்மார்ட்போனின் பின்புறம் 64எம்பி பிரைமரி லென்ஸ் +8எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 2எம்பி மேக்ரோ லென்ஸ் + 2எம்பி சென்சார் என மொத்தம் நான்கு கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் 16எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.

இந்த அசத்தலான ஸ்மார்ட்போனில் 5000எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் 18வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். குறிப்பாக இதன் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

இரட்டை 4 ஜி வோல்டிஇ, வைஃபை 802.11 ஏசி (2.4GHz + 5GHz), புளூடூத் 5, ஜிபிஎஸ் / க்ளோனாஸ் / பீடோ, யூ.எஸ்.பி டைப்-சி மற்றும் 3.5 மிமீ ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். மேலும் இந்த சாதனம் இந்தியாவில் ரூ.15,885-விலையில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications