64 எம்பி கேமரா, 30வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங்: ரியல்மி 7 அடுத்த விற்பனை தேதி அறிவிப்பு!

|

64 எம்பி கேமரா, 30வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் அம்சம் கொண்ட ரியல்மி 7 ஸ்மார்ட்போனின் அடுத்த விற்பனை தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனுக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ரியல்மி 7 ஸ்மார்ட்போன்

ரியல்மி 7 ஸ்மார்ட்போன்

ரியல்மி 7 ஸ்மார்ட்போனின் அடுத்த விற்பனை செப்டம்பர் 17 ஆம் தேதி நடைபெற உள்ளது. ரியல்மி 7 ஸ்மார்ட்போனானது கடந்த வாரம் ரியல்மி 7 ப்ரோவுடன் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த ஸ்மார்ட்போனில் குவாட் ரியர் கேமராக்கள், பஞ்ச்-ஹோல் டிஸ்ப்ளே மற்றும் 8 ஜிபி ரேம் உள்ளது.

90 ஹெர்ட்ஸ் டிஸ்ப்ளே

90 ஹெர்ட்ஸ் டிஸ்ப்ளே

இந்த ஸ்மார்ட்போனானது சீன நிறுவனமானது கடந்த மார்ச் மாதத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட ரியல்மி 6-க்கு அடுத்தப்படியாக அறிமுகப்படுத்தப்பட்டது. ரியல்மி 7 முந்தைய மாடல்கள் போன்றே 90 ஹெர்ட்ஸ் டிஸ்ப்ளே, 30 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு உள்ளது.

ரியல்மி 7 விலை விவரங்கள்

ரியல்மி 7 விலை விவரங்கள்

ரியல்மி 7 விலை விவரங்கள் குறித்து பார்க்கலாம். ரியல்மி 7, 6 ஜிபி ரேம் மற்றம் 64 ஜிபி ஸ்டோரேஜ் மாடல் விலை ரூ.14,999 எனவும் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி விலை ரூ.16,999 எனவும் உள்ளது. அதேபோல் இந்த ஸ்மார்ட்போனானது மிஸ்ட் ப்ளூ, மிஸ்ட் வெள்ளை ஆகிய வண்ண விருப்பங்களில் விற்பனைக்கு வருகிறது.

செப்டம்பர் 17 ஆம் தேதி மதியம் 12 மணிக்கு

செப்டம்பர் 17 ஆம் தேதி மதியம் 12 மணிக்கு

ரியல்மி 7 ஸ்மார்ட்போனானது செப்டம்பர் 17 ஆம் தேதி மதியம் 12 மணிக்கு பிளிப்கார்ட் மற்றும் ரியல்மி.காம் மூலம் விற்பனைக்கு வருகிறது. ரியல்மி 7 மாடலானது ரியல்மி 7 ப்ரோவுடன் விற்பனைக்கு வந்தது.

அமெரிக்க அதிபர் தேர்தலை சீர்குலைக்க ஹேக்கர்கள் சதி! மைக்ரோசாப்ட் எச்சரிக்கை!அமெரிக்க அதிபர் தேர்தலை சீர்குலைக்க ஹேக்கர்கள் சதி! மைக்ரோசாப்ட் எச்சரிக்கை!

ரியல்மி 7 அம்சங்கள்

ரியல்மி 7 அம்சங்கள்

ரியல்மி 7 அம்சங்கள் குறித்து பார்க்கலாம். அதில் நானோ வகை டூயல் சிம், ஆண்ட்ராய்டு 10 ஆதரவு, 6.5 அங்குல முழு ஹெச்டி ப்ளஸ் டிஸ்ப்ளே ஆகியவை கொண்டுள்ளது. 20:9 விகிதத்துடன், 90:5 என்ற ஸ்க்ரீன் டூ பாடி விகிதத்துடன் இந்த ஸ்மார்ட்போன் வருகிறது.

ரியல்மி 7 குவாட் ரியர் கேமரா

ரியல்மி 7 குவாட் ரியர் கேமரா

அதுமட்டுமின்றி ரியல்மி 7 ஸ்மார்ட்போனில் ஆக்டோகோர் மீடியாடெக் ஹீலியோ ஜி 95 எஸ்ஓசி செயலி மூலம் இந்த ஸ்மார்ட்போன் இயக்கப்படுகிறது. ரியல்மி 7 குவாட் ரியர் கேமரா அம்சத்தை கொண்டுள்ளது. இதில் 64 மெகாபிக்சல் முதன்மை சென்சார், 8 மெகாபிக்சல் அல்ட்ரா வைட்-ஆங்கிள் ஷூட்டர், 2 மெகாபிக்சல் மோனோக்ரோம் சென்சார் மற்றும் 2 மெகாபிக்சல் சென்சார் ஆகியவை அடங்கும். இந்த சாதனம் 16 மெகாபிக்சல் செல்பி கேமரா அம்சத்தோடு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

யூ.எஸ்.பி டைப்-சி போர்ட்

யூ.எஸ்.பி டைப்-சி போர்ட்

128 ஜிபி வரை மெமரி நீட்டிப்பு ஸ்லாட் வசதி, 4G வோல்ட்இ, யூ.எஸ்.பி டைப்-சி போர்ட் ஆகியவை அடங்கும். ஸ்மார்ட்போனில் பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை சென்சார் உள்ளது. அதோடு இந்த சாதனம் 5,000 mAh பேட்டரியுடன் வருகிறது, இந்த ஸ்மார்ட்போனை 30 வாட்ஸ் வேகமான சார்ஜிங் வசதி மூலம் சார்ஜ் செய்யலாம்.

Best Mobiles in India

English summary
Realme 7 Next Sale Set on to September 17: Here the Price and Specifications

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X