விரைவில் களமிறங்க இருக்கும் ரியல்மி 7, 7 ப்ரோ: டுவிட்டரில் வெளியான தகவல்!
ரியல்மி 7 மற்றும் ரியல்மி 7 ப்ரோ இந்தியாவில் விரைவில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் அறிமுகம் குறித்து ரியல்மி இந்திய தலைமை செயல் அதிகாரி மாதவ் சேத் டுவிட் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதுகுறித்து பார்க்கலாம்.

ரியல்மி இந்திய தலைமை செயல் அதிகாரி
ரியல்மி நிறுவனம் இந்தியாவில் அடுத்தடுத்து ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தி வருகிறது. இந்த நிலையில் ரியல்மி இந்திய தலைமை செயல் அதிகாரி மாதவ் சேத் சமீபத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் ஐ ஆம் பேக் நான் திரும்ப வந்துட்டேன் என்ற பேக்க்ரவுண்ட் இருந்தது.
நிகழ்வில் கலந்து கொள்ளாததற்கு காரணம்
மேலும் அந்த டுவிட்டில் கடந்த சில அறிமுக நிகழ்வுகளில் தான் கலந்து கொள்ளாததற்கான் காரணத்தை தெரிவித்தார். அதில் இந்த அறிமுக நிகழ்வில் கலந்து கொள்ளாததற்கு காரணம் இரண்டு ஸ்மார்ட்போன்களை உருவாக்கும் பணிகளில்தான் ஈடுபட்டு இருந்ததாக குறிப்பிட்டார்.

ஹேஸ்டேக் பதிவு
அந்த டுவிட்டர் பதிவில் #BuildingTheFaster7 என்ற ஹேஸ்டேக்கை பதிவிட்டிருந்தார். அதில் ரியல்மி 7 மற்றும் ரியல்மி 7 ப்ரோ ஸ்மார்ட்போன்களை குறித்து இந்த ஹேஸ்டேக் பதிவிட்டார்.

ரியல்மி 7 மற்றும் ரியல்மி 7 ப்ரோ
ரியல்மியின் வரவிருக்கும் ரியல்மி 7 மற்றும் ரியல்மி 7 ப்ரோ குறித்து எந்த தகவலும் இல்லை. இருப்பினும் ரியல்மி 9 மற்றும் ரியல்மி ப்ரோ மாடல்களின் மேம்பட்ட பதிப்பாக இது இருக்கலாம் என கூறப்படுகிறது.

மிஸ்ட் ப்ளூ மற்றும் மிஸ்ட் வைட்
தற்போது வெளியாகியுள்ள டீசர்படி இந்த புதிய ஸ்மார்ட்போன்கள் பச்சை நிறத்தில் இருக்கும் என கூறப்படுகிறது. அதேபோல் இந்த புதிய ரியல்மி 7 ஸ்மார்ட்போன்கள் மிஸ்ட் ப்ளூ மற்றும் மிஸ்ட் வைட் நிறங்களில் கிடைக்கும் என தெரிவிக்கப்படுகிறது.

மூன்று வேரிண்ட்களில் அறிமுகமாக வாய்ப்பு
அதேபோல் ரியல்மி 7 ஸ்மார்ட்போன் 6 ஜிபி + 64 ஜிபி, 6 ஜிபி + 128 ஜிபி மற்றும் 8 ஜிபி + 128 ஜிபி போன்ற மூன்று வேரிண்ட்களில் கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ரியல்மி 7 ப்ரோ ஸ்மார்ட்போனானது மிரர்ப்ளூ, மிரர் சில்வர் வண்ணங்களில் கிடைக்கும்.

கூடுதல் விவரங்கள் எதுவுமில்லை
ரியல்மி 7 ப்ரோ ஸ்மார்ட்போன் 6 ஜிபி + 128 ஜிபி, 8 ஜிபி + 128 ஜிபி ஆகிய இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கும் என கூறப்படுகிறது. இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களின் கூடுதல் விவரங்கள் எதுவும் கிடைக்கவில்லை என்றாலும் இந்த ஸ்மார்ட்போன்கள் செப்டம்பர் மாதத்தில் அறிமுகம் செய்யப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கிறது.
File images


Click it and Unblock the Notifications