ரியல்மி 7 5ஜி வெளியீடு உறுதிப்படுத்தப்பட்டது.. ரியல்மி வி 5 போனும் ரியல்மி 7 5ஜி போனும் ஒன்றா?

|

ரியல்மி நிறுவனம் தனது ரியல்மி 7 5ஜி ஸ்மார்ட்போன் மாடலிங் நவம்பர் 19 ஆம் தேதி இங்கிலாந்தில் மெய்நிகர் நிகழ்வின் மூலம் அறிமுகப்படுத்தவுள்ளதாக அறிவித்துள்ளது. ரியல்மி நிறுவனம் தனது இங்கிலாந்து டிவிட்டர் பக்கத்தின் மூலம் இந்த தகவலை வெளிப்படுத்தியுள்ளது. இந்த நிகழ்வு நிறுவனத்தின் சமூக ஊடக பக்கம் மற்றும் அதன் யூடியூப் சேனல் வழியாக நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் என்று நிறுவனம் கூறியுள்ளது.

ரியல்மி 7 5ஜி ஸ்மார்ட்போன்

ரியல்மி 7 5ஜி ஸ்மார்ட்போன் 5ஜி இணைப்பைக் கொண்ட ரியல்மி 7 சீரிஸ் வரிசையில் முதல் ஸ்மார்ட்போனாக இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த வரிசையில் ரியல்மி 7, ரியல்மி 7 ப்ரோ மற்றும் ரியல்மி 7i ஆகியவை அடங்கும். இந்த சாதனத்தின் 6 ஜிபி / 128 ஜிபி வேரியண்ட் விலை இந்திய மதிப்பின்படி தோராயமாக ரூ .16,800 ஆகும், இதன் 8 ஜிபி / 128 ஜிபி வேரியண்ட் தோராயமாக ரூ .21,400 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மெகாபிக்சல் மேக்ரோ லென்ஸ்

ரியல்மி 7 5ஜி ஸ்மார்ட்போன், 6.52' இன்ச் 1600 x 720 பிக்சல் கொண்ட எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளேயுடன் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் 6 ஜிபி வரை எல்பிடிடிஆர் 4 எக்ஸ் ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் உடன் ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 720 பிராசஸர் உடன் வருகிறது. 13 மெகாபிக்சல் பிரைமரி கேமரா, 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார் மற்றும் 2 மெகாபிக்சல் மேக்ரோ லென்ஸ் கொண்ட ட்ரிபிள் கேமரா அமைப்பைக் கொண்டிருக்கும்.

 கேமரா

ஸ்மார்ட்போனின் முன்பக்கத்தில் 8 மெகாபிக்சல் கொண்ட செல்பி ஷூட்டர் கேமரா கொடுக்கப்படும். இத்துடன் 30W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 5000 எம்ஏஎச் பேட்டரி மூலம் ஸ்மார்ட்போன் செயல்படும். இந்த போன் Android 10 OS உடன் பின்பக்க கைரேகை சென்சார் மற்றும் 3.5 மிமீ ஆடியோ ஜாக் உடன் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரியல்மி 7 5ஜி

ரியல்மி வி 5 சிறப்பம்சம் போலவே ரியல்மி 7 5ஜி ஸ்மார்ட்போனும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த இரண்டு ஸ்மார்ட்போஙக்ளுக்கு இடையே ஒரு சிறிய வித்தியாசம் கூட இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. ரியல்மி 7 5ஜி ஸ்மார்ட்போன் ரியல்மி வி 5 ஸ்மார்ட்போனின் மறுபெயரிடப்பட்ட எடிஷனாக அறிமுகப்படுத்தப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Realme 7 5G which will be launching on 19th November : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X