Home
Mobile

விரைவில் அறிமுகமாகும் ரியல்மி 7 5ஜி: 8ஜிபி ரேம், 48 எம்பி கேமராவோடு அட்டகாச அம்சங்கள்!

நவம்பர் 19 ஆம் தேதி ரியல்மி 7 5ஜி வெளியிடப்படும் என ரியல்மி யுகே தளம் உறுதிப்படுத்தியுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் வெளியீடு மெய்நிகர் நிகழ்வு மூலம் நடக்க உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கும்.

ரியல்மி 7 5ஜி ஸ்மார்ட்போன்

ரியல்மி 7 5ஜி ஸ்மார்ட்போன்

ரியல்மி தனது ரியல்மி 7 5ஜி ஸ்மார்ட்போனை நவம்பர் 19 ஆம் தேதி வெளியிடப்படும் என தெரிவித்துள்ளது. ரியல்மி வெளியீட்டு நிகழ்வு இங்கிலாந்தில் மெய்நிகர் நிகழ்வு மூலம் நடைபெறும் என தெரிவித்துள்ளது. இது இங்கிலாந்தின் ரியல்மி ட்விட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வு நிறுவனத்தின் சமூகவலைதள பக்கம் மற்றும் யூடியூப் சேனலில் காண்பிக்கப்படும்.

ரியல்மி 7, ரியல்மி 7 ப்ரோ, 7ஐ

ரியல்மி 7, ரியல்மி 7 ப்ரோ, 7ஐ

ரியல்மி 7 5ஜி ஆதரவுடனான ஸ்மார்ட்போன் ரியல்மி 7 தொடரின் முதல் 5ஜி ஸ்மார்ட்போனாகும். இதில் ரியல்மி 7, ரியல்மி 7 ப்ரோ மற்றும் 7ஐ ஆகியவை அடங்கும்.

6 ஜிபி ரேம், 8 ஜிபி ரேம்

6 ஜிபி ரேம், 8 ஜிபி ரேம்

இந்த ஸ்மார்ட்போனின் விலை 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி சேமிப்பு வசதியோடு சிஎன்ஒய் 1,499 ஆகும். இந்திய மதிப்பின்படி ரூ.16,800 ஆக இருக்கலாம். 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி சேமிப்பு வசதியோடு வரும் வேரியண்ட் விலை சிஎன்ஒய் 1,899 இந்திய மதிப்பின்படி ரூ.21,400 ஆகும்.

ரியல்மி 7 5ஜி சிறப்பம்சங்கள்

ரியல்மி 7 5ஜி சிறப்பம்சங்கள்

ரியல்மி 7 5ஜி சிறப்பம்சங்கள் குறித்து வெளியான தகவல்களை பார்க்கலாம். இது மாதிரி எண் RMX2111 கொண்டிருக்கும். இது முதற்கட்டமாக ரியல்மி 7 5ஜியுடன் இணைக்கப்பட்டுள்ளது. இது ரியல்மி 7 5ஜி மாடல் ரியல்மி வி5 ஸ்மார்ட்போனின் மறுபெயரிடப்பட்ட பதிப்பாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

6.5 இன்ச் பஞ்ச் ஹோல் டிஸ்ப்ளே

6.5 இன்ச் பஞ்ச் ஹோல் டிஸ்ப்ளே

ரியல்மி 7 5ஜி 6.5 இன்ச் பஞ்ச் ஹோல் டிஸ்ப்ளேவுடன் வரும். இதில் 90 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதம் உள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனில் மீடியாடெக் டைமன்சிட்டி 720 செயி மூலம் இயக்கப்படும் எனவும் 6 ஜிபி ரேம் மற்றும் 8 ஜிபி ரேம் வேரியண்டோடு வரும் என கூறப்படுகிறது.

குவாட் கேமரா அமைப்பு

குவாட் கேமரா அமைப்பு

ரியல்மி 7 5ஜி குவாட் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. இதில் 48 மெகாபிக்சல் முதன்மை கேமரா, 8 மெகாபிக்சல் இரண்டாம் நிலை கேமரா மற்றும் 2 எம்பி மூன்றாம் நிலை கேமரா ஆகியவை உள்ளது.

5000 எம்ஏஎச் பேட்டரி

5000 எம்ஏஎச் பேட்டரி

ரியல்மி வி5 மாடலில் உள்ள அதே விவரக்குறிப்புகள் இதிலும் உள்ளன. 5000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 30 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் அம்சம் இருக்கிறது. பாதுகாப்பு அம்சத்திற்கு பக்கவாட்டில் கைரேகை சென்சார் உள்ளன.

Best Mobiles in India

English summary
Realme 7 5G Set to Launch on November 19: Specification, Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X