48எம்பி கேமராவுடன் அசத்தலான ரியல்மி 7 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

|

ரியல்மி நிறுவனம் தனது புதிய ரியல்மி 7 5ஜி ஸ்மார்ட்போன் மாடலை ஐரோப்பாவில் அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் சிறந்த மென்பொருள் வசதி மற்றும் அட்டகாசமான கேமராக்களுடன் வெளிவந்துள்ளது. மேலும் இதன் விலை மற்றும் பல்வேறு சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

ஹை-ரெஸ் ஆடியோவுடன்

ரியல்மி 7 5ஜி ஸ்மார்ட்போனின் விலை (இந்திய மதிப்பில்) ரூ.24,600-ஆக உள்ளது. பின்பு வரும் நவம்பர் 27-ம் தேதி Amazon UKவழியாக இந்த சாதனம் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனில் பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை ஸ்கேனர் இடம்பெற்றுள்ளது. மேலும டால்பி அட்மோஸ் மற்றும் ஹை-ரெஸ் ஆடியோவுடன் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் உடன் வருகிறது இந்த ஸ்மார்ட்போன்.

கார்னிங் கொரில்லா கிளாஸ்

ரியல்மி 7 5ஜி ஸ்மார்ட்போனில் 6.5-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 2400 x 1080 பிக்சல் தீர்மானம், 120Hz screen refresh rate மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு உள்ளிட்ட சிலஅம்சங்களுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது.

விவோ Origin OS அறிமுகம்.! என்னென்ன அம்சங்கள்?விவோ Origin OS அறிமுகம்.! என்னென்ன அம்சங்கள்?

 சிறப்பாகவும் செயல்படும்

இந்த ஸ்மார்ட்போனில் மிகவும் அதிகம் எதிர்பார்த்த ஆக்டோ-கோர் மீடியாடெக் Dimensity 800U சிப்செட் உடன் மாலி-ஜி57 எம்சி3 ஜிபியு ஆதரவு இடம்பெற்றுள்ளது. எனவே இது கேமிங் மற்றும் ஆப் வசதிகளை பயன்படுத்த வேகமாகவும், சிறப்பாகவும் செயல்படும். மேலும் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த ரியல்மி 7 5ஜி ஸ்மார்ட்போன் மாடல்.

ஸ்மார்ட்போன் ஆனது 6ஜிபி ரேம்

ரியல்மி 7 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதியுடன் வெளிவந்துள்ளது, மேலும் கூடுதலாகமெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒருஸ்லாட் கொடுக்கப்பட்டுள்ளது.

 பிரைமரி லென்ஸ் + 8எம்பி

ரியல்மி 7 5ஜி ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பிரைமரி லென்ஸ் + 8எம்பி வைடு ஆங்கிள் லென்ஸ் + 2எம்பி மேக்ரோ லென்ஸ் + 2எம்பி B&W லென்ஸ் என மொத்தம் நான்கு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் 16எம்பி செல்பீ கேமரா,எல்இடி பிளாஸ் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் என பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

 5000 எம்ஏஎச் பேட்டரி

ரியல்மி 7 5ஜி சாதனத்தில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது, எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் 30 வாட் Dart Charge பாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்ப வசதியைக் கொண்டு வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

 195 கிராம்

4 ஜி வோல்டிஇ, வைஃபை 802.11 ஏசி (2.4GHz + 5GHz), புளூடூத் 5, ஜிபிஎஸ், க்ளோனாஸ் மற்றும் யூ.எஸ்.பி டைப்-சி போர்ட்உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகள் மற்றும் 195 கிராம் எடையைக் கொண்டுள்ளது இந்த ரியல்மி 7 5ஜி ஸ்மார்ட்போன் மாடல்.

Best Mobiles in India

English summary
Realme 7 5G Launched: Specs, Features and More: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X