Home
Mobile

பக்கா பட்ஜெட் ஸ்மார்ட்போன் ரியல்மி 6ஐ இன்று அறிமுகம்: இதோ சிறப்பம்சங்கள்!

ரியல்மி 6 ஐ ஸ்மார்ட்போன் இன்று இந்தியாவில் அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கலாம்.

ரியல்மி 6ஐ ஸ்மார்ட்போன்

ரியல்மி 6ஐ ஸ்மார்ட்போன்

ரியல்மி நிறுவனம் தனது புதிய ரியல்மி 6ஐ ஸ்மார்ட்போன் மாடலை இன்று இந்தியாவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் பிளிப்கார்ட் வலைதளம் மூலம் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 6.5-இன்ச் எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளே

6.5-இன்ச் எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளே

மேலும் வெளிவந்த தகவலின் அடிப்படையில் இந்த ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் மற்றும் விலை உள்ளிட்ட தகவல்களைப் பார்ப்போம்.

ரியல்மி 6ஐ ஸ்மார்ட்போன் மாடல் 6.5-இன்ச் எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 2400 x 1080பிக்சல், ததிர்மானம் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பிளஸ் பாதுகாப்பு வசதியுடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக 20:9 என்ற திரைவிகிதம் அடிப்படையில் இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும்.

4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி வசதி

4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி வசதி

இந்த ஸ்மார்ட்போனில் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது, பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும். மேலும் இந்த சாதனத்தின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது இந்நிறுவனம்.

ஆக்டோ-கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி90டி

ஆக்டோ-கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி90டி

ரியல்மி 6ஐ ஸ்மார்ட்போனில் மிகவும் எதிர்பார்த்த ஆக்டோ-கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி90டி 12என்எம் பிராசஸர் வசதி உள்ளது,மேலும் ஏஆர்எம் மாலி-ஜி76 3இஇஎம்சி4 ஜபியு வசதியுடன் ஆணட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டுள்ளது இந்த சாதனம், எனவே இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

48எம்பி பிரைமரி கேமரா

48எம்பி பிரைமரி கேமரா

இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி செகன்டரி சென்சார் +2எம்பி மேக்ரோ சென்சார் +2எம்பி டெப்த் சென்சார் என மொத்தம் நான்கு கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் 16எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

4300எம்ஏஎச் பேட்டரி

4300எம்ஏஎச் பேட்டரி

ரியல்மி 6ஐ ஸ்மார்ட்போனில் 4300எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் 30வாட்பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, கைரேகை சென்சார் உள்ளிட்ட ஆதரவுகளும் இவற்றுள் அடக்கம்.

யூ.எஸ்.பி டைப் சி மற்றும் 3.5 மிமீ ஆடியோ ஜாக்

யூ.எஸ்.பி டைப் சி மற்றும் 3.5 மிமீ ஆடியோ ஜாக்

4 ஜி வோல்டிஇ,வைஃபை 802.11 ஏசி, ப்ளூடூத் 5, ஜிபிஎஸ் / க்ளோனாஸ் /பீடோ, என்எப்சி, யூ.எஸ்.பி டைப் சி மற்றும் 3.5 மிமீ ஆடியோ ஜாக்உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது ரியல்மி 6ஐ ஸ்மார்ட்போன். குறிப்பாக இந்த சாதனம் ரூ.15,000-க்கு கீழ்அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Realme 6i to launch in india on today and more details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X