Home
Mobile

Realme 6i ஸ்மார்ட்போனின் விற்பனை இன்று முதல் துவக்கம்! விலை மற்றும் சலுகை விபரம்!

ரியல்மி நிறுவனத்தின் ரியல்மி 6 சீரிஸ் தொடரின் புதிய அறிமுகமாக ரியல்மி 6i ஸ்மார்ட்போன் சமீபத்தில் இந்தியச் சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த புதிய ரியல்மி 6i ஸ்மார்ட்போன் மலிவு விலையில் பல சலுகைகளுடன் இன்று தனது முதல் விற்பனையை ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் தளங்கள் வழியாக துவங்கியுள்ளது. இந்த புதிய ரியல்மி 6i ஸ்மார்ட்போன் வாங்க சிறந்த சலுகை விபரங்களை இப்பொழுது பார்க்கலாம்.

ரியல்மி 6i ஸ்மார்ட்போன்

இந்தியாவில் இப்போது வாங்கக் கிடைக்கும் ​​மிகவும் சக்திவாய்ந்த இடைப்பட்ட சாதனம் எனக் கூறப்படும் சாதனமாக ரியல்மி 6i ஸ்மார்ட்போன் கூறப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் நமது நாட்டில் முதல் முறையாகக் களமிறக்கப்படுகிறது. புதிய ரியல்மி 6i ஸ்மார்ட்போன் பல மிரட்டலான சிறப்பம்சங்களுடன் விற்பனைக்கு வந்துள்ளது. புதிய ஸ்மார்ட்போன் வாங்க நினைக்கும் நபர்கள் இந்த சாதனத்தைக் கருத்தில் கொள்ளலாம்.

ரியல்மி 6i சலுகை விபரம்

ரியல்மி 6i சலுகை விபரம்

ரியல்மி 6i ஸ்மார்ட்போனின் முதல் விற்பனை சலுகையாக எஸ்பிஐ கிரெடிட் கார்டு மற்றும் ஈஎம்ஐ பரிவர்த்தனைகளில் 5% உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது. ரூபே அட்டையில் ரூ.30 தள்ளுபடி (குறைந்தபட்ச ஆர்டர் மதிப்பு ரூ. 750), ரூபே அட்டையில் ரூ.75 தள்ளுபடி, ரூ. 75 வரையிலான யூபிஐ பரிவர்த்தனை தள்ளுபடி, ஆக்சிஸ் வங்கி கிரெடிட் கார்டில் 5% வரம்பற்ற கேஷ்பேக், ஆக்சிஸ் வங்கி பஸ் கிரெடிட் கார்டுடன் 5% தள்ளுபடி, மற்றும் விலை இல்லாத இஎம்ஐ விருப்பம்.

Realme 6i சிறப்பம்சங்கள்

Realme 6i சிறப்பம்சங்கள்

  • 6.5' இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்ப்ளே
  • பஞ்ச்-ஹோல் நாட்ச் கொண்ட 90 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீகித டிஸ்பிளே
  • மீடியாடெக் ஹீலியோ ஜி 90 டி பிராசஸர்
  • ரியல்மி UI உடன் கூடிய ஆண்ட்ராய்டு 10 இயங்குதளம்
  • 4 ஜிபி / 64 ஜிபி மற்றும் 6 ஜிபி / 64 ஜிபி
  • குவாட் ரியர் கேமரா அமைப்பு

    குவாட் ரியர் கேமரா அமைப்பு

    • 48 மெகா பிக்சல் கொண்ட பிரைமரி கேமரா
    • 8 மெகா பிக்சல் கொண்ட அல்ட்ரா-வைட் ஆங்கிள் கேமரா
    • 2 மெகா பிக்சல் கொண்ட மேக்ரோ லென்ஸ் கேமரா
    • 2 மெகா பிக்சல் கொண்ட பி & டபிள்யூ கேமரா
    • 16 மெகா பிக்சல் கொண்ட முன்பக்க செல்ஃபி கேமரா
    • பிங்கர் பிரிண்ட் ஸ்கேனர்
    • ஃபேஸ் அன்லாக் அம்சம்
    • 30W ஃப்ளாஷ் சார்ஜ் ஆதரவு
    • 4,300 எம்ஏஎச் பேட்டரி
    • நிறம்: லூனார் வைட் & எக்லிப்ஸ் பிளாக்
    • Realme 6i விலை மற்றும் விற்பனை

      Realme 6i விலை மற்றும் விற்பனை

      ரியல்மி 6i ஸ்மார்ட்போன் இன்று மதியம் 12 மணி முதல் ஆன்லைன் போர்டலான பிளிப்கார்ட் தளம் வழியாக விற்பனைக்கு வாங்க கிடைக்கிறது. இந்த புதிய ஸ்மார்ட்போனின் 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி சேமிப்பு வேரியண்ட் வெறும் ரூ. 12,999 என்ற விலையில் கிடைக்கிறது. அதேபோல், இதன் 6 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி சேமிப்பு வேரியண்ட் மாடல் ரூ.14,999 என்ற விலையில் தற்பொழுது விற்பனைக்குக் கிடைக்கிறது.

Best Mobiles in India

English summary
Realme 6i To Be Available For The First Time In India Today Know The Price, Offers And Features : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X