Home
Mobile

அறிமுகமாகும் Realme 6i- ரியல்மி 6 மாடலைவிட விலை குறைவா?

ரியல்மி 6 சீரிஸ் போன்களை அந்த நிறுவனம் அடுத்தடுத்து அறிமுகம் செய்து வருகிறது. ரியல்மி 6 மற்றும் 6 ப்ரோ போன்கள் அறிமுகத்திற்கு பிறகு தற்போது அந்த நிறுவனம் வழக்கம் போல் ரியல் மி 6ஐ போன் மியான்மரில் அறிமுகம் செய்கிறது.

ரியல்மி 6 மாடல் குறித்து பார்க்கலாம்:

ரியல்மி 6 மாடல் குறித்து பார்க்கலாம்:

மீடியாடெக்கின் கேமிங் சார்ந்த ஜி 90 டி சிப்செட் கொண்ட முதல் ரியல்மே ஸ்மார்ட்போன் இதுவாகும். 12nm இயங்குதளம் இரண்டு 2.05GHz கார்டெக்ஸ் A76 பெரிய கோர்கள் மற்றும் 6 2GHz கார்டெக்ஸ்- A55 ஆற்றல் திறன் கொண்ட கோர்கள், மாலி-ஜி 76 எம்சி 4 ஜிபியுடன் ஆக்டா-கோர் சிபியுவைக் கொண்டுள்ளது. மேலும் இது 4 ஜிபி, 6 ஜிபி மற்றும் 8 ஜிபி ரேம் ஆகிய அம்சங்களில் அறிமுகம் ஆகிறது.

கேமரா வசதி

கேமரா வசதி

இந்த போன் ரியல்மே 5-ஐ போலவே பெரிய டிஸ்பிளே வசதி கொண்டது. இருப்பினும் இதில் ஃபுல்ஹெச்.டி + ஆக மேம்படுத்தப்பட்டது, இப்போது அது 90 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்துடன் வருகிறது. இது கொரில்லா கிளாஸ் 3 மற்றும் 16MP F / 2.0 செல்ஃபி கேமராவிற்கு ஒரு பஞ்ச் ஹோல் சென்சார் கொண்டது.

பேட்டரி வசதி

பேட்டரி வசதி

ரியல்மி 6 போனானது, 64 ஜிபி மற்றும் 128 ஜிபி சேமிப்பக பதிப்புகளில் வருகிறது, இரண்டுமே இரட்டை சிம் ஸ்லாட்டுகளுடன் அமைந்திருப்பதோடு பிரத்யேக மைக்ரோ எஸ்டி ஸ்லாட்டைப் பெறுகின்றன. அதேபோல் 30W சார்ஜருடன் ஒரு மணி நேரத்தில் சார்ஜ் செய்யக்கூடிய 4,300 mAh பேட்டரியும் உள்ளது.

விலை, சேமிப்பு, ரேம் பவர்

விலை, சேமிப்பு, ரேம் பவர்

இந்த வகை போனானது மூன்று பதிப்புகளுடன் வருகின்றன. 64 ஜிபி சேமிப்பு 4 ரேம் வசதியுடன் வரும் மாடலின் விலை ரூ. 12,999, அதேபோல் 128 ஜிபி சேமிப்பு 6 ஜிபி ரேம் விலை ரூ. 14,999 ஆகவும் விற்கப்படுகிறது. மேலும் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி விலை ரூ. 15,999 ஆக விற்பனைக்கு வந்துள்ளது.

ரியல்மி 6ஐ ஸ்மார்ட்போன்

ரியல்மி 6ஐ ஸ்மார்ட்போன்

ரியல்மி 6ஐ ஸ்மார்ட்போன் அறிமுக விலை ரியல்மி 6, 6 ப்ரோ போன்களை விட குறைவாகவே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரியல்மி 6i ஆனது மீடியா டெக் ஹீலியோ ஜி 80 SoC கொண்டு இயக்கப்படுகிறது. கேமரத்துறையை பொறுத்தவரை, ஸ்மார்ட்போனின் பின்புறத்தில் க்வாட் கேமரா அமைப்பு உள்ளது, அதில் 48 மெகாபிக்சல் சென்சார் இருக்கிறது.

5,000mAh பேட்டரி வசதி

5,000mAh பேட்டரி வசதி

அதேபோல் கேமராவை பொருத்தவரை 16 மெகாபிக்சல் அளவிலான செல்பீ கேமரா, 18W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு கொண்ட 5,000mAh பேட்டரி பொருத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ரியல்மி 6I போனானது ஆண்ட்ராய்டு 10 அடிப்படையில் கலர் ஓஎஸ் 7.0 மூலம் இயக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Realme 6i mobile launch today here the expected price and specification
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X