Realme 6i இன்று அறிமுகம்: ஹீலியோ ஜி90டி சிப்செட் உள்ளிட்ட அட்டகாச அம்சங்கள்!

|

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ரியல்மி 6ஐ ஸ்மார்ட்போன் ஹீலியோ ஜி90டி சிப்செட் உள்ளிட்ட அட்டகாச அம்சங்களோடு இன்று மதியம் 12.30 மணிக்கு அறிமுகமாக உள்ளது.

புதிய பட்ஜெட் ஸ்மார்ட்போன்

புதிய பட்ஜெட் ஸ்மார்ட்போன்

Realme 6i என்ற புதிய பட்ஜெட் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகப்படுத்துகிறது. ரியல்மி 6 தொடரின் கீழ் மூன்றாவது மாறுபாடாக இந்த ஸ்மார்ட்போன் இருக்கும். இந்த ஸ்மார்ட்போன் ரியல்மி 6 மற்றும் ரியல்மி 6 ப்ரோவின் அடுத்த தொடராக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று மதியம் 12:30 மணிக்கு அறிமுகம்

இன்று மதியம் 12:30 மணிக்கு அறிமுகம்

Realme 6i ஸ்மார்ட்போன் இன்று மதியம் 12:30 மணிக்கு அறிமுகமாக உள்ளது. இந்த பட்ஜெட் ஸ்மார்ட்போன் அறிமுகமானது ஆன்லைன் மூலம் தொடங்கப்பட இருக்கிறது. இந்த லைவ் ஸ்ட்ரீமை விருப்பமுள்ளவர்கள் நிறுவனத்தின் யூடியூப் சேனல் மற்றும் சமூகவலைதளத்தின் மூலம் பார்க்கலாம்.

6.5-இன்ச் எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளே

6.5-இன்ச் எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளே

ரியல்மி 6i ஸ்மார்ட்போனில் எதிர்பார்க்கப்படும் அம்சங்கள் குறித்து பார்க்கலாம். 6.5-இன்ச் எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 2400 x 1080பிக்சல் திர்மானம் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 3பிளஸ் பாதுகாப்பு வசதியுடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக 20:9 என்ற திரைவிகிதம் அடிப்படையில் இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும்.

4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி வசதி

4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி வசதி

இந்த ஸ்மார்ட்போனில் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது,பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்புஆதரவு கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும். மேலும் இந்த சாதனத்தின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது இந்நிறுவனம்.

WhatsApp பயன்பாட்டில் புதிதாக களமிறங்கும் அடுத்த மிரட்டல் அம்சங்கள் இதுதான்!WhatsApp பயன்பாட்டில் புதிதாக களமிறங்கும் அடுத்த மிரட்டல் அம்சங்கள் இதுதான்!

ஆக்டோ-கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி90டி

ஆக்டோ-கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி90டி

ரியல்மி 6ஐ ஸ்மார்ட்போனில் மிகவும் எதிர்பார்த்த ஆக்டோ-கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி90டி 12என்எம் பிராசஸர் வசதி உள்ளது,மேலும் ஏஆர்எம் மாலி-ஜி76 3இஇஎம்சி4 ஜபியு வசதியுடன் ஆணட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டுள்ளது இந்த சாதனம், எனவே இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

48எம்பி பிரைமரி கேமரா

48எம்பி பிரைமரி கேமரா

இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி செகன்டரி சென்சார் +2எம்பி மேக்ரோ சென்சார் +2எம்பி டெப்த் சென்சார் என மொத்தம் நான்கு கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் 16எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

4300எம்ஏஎச் பேட்டரி

4300எம்ஏஎச் பேட்டரி

ரியல்மி 6ஐ ஸ்மார்ட்போனில் 4300எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் 30வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, கைரேகை சென்சார் உள்ளிட்ட ஆதரவுகளும் இவற்றுள் அடக்கம்.

எதிர்பார்க்கப்படும் விலை

எதிர்பார்க்கப்படும் விலை

4 ஜி வோல்டிஇ,வைஃபை 802.11 ஏசி, புளூடூத் 5, ஜிபிஎஸ் / க்ளோனாஸ் /பீடோ, என்எப்சி, யூ.எஸ்.பி டைப் சி மற்றும் 3.5 மிமீ ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது ரியல்மி 6ஐ ஸ்மார்ட்போன். குறிப்பாக இந்த சாதனம் ரூ.15,000-க்கு கீழ் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Realme 6i Launch Set on Today in India with Mediatek helio G90T

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X