Home
Mobile

Realme 6 மற்றும் Realme 6 Pro இவ்வளவு கம்மி விலையிலா அறிமுகமாகிறது?

இந்தியாவில் மிகவும் அதிகம் எதிர்பார்க்கப்படும் ரியல்மி 6 மற்றும் ரியல்மி 6ப்ரோ ஸ்மார்ட்போன்கள் இன்று மதிய அறிமுகம் செய்யப்படும் எனத் தகவல் வெளிவந்துள்ளது, கொரோனா வைரஸ் பீதியின் காரணமான இந்த ஸ்மார்ட்போன்களின் அறிமுகம் சற்று தாமதம் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது.

 ரியல்மி 6 மற்றும் ரியலமி 6ப்ரோ

ரியல்மி 6 மற்றும் ரியலமி 6ப்ரோ

மேலும் இந்த ரியல்மி 6 மற்றும் ரியலமி 6ப்ரோ ஸ்மார்ட்போன்களின் சில குறிப்புகள் ஆன்லைன் வெளிவந்துள்ளது, அதன்படிவெளிவந்த தகவலின் அடிப்படையில் ரியல்மி 6 மற்றும் ரியல்மி 6 ப்ரோ ஸ்மார்ட்போன்கள் முறையே ரூ.9,999 மற்றும் ரூ.13,999 க்கு அறிமுகம் ஆகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 அதிகாரப்பூர்வ விலை

அதிகாரப்பூர்வ விலை

இருந்தபோதிலும் இநத் ஸ்மார்ட்போன்களின் அதிகாரப்பூர்வ தகவல்களின் அடிப்படையில் பார்த்தால், இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களின் அதிகாரப்பூர்வ விலை சற்று அதிகமாக இருக்கும் என தெரிகிறது.

சி.எம்.ஒ பிரான்சிஸ் வாங்

சி.எம்.ஒ பிரான்சிஸ் வாங்

குறிப்பாக ரியல்மி இந்தியாவின் சி.எம்.ஒ பிரான்சிஸ் வாங் பதிவிட்டுள்ள ட்வீட் அடிப்படையில், ரியல்மி 6 ஆனது விலைக் கண்ணோட்டத்தின் கீழ் ரியல்மி 5 ஸ்மார்ட்போனின் வாரிசாக இருக்காது என்று கூறியுள்ளார்.

அதிக விலைக்கு அறிமுகம் ஆகும்

அதிக விலைக்கு அறிமுகம் ஆகும்

எனவே இந்த புதிய ரியல்மி தொடர் ஆனது பழைய ரியல்மி 5 ஸ்மார்ட்போன்களின் வரம்பை விட சற்று அதிக விலைக்குஅறிமுகம் ஆகும் என்பதை அவர் மறைமுகமாக சுட்டிக்காட்டி உள்ளார்.

64எம்பி குவாட் கேமராக்கள்

64எம்பி குவாட் கேமராக்கள்

மேலும் இந்த ரியல்மி 6 தொடர் ஸ்மார்ட்போன்கள் ஆனது 90ஹெர்ட்ஸ் டிஸ்பிளே மற்றும் 64எம்பி குவாட் கேமராக்கள் என அசத்தலான அம்சங்களுடன் வெளிவரும் என்பதால் விலை கூடுதலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

91மொபைல்ஸ் அறிக்கையின் அடிப்படையில்

91மொபைல்ஸ் அறிக்கையின் அடிப்படையில்

மேலும் 91மொபைல்ஸ் அறிக்கையின் அடிப்படையில் ரியல்மி 6 ஆனது ரூ.10,999 க்கு அறிமுகப்படுத்தப்படலாம், இது 90 ஹெர்ட்ஸ் டிஸ்ப்ளே கொண்ட மலிவான ஸ்மார்ட்போன்களில் ஒன்றாக இருக்கும் என்று தெரிவிக்கபபட்டுள்ளது.

YouTube மூலம் பார்க்கலாம்

குறிப்பாக இந்த ரியலமி 6 தொடர் சாதனங்கள் போக்கோ எக்ஸ் 2 ஸ்மார்ட்போனை நேரடியாக எதிர்க்கும் வண்ணம் ரூ.15,999 க்கு அறிமுகம் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த சாதங்களின் அறிமுகமத்தை நேரடியாக இந்த YouTube மூலம்பார்க்கலாம்.

30W ஃப்ளாஷ் சார்ஜ்

30W ஃப்ளாஷ் சார்ஜ்

இந்த ரியல்மி 6 மற்றும் ரியல்மி 6ப்ரோ சாதனங்கள் ஆனது 90 ஹெர்ட்ஸ் ரெப்ரெஷ் ரேட் கொண்ட முழு எச்டி10 டூயல் பஞ்ச்-ஹோல் டிஸ்ப்ளே வடிவமைப்பை கொண்டிருக்கும் எனத் தகவல் வெளிவந்துள்ளது.மேலும் டூயல் செல்பீ கேமரா, 64 எம்பி க்வாட்-கேமரா அமைப்பு மற்றும் 20 எக்ஸ் ஸூம், 8 ஜிபி வரை ரேம், ஸ்னாப்டிராகன் 720 ஜி எஸ்ஓசி, 30W ஃப்ளாஷ் சார்ஜ்தொழில்நுட்பம் உள்ளிட்ட ஆதரவுகளுடன் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Realme 6, Realme 6 Pro All Set to Launch Today: Price, Specs and More : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X