Just In
- 26 min ago
அறிமுகத்துக்கே முன்பே ஆர்டர்: மோட்டோரோலா எட்ஜ் எஸ் சிறப்பம்சங்கள் இதோ!
- 1 hr ago
ஒப்போ ஏ55 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்.! என்ன விலை? என்னென்ன அம்சங்கள்?
- 3 hrs ago
ஒரே ராக்கெட்டில் 143 செயற்கைக்கோள்கள்: ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் புதிய உலக சாதனை.!
- 3 hrs ago
பிளிப்கார்ட் பிக் சேமிப்பு தின விற்பனை: சியோமி எம்ஐ 10டி ஸ்மார்ட்போன் வாங்க அரிய வாய்ப்பு!
Don't Miss
- News
நாட்டின் 71ஆவது குடியரசு தின விழா... முதல்முறையாக அணிவகுப்பில் கலந்துகொள்ளும் வங்கதேச ராணுவம்
- Movies
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற இளம் நடிகை தூக்கிட்டு தற்கொலை.. ரசிகர்கள் அதிர்ச்சி!
- Education
ரூ.31 ஆயிரம் ஊதியத்தில் தமிழக வேளாண் பல்கலையில் பணியாற்ற ஆசையா?
- Lifestyle
குழந்தைகள் சுறுசுறுப்புடன் இருக்க செய்ய வேண்டிய சில யோகாசனங்கள்!
- Finance
நிர்மலா சீதாராமன் அறிவிப்புக்காக காத்திருக்கும் 6 ஸ்டார்ட்அப் நிறுவனங்கள்..! #Paytm
- Sports
பொறுமை + சகிப்புத்தன்மை = புஜாரா... பிறந்தநாளில் தெறிக்கவிடப்பட்ட வாழ்த்துக்கள்!
- Automobiles
சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்குவதற்கு 50,000 பேர் பதிவு: பஜாஜ் தகவல்!
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
Realme 6 Pro: ISRO சிறப்பு தொழில்நுட்பத்துடன் விற்பனை., ஆஹா., விலை இவ்வளவு தானா?
இந்தியாவில் மிகவும் அதிகம் எதிர்பார்க்கப்படும் ரியல்மி 6 மற்றும் ரியல்மி 6ப்ரோ ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாகி விற்பனைக்கு வந்துள்ளது. இந்த ஸ்மார்ட் போன் முன்னதாகவே வெளியாக வேண்டிய நிலையில் கொரோனா வைரஸ் பீதியின் காரணமாக போன் வெளியீட்டில் தாமதம் ஏற்பட்டது.

பட்ஜெட் விலையில் அறிமுகம்
ரியல்மி நிறுவனம் தங்களது புதுமாடல் மொபைல் போன்களை அடுத்தடுத்து சந்தையில் அறிமுகம் செய்து கொண்டே இருக்கிறது. மேலும் இந்த மொபைல் போன்கள் அனைத்தும் பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்யப்பட்டு அனைத்து தரப்பு வாடிக்கையாளர்களையும் கவர்ந்து வருகிறது.

கொரோனா பீதி காரணமாக தாமதம்
ரியல்மி நிறுவனம் தங்களது ரியல்மி 6 மற்றும் ரியல்மி 6 ப்ரோ மாடல் மொபைல்களை அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட் போன் அறிமுகத்திற்கு அனைத்து தரப்பு வாடிக்கையாளர்களும் காத்திருந்தனர். ஆனால் இந்த ஸ்மார்ட் போன்கள் முன்னதாகவே அறிமுகமாக இருந்த நிலையில் கொரோனா பீதி காரணமாக தாமதமானது.

ரியல்மி 6 மாடல் போன்
64 ஜிபி சேமிப்பு 4 ரேம் வசதியுடன் வரும் மாடலின் விலை ரூ. 12,999, அதேபோல் 128 ஜிபி சேமிப்பு 6 ஜிபி ரேம் விலை ரூ. 14,999 ஆகவும் விற்கப்படுகிறது. மேலும் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி விலை ரூ. 15,999 ஆக விற்பனைக்கு வந்தது. இந்த போன் ரியல்மி ரசிகர்களிடையே பெரிய வரவேற்பு பெற்றது என்றே கூறலாம்.

ரியல்மி 6 ப்ரோ
ரியல்மி 6 ப்ரோ புத்தம் புதிய ஸ்னாப்டிராகன் 720 ஜி சிப்செட்டுடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 8nm செயல்பாட்டில் கட்டப்பட்ட இது 2.3GHz ஆக்டா கோர் கிரையோ 465 CPU, ஒரு அட்ரினோ 618 GPU மற்றும் 6GB அல்லது 8GB RAM ஐ கொண்டுள்ளது.

கேமரா வசதியுடன் அறிமுகம்
ரியல்மி 6 ப்ரோ, 6 எல்சிடி 90 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்தையும் ஃபுல்ஹெச்.டி + ரெசல்யூஷனையும் கொண்டுள்ளது, இது இரண்டு செல்ஃபி கேமராக்களை வழங்கும் மாத்திரை வடிவ பஞ்ச் துளை கொண்டது. அவற்றில் 16MP f / 2.0 சோனி IMX471 தொகுதி மற்றும் 105 டிகிரி பார்வையுடன் 8MP அல்ட்ராவைடு ஸ்னாப்பர் ஆகியவை அடங்கும்.

பின்புற கேமரா அமைப்பு
பின்புறத்தில் கேமரா அமைப்பு சற்று சுவாரஸ்யமாக உள்ளது என்றே கூறலாம். 64 எம்.பி கேமராவுடன் 12 எம்.பி எஃப் / 2.5 டெலிஃபோட்டோ ஷூட்டர், 8 எம்பி அல்ட்ராவைடு ஆங்கிள் ஸ்னாப்பர் மற்றும் 2 எம்பி மேக்ரோ லென்ஸ் ஆகியவை உள்ளன. ரியல்மி 6 ப்ரோ யுஐஎஸ் மற்றும் யுஐஎஸ் மேக்ஸ் வீடியோ உறுதிப்படுத்தலை ஆதரிக்கிறது.

பேட்டரி வசதி
ரியல்மே 6 ப்ரோவின் பேட்டரி வசதியை பொறுத்தவரையில் 30W வேகமான சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 4,300 எம்ஏஎச் பேட்டரி வசதியுடன் கிடைக்கிறது.

ரியல்மி 6 ப்ரோ சிறப்பு நேவிக்
இரண்டு மாடல் தொலைபேசிகளிலும் ஆண்ட்ராய்டு 10 உடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் புரோ மாடல் நேவிக் - இந்தியாவின் சொந்த செயற்கைக்கோள் வழிசெலுத்தல் அமைப்பை ஆதரிக்கிறது.

விலை, ரேம், சேமிப்பு வசதிகள்
ரியல்மி 6 ப்ரோ 64 ஜிபி சேமிப்பு வசதியுடன் 6 ஜிபி ரேம் வசதியும் கொண்டுள்ளது. இந்த போனின் விலை ரூ.16,999-க்கு விற்கப்படுகிறது. மேலும் இது 128 ஜிபி சேமிப்பு வசதியுடனும் 6 ஜிபி ரேம் பவருடனும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த போனின் விலை ரூ.17,999 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேபோல் 128 ஜிபி சேமிப்புடன் 8 ரேம் பவருடன் வெளியாகும் இந்த போனானது ரூ.18,999-க்கு விற்கப்படுகிறது.

மார்ச் 13 ஆம் தேதி அறிமுகம்
இந்த போனை மார்ச் 13 ஆம் தேதி (இன்று) மதியம் 12 தொடங்கி பிளிப் கார்ட் மற்றும் ரியல்மி.காம்-ல் வாங்கலாம். ரியல்மி 6 மாடல் போன் அறிமுகத்தின் போது பெரும்பாலானோர் ரியல்மி 6 ப்ரோ அறிமுகத்திற்கே காத்திருந்தனர். இந்த நிலையில் தற்போது இந்த போன் விற்பனைக்கு வந்துள்ளது.
-
92,999
-
17,999
-
39,999
-
29,400
-
38,990
-
29,999
-
16,999
-
23,999
-
18,170
-
21,900
-
14,999
-
17,999
-
42,099
-
16,999
-
23,999
-
29,495
-
18,580
-
64,900
-
34,980
-
45,900
-
17,999
-
54,153
-
7,000
-
13,999
-
38,999
-
29,999
-
20,599
-
43,250
-
32,440
-
16,190