Home
Mobile

இப்போ இன்னும் குறைந்த விலை: ரியல்மி 6 மற்றும் ரியல்மி 6i அதிரடி விலைக்குறைப்பு

ரியல்மி நிறுவனம் நேற்றைய நிகழ்வில் ரியல்மி 7 மற்றும் ரியல்மி 7 ப்ரோ அறிமுகப்படுத்தியது. இதன்பின் ரியல்மி 6 மற்றும் 6i மாடலுக்கு விலைக்குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

ரியல்மி 6 மற்றும் ரியல்மி 6ஐ

ரியல்மி 6 மற்றும் ரியல்மி 6ஐ

ரியல்மி 6 மற்றும் ரியல்மி 6ஐ ஸ்மார்ட்போனுக்கு இந்தியாவில் அதிரடி விலைக்குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் நேற்றைய தினம் ஒரு நிகழ்வின் மூலம் ரியல்மி 7 மற்றும் ரியல்மி 7 ப்ரோ அறிமுகம் செய்யப்பட்டது. அதன்பின்னர் இந்த விலைக்குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

ரியல்மே 6 தற்போதைய விலை

ரியல்மே 6 தற்போதைய விலை

ரியல்மி 6 தற்போதைய விலை குறித்து பார்க்கலாம். இந்த ஸ்மார்ட்போனானது, 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி சேமிப்பிற்கு ரூ .13,999 எனவும் 6 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி சேமிப்பிற்கு ரூ .14,999 எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதோடு 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி சேமிப்பிற்கு ரூ .15,999 எனவும் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி சேமிப்பு ரூ.16,999 எனவும் விற்கப்படுகிறது. இது காமட் ப்ளூ மற்றும் காமட் வைட் நிறங்களில் விற்கப்படுகிறது.

அறிமுகப்படுத்தப்பட்ட விலை

அறிமுகப்படுத்தப்பட்ட விலை

ரியல்மி 6 மற்றும் ரியல்மி 6ஐ அறிமுகப்படுத்தப்பட்ட விலை குறித்து பார்க்கையில், ரியல்மி 6 4ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி சேமிப்பிற்கு ரூ.12,999 எனவும் 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் ரூ.14,999 எனவும் 8ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி சேமிப்பு வசதிக்கு ரூ.15,999 எனவும் விற்கப்படுகிறது. ஆனால் இந்தியாவில் ஜிஎஸ்டி காரணமாக இந்த மாடலுக்கு விலை உயர்வு அறிவிக்கப்பட்டது.

ஜிஎஸ்டி காரணமாக விலை உயர்வு

ஜிஎஸ்டி காரணமாக விலை உயர்வு

இதையடுத்து ரியல்மி 6 விலை குறித்து பார்க்கையில் 4ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி சேமிப்பிற்கு ரூ. 14,999 எனவும், 6ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி சேமிப்பின் விலை ரூ.15,999 எனவும் ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி சேமிப்பின் விலை ரூ.16,999 எனவும் விற்கப்படுகிறது. அதேபோல் 8ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி சேமிப்பின் விலை ரூ.17,999 எனவும் விலை உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ரியல்மி 6ஐ மாடல் விலை

ரியல்மி 6ஐ மாடல் விலை

மேலும் ரியல்மி 6ஐ குறித்து பார்க்கையில் இந்த ஸ்மார்ட்போன் 4ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி சேமிப்பு ரூ.12,999 எனவும் 6ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி சேமிப்பு விலை ரூ.13,999 எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இந்த ஸ்மார்ட்போனின் 6ஜிபி ரேம் விலை ரூ.14,999-க்கு அறிமுகப்படுத்தப்பட்டது.

6.5 அங்குல முழு எச்டி+ டிஸ்ப்ளே

6.5 அங்குல முழு எச்டி+ டிஸ்ப்ளே

ரியல்மி 6 ஸ்மார்ட்போனானது 6.5 அங்குல முழு எச்டி + டிஸ்ப்ளே, 2400 x 1080 பிக்சல்கள் திரை தெளிவுத்திறன் மற்றும் குவாட்-கேமரா அமைப்புக் கொண்டுள்ளது, இதன் கேமரா அம்சங்கள் குறித்து பார்க்கையில் 64 மெகாபிக்சல் முதன்மை லென்ஸ், 8 மெகாபிக்சல் அகல-கோண லென்ஸ், 2 மெகாபிக்சல் போர்ட்ரெய்ட் லென்ஸ் மற்றும் 2 மெகாபிக்சல் மேக்ரோ ஷூட்டர் ஆகியவை கொண்டுள்ளது. மேலும் 16 மெகாபிக்சல் செல்பி ஷூட்டர் வசதியும் இதில் உள்ளது. அதேபோல் இதில் மீடியா டெக் ஹீலியோ ஜி 90 டி செயலி மூலம் இயக்கப்படுகிறது. இது ஆண்ட்ராய்டு 10 இல் இயங்குகிறது, மேலும் 4300 எம்ஏஎச் பேட்டரி அம்சம் இதில் உள்ளது.

4300 எம்ஏஹெச் பேட்டரி

4300 எம்ஏஹெச் பேட்டரி

ரியல்மி 6i 6.5 இன்ச் முழு எச்டி + எல்சிடி டிஸ்ப்ளே 2400 x 1080 பிக்சல்கள் தீர்மானம் கொண்டுள்ளது. இது 30W பாஸ்ட் சார்ஜிங் அம்சத்தோடு 4300 எம்ஏஹெச் பேட்டரி இதில் உள்ளது. அதேபோல் ஆக்டா-கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி 90 செயலி இயக்கமும், ஆண்ட்ராய்டு 10 ஆதரவு அம்சமும் உள்ளது. குவாட் கேமரா அமைப்பு குறித்து பார்க்கையில் இதில் 48 மெகாபிக்சல் கேமரா, 8 மெகாபிக்சல் சென்சார், 2 மெகாபிக்சல் மேக்ரோ சென்சார் மற்றும் 2 மெகாபிக்சல் ஆழம் சென்சார் ஆகியவை அடங்கும். அதோடு 16 மெகாபிக்சல் செல்பி ஷூட்டர் வசதியும் இதில் உள்ளது.

Best Mobiles in India

English summary
Realme 6 and Realme 6i Gets a Price Cut in India:Here the Current Price and Details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X