லட்டு மாதிரி ஆஃபர்.. ரியல்மியின் 5ஆம் ஆண்டுவிழா.. ரூ.10000 போதும்.. நார்சோ மாடலை அள்ளலாம்.. ஆர்டர் தெறிக்குது!
ரியல்மி நிறுவனத்தின் 5ஆம் ஆண்டுவிழா விற்பனை (Realme 5th Anniversary Sale) இன்று (ஆகஸ்ட் 23) முதல் ஆகஸ்ட் 29ஆம் தேதி வரை நடக்கிறது. இந்த நாட்களில் ரியல்மி நார்சோ என்55, 60 மற்றும் 60 ப்ரோ போன்களுக்கு அதிரடி தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.
ரியல்மி நார்சோ என்55 அம்சங்கள் (Realme Narzo N55 Specifications): இந்த போன் 6.72 இன்ச் (2400 x 1080 பிக்சல்கள்) ஃபுல்எச்டி பிளஸ் (FHD+) எல்சிடி டிஸ்பிளே கொண்டுள்ளது. இந்த டிஸ்பிளேவில் 90Hz ரெஃப்ரெஷ் ரேட், 180Hz டச் சாம்பிளிங் ரேட் மற்றும் 680 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் வருகிறது.

ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் கொண்ட ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி88 12என்எம் (Octa Core MediaTek Helio G88 12nm) சிப்செட் கொடுக்கப்பட்டுள்ளது. அதோடு, ஆர்ம் மாலி-ஜி52 ஜிபியு (ARM Mali-G52 GPU) கிராபிக்ஸ் கார்டு வருகிறது. இந்த போன் 4 ஜிபி ரேம் + 64 ஜிபி மெமரி மற்றும் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி ஆகிய 2 வேரியண்ட்களில் விற்பனைக்கு வருகிறது.
அதோடு 1 டிபி வரை மைக்ரோஎஸ்டி (microSD) கார்டு சப்போர்ட் உள்ளது. இந்த போன் டூயல் ரியர் கேமரா செட்டப் கொண்டுள்ளது. அந்த வகையில், 64 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி டெப்த் கேமரா வருகிறது. அதோடு எல்இடி பிளாஷ் இடம் பெற்றுள்ளது. 8 எம்பி செல்பீ கேமரா கொடுக்கப்பட்டுள்ளது.
33W சூப்பர்வூக் (SuperVOOC) ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 5000mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. இந்த போனின் 4 ஜிபி ரேம் + 64 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.10,999ஆகவும் 6 ஜிபி ரேம் + 28 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.12,999ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலையில் 4 ஜிபி மாடலுக்கு ரூ.750 தள்ளுபடியும், 6 ஜிபி மாடலுக்கு ரூ.1000 தள்ளுபடியும் வழங்கப்படுகிறது.
ரியல்மி நார்சோ 60 அம்சங்கள் (Realme Narzo 60 Specifications): இந்த ரியல்மி போன் 6.43 இன்ச் (2400 x 1080 பிக்சல்கள்) ஃபுல்எச்டி பிளஸ் அமோலெட் (AMOLED) டிஸ்பிளே கொண்டுள்ளது. இந்த டிஸ்பிளேவில் 90Hz ரெஃப்ரெஷ் ரேட், 180Hz டச் சாம்பிளிங் ரேட், 1000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் வருகிறது.
அதோடு கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 (Corning Gorilla Glass 5) பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் கொண்ட ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6020 7என்எம் (Octa Core MediaTek Dimensity 6020 7nm) சிப்செட் கொடுக்கப்பட்டுள்ளது. அதோடு மாலி-ஜி57 எம்சி2 ஜிபியு (Mali-G57 MC2 GPU) கிராபிக்ஸ் கார்டு வருகிறது.
இந்த போனில் 64 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி டெப்த் கேமரா வருகிறது. 16 எம்பி செல்பி கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. 33W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 5000mAh பேட்டரி வருகிறது. இந்த போனின் 8ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.17,999ஆகவும் 8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.19,999 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த 2 மாடல்களுக்கும் ரூ.1000 தள்ளுபடி வழங்கப்படுகிறது.
ரியல்மி நார்சோ 60 ப்ரோ அம்சங்கள் (Realme Narzo 60 Pro Specifications): இந்த போன் 6.7 இன்ச் (2412×1080 பிக்சல்கள்) கர்வ்ட் அமோலெட் டிஸ்பிளே கொண்டுள்ளது. இதில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 360Hz டச் சாம்பிளிங் ரேட், 2160Hz PWM டிம்மிங் வருகிறது.
ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் கொண்ட மீடியாடெக் டைமன்சிட்டி 7050 6என்எம் (MediaTek Dimensity 7050 6nm) சிப்செட் வருகிறது. அதோடு மாலி-ஜி68 எம்சி4 ஜிபியு (Mali-G68 MC4 GPU) கிராபிக்ஸ் கார்டு கொடுக்கப்பட்டுள்ளது. 100 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி போர்ட்ராய்ட் கேமரா வருகிறது. 16 எம்பி செல்பீ கேமரா கொடுக்கப்பட்டுள்ளது.
67W சூப்பர்வூக் (SuperVOOC) ஃபாஸ்ட் சார்ஜிக் கொண்ட 5000mAh பேட்டரி வருகிறது. இந்த போனின் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.23,999 ஆகவும், 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.26,999ஆகவும் நிர்ணியிக்கப்பட்டுள்ளது.
அதேபோல 12 ஜிபி ரேம் + 1 டிபி மெமரி மாடலின் விலை ரூ.29,999ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் 128 ஜிபி மாடலுக்கு ரூ.1000 தள்ளுபடி + நோ காஸ்ட் இஎம்ஐ வழங்கப்படுகிறது. அதேபோல, 256 ஜிபி மாடலுக்கும் 1 டிபி மாடலுக்கும் தலா ரூ.1,500 தள்ளுபடி வழங்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








