ஓபன் சேல் விற்பனைக்கு வந்தது அசத்தலான ரியல்மி 5எஸ்.!
ரியல்மி நிறுவனத்தின் ரியல்மி 5எஸ் மாடல் கடந்த மாதம் அறிமுகம் செய்யப்பட்டது, முன்னதாக ஃபிளாஷ் முறையில் விற்பனை செய்யப்பட்ட ரியல்மி 5எஸ் ஸ்மார்ட்போன் தற்சமயம் ஓபன் சேல் முறையில் விற்பனை செய்யப்படுகிறது.

அதன்படி இந்த ஸ்மார்ட்போன் மாடலை பிளிப்கார்ட் மற்றும் ரியல்மி வலைதளத்தில் இனிமேல் எளிமையான வாங்க முடியும். மேலும் இந்த ஸ்மார்ட்போனின் விலை மற்றும் பல்வேறு சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட ரியல்மி 5எஸ் ஸ்மார்ட்போனின் விலை ரூ.9,999-ஆக உள்ளது, பின்பு 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ரியல்மி 5எஸ் ஸ்மாரட்போனின் விலை ரூ.10,999-என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரியல்மி 5எஸ் சாதனம் பொதுவாக 6.51-இன்ச் எச்டி பிளஸ் டிஸபிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 1600 x 720 பிக்சல் திர்மானம் மற்றும் காரினிங் கொரில்லா கிளாஸ் 3பிளஸ் பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

இந்த ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 665எஸ்ஒசி சிப்செட் வசதி இடம்பெற்றள்ளது, பின்பு ஆண்ட்ராய்டு 9.0பை
இயங்குளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக
இருக்கும்.

ரியல்மி 5எஸ் ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பிமைரி சென்சார் + 8எம்பி வைட் ஆங்கிள் லென்ஸ் + 2எம்பி டெப்த் சென்சார் + 2எம்பி மேக்ரோ லென்ஸ் என நான்கு கேமராக்கள் இடம்பெற்றுள்ளது, பின்பு 13எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ் உள்ளிட்ட பல்வேறு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்

ரியல்மி 5எஸ் ஸ்மார்ட்போனில் 5000எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு 4ஜி வோல்ட்இ, வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி போர்ட், டூயல்-சிம் உள்ளிட்ட பல்வேறு ஆதரவுகளை கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.


Click it and Unblock the Notifications