ஸ்னாப்டிராகன் 665சிப்செட் வசதியுடன் களமிறங்கும் ரியல்மி 5எஸ்.!
ரியல்மி நிறுவனம் விரைவில் தனது ரியல்மி5எஸ் ஸ்மார்ட்போன் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது, குறிப்பாக நாளை இந்நிறுவனம் ரியல்மி எக்ஸ்2 ப்ரோ சாதனத்தை இந்திய சந்தையில் களமிறக்க உள்ளது அதனுடன் இந்த ரியல்மி5எஸ் ஸ்மார்ட்போனும் அறிமுகம் செய்யப்பட வாய்ப்பு உள்ளது.

ஆன்லைனில் வெளிவந்த தகவலின் அடிப்படையில் இந்த ரியல்மி5எஸ் ஸ்மார்ட்போன் ஆனது பிளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது,மேலும் இந்த சாதனத்தில் குறிப்பிட்ட சில அம்சங்களைப் பார்ப்போம்.
ரியல்மி 5எஸ் ஸ்மார்ட்போன் ஆனது 6.5-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டு வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, பின்பு 1080பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த
சாதனம்.

ரியல்மி 5எஸ் ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 665சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது, பின்பு ஆண்ட்ராய்டு இயங்குதளம் இவற்றுள் இடம்பெற்றுள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.
இந்த ஸ்மார்ட்போனில் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி இடம்பெற்றுள்ளதாக அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ரியல்மி 5எஸ் ஸ்மார்ட்போனின் பின்புறம் நான்கு கேமராக்கள் இடம்பெற்றுள்ளது எனத் தகவல் வெளிவந்துள்ளது,மேலும் எல்இடி பிளாஸ், 3டி அம்சம்,செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு வசதிகள் இவற்றுள் அடக்கம் எனத் தகவல் கிடைத்துள்ளது.


Click it and Unblock the Notifications