பட்ஜெட் விலையில் Realme 5i ஸ்மார்ட்போன் அறிமுகம்.!
வியட்நாமில் ரியல்மி நிறுவனம் தனது ரியல்மி 5ஐ ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்துள்ளது, குறிப்பாக பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் வரும் ஜனவரி 9-ம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

6.5-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே
ரியல்மி 5ஐ ஸ்மார்ட்போன் மாடல் 6.5-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 720 x 1600 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது. குறிப்பாக வாட்டர் டிராப் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

64ஜிபி உள்ளடக்க மெமரி
ரியல்மி 5ஐ ஸ்மார்ட்போனில் 3ஜிபி/4ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி /64ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது, மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேமரா வசதி
இந்த ஸ்மார்போனின் பின்புறம் 12எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி வைடு ஆங்கிள் லென்ஸ்+ 2எம்பி டெப்த் சென்சார் + 2எம்பி மேக்ரோ சென்சார் என மொத்தம் நான்கு கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் 8எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

பேட்டரி மற்றும் விலை
ரியல்மி 5ஐ ஸ்மார்ட்போனில் 5000எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, மேலும் வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகள் அடக்கம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஆனது ரூ.11,500-விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஸ்னாப்டிராகன் 665எஸ்ஒசி
சிப்செட் இந்த ஸ்மார்ட்போன் மாடல் குவால்காம் ஸ்னாப்டிராகன் 665எஸ்ஒசி சிப்செட் வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு 9பை இயங்குதளத்தை கொண்டு இந்த சாதனம் வெளிவந்துள்ளது என்பதால் பயன்படுத்துவதற்கு அருமையாக இருக்கும்.


Click it and Unblock the Notifications








