ஜனவரி 6: 6.52-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் ரியல்மி 5ஐ.!

|

ரியல்மி நிறுவனம் வரும் ஜனவரி 6-ம் தேதி தனது புதிய ரியல்மி 5ஐ ஸ்மார்ட்போன் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது, குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் அதிநவீன தொழில்நுட்ப வசதியுடன் வெளிவரும் என அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் பற்றி ஆன்லைனில் கசிந்த சில விவரங்களைப் பார்ப்போம்.

அட்டகாசமான டிஸ்பிளே

அட்டகாசமான டிஸ்பிளே

ரியல்மி 5ஐ ஸ்மார்ட்போன் மாடல் 6.52-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 720 x 1600 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவரும். குறிப்பாகவாட்டர் டிராப் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

சிப்செட் வசதி

சிப்செட் வசதி

இந்த ஸ்மார்ட்போன் மாடல் குவால்காம் ஸ்னாப்டிராகன் 665எஸ்ஒசி சிப்செட் வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு 9பை இயங்குதளத்தை கொண்டு இந்த சாதனம்
வெளிவரும் என்பதால் பயன்படுத்துவதற்கு அருமையாக இருக்கும்.

சேமிப்பு வசதி

சேமிப்பு வசதி

ரியல்மி 5ஐ ஸ்மார்ட்போனில் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது, மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேமரா வசதி

கேமரா வசதி

இந்த ஸ்மார்போனின் பின்புறம் 12எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி வைடு ஆங்கிள் லென்ஸ்+ 2எம்பி டெப்த்சென்சார் + 2எம்பி மேக்ரோ சென்சார் என மொத்தம் நான்கு கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் 8எம்பி
செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

 பேட்டரி மற்றும் இணைப்பு ஆதரவுகள்

பேட்டரி மற்றும் இணைப்பு ஆதரவுகள்

ரியல்மி 5ஐ ஸ்மார்ட்போனில் 5000எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, மேலும் வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பிடைப்-சி போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகள் அடக்கம் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Realme 5i Set to Launch on January 6, Retailer Listing Reveals Key Specifications: Read more about this in Tamil

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X