பொங்கல் பரிசு அறிவித்த ரியல்மி: ரூ.8,999-விலையில் Realme 5i ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

|

ரியல்மி நிறுவனம் சொன்னபடியே ரூ.8,999-விலையில் ரியல்மி 5ஐ ஸ்மார்ட்போன் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது, குறிப்பக இந்த ஸ்மார்ட்போன் மாடல் பிளிப்கார்ட் மற்றும் ரியல்மி வலைதளங்களில் வரும் ஜனவரி 15-ம் தேதி விற்பனைக்கு
வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 நீலம், புசுமை

நீலம், புசுமை

மேலும் இந்த ரியல்மி 5ஐ ஸ்மார்ட்போன் மாடல் நீலம், புசுமை போன்ற நிறங்களில் வெளிவரும் என்று அந்நிறுவனம்சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் கைரேகை சென்சார் பொறுத்தப்பட்டுள்ளது.

 6.5-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே

6.5-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே

ரியல்மி 5ஐ ஸ்மார்ட்போன் மாடல் 6.5-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 720 x 1600 பிக்சல் திர்மானம்மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது. குறிப்பாக வாட்டர் டிராப் டிஸ்பிளே வடிவமைப்பைக்
கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

நோக்கியா 6.1 ஸ்மார்ட்போனுக்கு புத்தம் புதிய அப்டேட்.!நோக்கியா 6.1 ஸ்மார்ட்போனுக்கு புத்தம் புதிய அப்டேட்.!

64ஜிபி உள்ளடக்க மெமரி

64ஜிபி உள்ளடக்க மெமரி

ரியல்மி 5ஐ ஸ்மார்ட்போனில் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது, மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேமரா வசதி

கேமரா வசதி

இந்த ஸ்மார்போனின் பின்புறம் 12எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி வைடு ஆங்கிள் லென்ஸ்+ 2எம்பி டெப்த் சென்சார் + 2எம்பி மேக்ரோ சென்சார் என மொத்தம் நான்கு கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் 8எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு
அம்சம் என பல்வேறு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

ஸ்னாப்டிராகன் 665எஸ்ஒசி சிப்செட்

ஸ்னாப்டிராகன் 665எஸ்ஒசி சிப்செட்

இந்த ஸ்மார்ட்போன் மாடல் குவால்காம் ஸ்னாப்டிராகன் 665எஸ்ஒசி சிப்செட் வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு 9பை இயங்குதளத்தை கொண்டு இந்த சாதனம் வெளிவந்துள்ளது என்பதால் பயன்படுத்துவதற்கு அருமையாக இருக்கும்.

வாட்ஸ்அப் இல் சாட்களை பின் செய்வது எப்படி? இது தெரியாம போச்சே!வாட்ஸ்அப் இல் சாட்களை பின் செய்வது எப்படி? இது தெரியாம போச்சே!

 ரியல்மி 5ஐ பேட்டரி

ரியல்மி 5ஐ பேட்டரி

ரியல்மி 5ஐ ஸ்மார்ட்போனில் 5000எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, மேலும் வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5எம்எம்
ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகள் அடக்கம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது

Most Read Articles
Best Mobiles in India

English summary
Realme 5i Launched in India at Rs 8,999 : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X