Home
Mobile

நான்கு கேமரா: 5000எம்ஏஎச் பேட்டரி: 6.5-இன்ச் டிஸ்பிளே: ரூ.8,999-க்கு களமிறங்கும் ரியல்மி 5ஐ.!

ரியல்மி நிறுவனம் வரும் ஜனவரி 9-ம் தேதி தனது புதிய ரியல்மி 5ஐ ஸ்மார்ட்போன் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது, குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் அதிநவீன தொழில்நுட்ப வசதியுடன் வெளிவரும் என அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் பற்றி ஆன்லைனில் கசிந்த சில விவரங்களைப் பார்ப்போம்.

 6.5-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே

6.5-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே

ரியல்மி 5ஐ ஸ்மார்ட்போன் மாடல் 6.5-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 720 x 1600 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவரும். குறிப்பாக வாட்டர் டிராப் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

ஸ்னாப்டிராகன் 665எஸ்ஒசி சிப்செட்

ஸ்னாப்டிராகன் 665எஸ்ஒசி சிப்செட்

இந்த ஸ்மார்ட்போன் மாடல் குவால்காம் ஸ்னாப்டிராகன் 665எஸ்ஒசி சிப்செட் வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு 9பை இயங்குதளத்தை கொண்டு இந்த சாதனம் வெளிவரும் என்பதால் பயன்படுத்துவதற்கு அருமையாக இருக்கும்.

64ஜிபி உள்ளடக்க மெமரி

64ஜிபி உள்ளடக்க மெமரி

ரியல்மி 5ஐ ஸ்மார்ட்போனில் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது, மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேமரா வசதி

கேமரா வசதி

இந்த ஸ்மார்போனின் பின்புறம் 12எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி வைடு ஆங்கிள் லென்ஸ்+ 2எம்பி டெப்த் சென்சார் + 2எம்பி மேக்ரோ சென்சார் என மொத்தம் நான்கு கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் 8எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

பேட்டரி மற்றும் விலை

பேட்டரி மற்றும் விலை

ரியல்மி 5ஐ ஸ்மார்ட்போனில் 5000எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, மேலும் வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகள் அடக்கம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளிவந்த தகவல்களின் அடிப்படையில் இந்த ஸ்மார்ட்போன் ஆனது ரூ.8,999-விலையில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Realme 5i Launch Date Set for Jaunary 9: 5000mAh Battery, Quad-Camera Setup and More : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X