புது Realme 5ஜி, 4ஜி போன் வாங்க பிளான் போட்டவர்கள் தலையில் இறங்கிய இடி.. என்னாச்சு?
ஏற்கனவே ரியல்மி (Realme) நிறுவனத்தின் லேட்டஸ்ட் ஸ்மார்ட்போன்கள் ஆன ரியல்மி 16 ப்ரோ சீரிஸ், ரியல்மி சி-சீரிஸ் மற்றும் பல மாடல்களின் விலைகள் அதிகரித்துள்ள நிலைப்பாட்டில், பட்ஜெட் மற்றும் நடுத்தர விலை பிரிவுகளில் வரும் ரியல்மி பி-சீரீஸ் ஸ்மார்ட்போன்களின் விலைகளும் உயர்த்தப்பட்டுள்ளன.
அதாவது ரியல்மி பி4 (Realme P4), ரியல்மி பி4எக்ஸ் (Realme P4x), ரியல்மி பி4 பவர் (Realme P4 Power) மற்றும் ரியல்மி பி4 லைட் 4ஜி (Realme P4 Lite 4G) ஆகிய ஸ்மார்ட்போன்களின் விலைகள் உயர்த்தப்பட்டு உள்ளன. மேற்கண்ட ஸ்மார்ட்போன்களின் பழைய விலை என்ன? புதிய விலை என்ன? இதோ விவரங்கள்:

ரியல்மி பி4 மாடலில் இருந்து தொடங்கினால், இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ.3,000 உயர்த்தப்பட்டு உள்ளது. இதன் மூலம் இதன் விலை ரூ.20,999 இல் இருந்து ரூ.23,999 ஆக உயர்ந்து உள்ளது. ஆக ரியல்மி பி4 ஸ்மார்ட்போன் ஆனது இப்போது வேறுபட்ட விலைப்பிரிவிற்கு வந்துள்ளது
ரியல்மி பி4 ஸ்மார்ட்போனின் பழைய விலை VS புதிய விலை:
6ஜிபி ரேம் + 128ஜிபி - ரூ.20,999 இல் இருந்து ரூ 23,999 ஆக உயர்ந்துள்ளது
8ஜிபி ரேம் + 128ஜிபி ரூ.21,999 இல் இருந்து ரூ.24,999 ஆக உயர்ந்துள்ளது
8ஜிபி ரேம் + 256ஜிபி ரூ.23,999 இல் இருந்து ரூ.26,999 ஆக உயர்ந்துள்ளது
10001mAh பேட்டரி கொண்ட ரியல்மி பி4 பவர் போனின் விலையும் ரூ.2,000 அதிகரித்துள்ளது. முன்பு ரூ 27,999 என விலையிடப்பட்டிருந்த 8ஜிபி + 128ஜிபி மாடல், இப்போது ரூ.29,999 க்கு வாங்க கிடைக்கிறது. ரியல்மி பி4 மாடலை போலவே பி4 பவரின் மூன்று ஸ்டோரேஜ் ஆப்ஷன்களுமே விலை உயர்வை பெற்றுள்ளது
ரியல்மி பி4 பவர் ஸ்மார்ட்போனின் பழைய விலை VS புதிய விலை:
8ஜிபி ரேம் + 128ஜிபி - ரூ.27,999 இல் இருந்து ரூ 29,999 ஆக உயர்ந்துள்ளது
8ஜிபி ரேம் + 256ஜிபி ரூ.29,999 இல் இருந்து ரூ.31,999 ஆக உயர்ந்துள்ளது
12ஜிபி ரேம் + 256ஜிபி ரூ.32,999 இல் இருந்து ரூ.34,999 ஆக உயர்ந்துள்ளது
இந்தியாவில் ரியல்மி பி4எக்ஸ் மற்றும் ரியல்மி பி4 லைட் 4ஜி ஸ்மார்ட்போன்களின் விலைகளும் உயர்த்தப்பட்டுள்ளன. முன்னதாக ரூ.19,999 என விலையிடப்பட்டிருந்த பி4எக்ஸ் மாடல், தற்போது ரூ.21,499 க்கு கிடைக்கிறது. பிP4 லைட் 4ஜி மாடலை பொறுத்தவரை, ரூ.1,000 விலை உயர்வுக்குப் பிறகு, 4ஜிபி ரேம் + 64ஜிபி ஆப்ஷனின் விலை தற்போது ரூ.11,999 ஆக உள்ளது.
ரியல்மி பி4எக்ஸ் ஸ்மார்ட்போனின் பழைய விலை VS புதிய விலை:
6ஜிபி ரேம் + 128ஜிபி - ரூ.19,999 இல் இருந்து ரூ 21,499 ஆக உயர்ந்துள்ளது
8ஜிபி ரேம் + 128ஜிபி ரூ.21,499 இல் இருந்து ரூ.23,499 ஆக உயர்ந்துள்ளது
ரியல்மி பி4 லைட் 4ஜி ஸ்மார்ட்போனின் பழைய விலை VS புதிய விலை:
4ஜிபி ரேம் + 64ஜிபி - ரூ.10,999 இல் இருந்து ரூ 11,999 ஆக உயர்ந்துள்ளது
4ஜிபி ரேம் + 128ஜிபி ரூ.12,999 இல் இருந்து ரூ.13,999 ஆக உயர்ந்துள்ளது
ரியல்மி மட்டுமல்ல, கிட்டத்தட்ட ஒவ்வொரு பிராண்டும் அனைத்து பிரிவுகளிலும் உள்ள தத்தம் ஸ்மார்ட்போன்களின் விலைகளை உயர்த்தி வருகின்றன, மேலும் புதிய போன்கள் கூட எதிர்பார்த்ததை விட மிக அதிக விலையில் அறிமுகப்படுத்தப்படுகின்றன. எனவே விலை குறைப்பு வரட்டும் என்று எதிர்பார்த்து காத்துக்கிடக்காமல், மேலும் விலை உயர்வுகள் வருவதற்கு முன்பு ஒரு போனை வாங்கிவிடுவது நல்லது.


Click it and Unblock the Notifications