Home
Mobile

ஆகஸ்ட் 20: அசத்தலான ரியல்மி 5, ரியல்மி 5 ப்ரோ ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்.!

சியோமி நிறுவனத்திற்கு போட்டியாக தொடர்ந்து புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்த வண்ணம் உள்ளது ரியல்மி நிறுவனம், குறிப்பாக இந்நிறுவனம் இந்த ஆண்டு இறுதிக்குள் பல்வேறு புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.

அதிக வரவேற்பை பெருகிறது

அதிக வரவேற்பை பெருகிறது

அதன்படி ரூ.20,000-என்கிற பட்ஜெட்டின் கீழ் வாங்க கிடைக்கும் ஸ்மார்ட்போன்களில் ரியல்மி போன்கள் அதிகம் இடம்பெருகிறது. குறிப்பாக இந்த நிறுவனம் உருவாக்கும் ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் அதிக வரவேற்பை பெருகிறது.

ரியல்மி 5, ரியல்மி 5 ப்ரோ

ரியல்மி 5, ரியல்மி 5 ப்ரோ

இந்நிலையில் வரும் ஆகஸ்ட் 20-ம் தேதி இந்தியாவில் ரியல்மி 5, ரியல்மி 5 ப்ரோ ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்படும் என அந்நிறுவனம் சார்பில் தகவல் தெரிவித்துள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன்களின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

 பிளிப்கார்ட் டீஸர்

பிளிப்கார்ட் டீஸர்

வெளியான பிளிப்கார்ட் டீஸர் அடிப்படையில் புதுpய ரியல்மி ஸ்மார்ட்போன்களில் க்வாட் ரியர் கேமரா அமைப்பு இடம்பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, பின்பு இது உண்மையாகும் பட்சத்தில் வெளியாகும் முதல் ரியல்மி க்வாட் கேமரா கொண்ட ஸ்மார்ட்போன்களாக ரியல்மி 5, ரியல்மி 5 ப்ரோ ஸ்மார்ட்போன்கள் இருக்கும்.

 க்வாட் கேமரா

க்வாட் கேமரா

மேலும் க்வாட் கேமரா அமைப்பில், முதன்மை கேமராவுடன் அல்ட்ரா வைடு, super macro மற்றும் portrait லென்ஸ்கள் இடம்பெறும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் குறைந்த வெளிச்சங்களிலும் துல்லியமான புகைப்படங்களை எடுக்கும் வசதியுடன் ரியல்மி 5 தொடர் ஸ்மார்ட்போன்கள் வெளிவரும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகாரபூர்வமான விலை

அதிகாரபூர்வமான விலை

ரியல்மி 5 தொடர் ஸ்மார்ட்போன்கள் பொறுத்தவரை கூர்மையான மற்றும் தெளிவான Portrait புகைப்படங்களை எடுக்கும் திறன் கொண்டுள்ளது என்றும், பின்பு இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர் அம்சங்களுடன் இந்த ஸ்மார்ட்போன்கள் வெளிவரும் என தகவல் வெளிவந்துள்ளது.

ரியல்மி 5, ரியல்மி 5 ப்ரோ ஸ்மார்ட்போன்கள் பிளிப்கார்ட் வழியே விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, பின்பு அதிகாரபூர்வமான விலை இன்னும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
August 20 Realme 5 series launching in India specs : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X