Home
Mobile

ரூ.7000 வரையிலான சலுகையுடன் பட்ஜெட் விலையில் ரியல்மி 5 ப்ரோ விற்பனை!

சீனா நிறுவனமான ரியல்மி நிறுவனம் தனது ரியல்மி 5 ப்ரோ ஸ்மார்ட்போனின் விற்பனையை இந்தியாவில் முதல் முறையாக இன்று மதியம் 12 மணி அளவில் பிளிப்கார்ட் தளம் மற்றும் realme.com தளங்களில் விற்பனைக்குக் கிடைக்குமென்று அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிய ரியல்மி 5 ப்ரோ ஸ்மார்ட்போன்

இந்த புதிய ரியல்மி 5 ப்ரோ ஸ்மார்ட்போன் கடந்த மாதம் ரியல்மி 5 ஸ்மார்ட்போனுடன் அறிமுகம் செய்யப்பட்டது. ரியல்மி 5 ஸ்மார்ட்போன் பல முறை விற்பனைக்கு வந்தது, ஆனால் ரியல்மி 5 ப்ரோ ஸ்மார்ட்போனின் விற்பனை தற்பொழுது தான் முதல் முறையாக விற்பனைக்கு கொண்டுவரப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ரியல்மி பட்ஸ் 2

ரியல்மி 5 ப்ரோ ஸ்மார்ட்போன், குவால்காம் ஸ்னாப்டிராகன் 712 பிரசஸர், 8 ஜிபி ரேம் மற்றும் பின்புறத்தில் குவாட் கேமரா அமைப்பு போன்ற சிறப்பம்சங்களுடன் பட்ஜெட் விலையில் விற்பனைக்கு வந்துள்ளது. ரியல்மி 5 ப்ரோ ஸ்மார்ட்போன் உடன் இம்முறை ரியல்மி பட்ஸ் 2 வயர் ஹெட்போன்ஸ் விற்பனைக்கு வருகிறது.

ரூ.7,000 வரை சலுகை

ரியல்மி 5 ப்ரோ ஸ்மார்ட்போனின் அறிமுக சலுகையாக நிறுவனத்தின் வலைத்தளத்திலிருந்து தொலைப்பேசியை வாங்கும் போது ரிலையன்ஸ் ஜியோ மற்றும் பேடிஎம் முதல் உறுப்பினர்களுக்கு ரூ.7,000 வரை சலுகை வழங்கப்படுகிறது. கூடுதலாக Realme.com தளத்தில் Paytm UPI பயன்படுத்தி வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு ரூ.2000 கேஷ்பேக் சலுகையும் வழங்கப்படுகிறது.

ரியல்மி 5 ப்ரோ சிறப்பம்சம்
  • 6.3' இன்ச் முழு எச்.டி பிளஸ் டிஸ்பிளே
  • கார்னிங் கொரில்லா க்ளாஸ் 3
  • ஆக்டா சோறே ஸ்னாப்டிராகன் 712 பிராசஸர்
  • ஆண்ட்ராய்டு 9.0 பை இயங்குதளம்
  • ColorOS 6.0
  • 4ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட்
  • 6ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட்
  • 8ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட்
  • 256ஜிபி வரை எஸ்.டி கார்டு சேவை
  • 48 மெகா பிக்சல் கொண்ட பிரைமரி கேமரா
  • 8 மெகா பிக்சல் கொண்ட அல்ட்ரா வைடு ஆங்கிள்
  • 2 மெகா பிக்சல் கொண்ட மேக்ரோ லென்ஸ் கேமரா
  • 2 மெகா பிக்சல் கொண்ட டெப்த் சென்சார்
  • 16 மெகா பிக்சல் கொண்ட செல்ஃபி கேமரா
  • VOOC 3.0 ஃபாஸ்ட் சார்ஜிங்
  • 4,035 எம்.ஏ.எச் பேட்டரி
  • விலை:
    • 4ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் ரூ.13,999
    • 6ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் ரூ.14,999
    • 8ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் ரூ.16,999
    • ரியல்மி பட்ஸ் 2 வயர் ஹெட்போன்ஸ் ரூ.599

Best Mobiles in India

English summary
Realme 5 Pro Goes on Sale Flipkart And Realme Site For First Time Price, Spec And Launch Offers : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X