Realme 5 Pro | Realme C3 புதிய தோற்றத்தில் அட்டகாசமான பிரைட் நிறத்தில்! விலை அதே தான்!
ரியல்மி நிறுவனம் தனது இரண்டு ஸ்மார்ட்போன்களுக்கான புதிய வண்ண விருப்பங்களை தற்பொழுது இந்தியாவில் அறிமுகப்படுத்த உள்ளது என்று இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ரியல்மி நிறுவனத்தின் ரியல்மி 5 ப்ரோ மற்றும் ரியல்மி C3 ஸ்மார்ட்போனுக்கான புதிய வண்ண விருப்பங்களை ரியல்மி பிராண்ட் மேற்கொண்டுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ரியல்மி சி 3 ஸ்மார்ட்போன், தற்பொழுது புதிய வோல்க்கானோ க்ரெய் என்ற வண்ண விருப்பத்தையும், ரியல்மி 5 ப்ரோ ஸ்மார்ட்போன் குரோமா ஒயிட் என்ற வண்ண விருப்பத்தையும் ரியல்மி அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய இரண்டு வண்ண விருப்பங்கள் ரியல்மி.காம் மற்றும் பிளிப்கார்ட்.காம் ஆகிய தளங்களில் தற்பொழுது விற்பனைக்குக் கிடைக்கிறது.

ரியல்மி நிறுவனத்தின் அறிவிப்புப் படி, புதிய வண்ண வேரியண்ட் மாடல்கள் நுகர்வோர் கைகளில் சேர தயாராகிவிட்டது. குறிப்பாக ரியல்மி சி3 வோல்க்கானோ க்ரெய் ஸ்மார்ட்போனின் விற்பனை ஏற்கனவே ஆகஸ்ட் 6ம் தேதி நள்ளிரவு முதல் துவங்கிவிட்டது. அதேபோல், ரியல்மி 5 ப்ரோ ஸ்மார்ட்போன் நாளை முதல், அதாவது ஆகஸ்ட் 8ம் தேதி மதியம் 12:00 மணி முதல் விற்பனைக்குக் கிடைக்கும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.

ரியல்மி 5 ப்ரோ ஸ்மார்ட்போனின், 6 ஜிபி ரேம் + 64 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் வேரியண்ட் மாடல் இந்தியச் சந்தையில் வெறும் ரூ .13,999 என்ற விலையில் விற்பனைக்கு கிடைக்கிறது. அதே நேரத்தில், அதன் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் கொண்ட வெறும் ரூ .16,999 என்ற விலையில் கிடைக்கிறது. ரியல்மி சி3 ஸ்மார்ட்போனின் 3 ஜிபி ரேம் + 32 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் வேரியண்ட் ரூ .8,999 இன்றி விற்பனை செய்யப்படுகிறது.

ரியல்மி 5 ப்ரோ சிறப்பம்சம்
- 6.3' இன்ச் கொண்ட 2340 x 1080 பிக்சல்கள் உடைய முழு எச்டி பிளஸ் டிஸ்ப்ளே
- கார்னிங் கொரில்லா கிளாஸ் 3+ பாதுகாப்பு
- அட்ரினோ 616 ஜி.பீ.யு
- குவால்காம் ஸ்னாப்டிராகன் 712 பிராசஸர்
- கலர் OS 6.0 உடன் கூடிய ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளம்
- குவாட் கேமரா அமைப்பு
- 48 எம்பி முதன்மை கேமரா
- 8 எம்பி வைடு ஆங்கிள் கேமரா
- 2 எம்பி மேக்ரோ லென்ஸ் கேமரா
- 2 எம்பி டெப்த் சென்சார்
- 16 மெகாபிக்சல் செல்பி கேமரா
- VOOC 3.0 ஃப்ளாஷ் சார்ஜ் ஆதரவு
- 4035 எம்.ஏ.எச் பேட்டரி



Click it and Unblock the Notifications