Home
Mobile

ரியல்மி 5 ஸ்மார்ட்போன் மாடலுக்கு அதிரடி விலைகுறைப்பு.!

ரியல்மி நிறுவனம் தனது ரியல்மி 5 என்கிற ஸ்மார்ட்போன் மாடலுக்கு அதிரடி விலைகுறைப்பை அறிவித்துள்ளது, அதன்படி விலைகுறைக்கப்பட்ட இந்த ஸ்மார்ட்போனை ரியல்மி மற்றும் பிளிப்கார்ட் தளங்களில் வாங்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

அட்டகாசமான விலைகுறைப்பு

அட்டகாசமான விலைகுறைப்பு

3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி மெமரி கொண்ட ரியல்மி 5 ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.9,999-ஆக இருந்தது, தற்சமயம்விலைகுறைக்கப்பட்டு ரூ.8,999-விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட ரியல்மி 5 ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.10,999-ஆக இருந்தது, தற்சமயம்விலைகுறைக்கப்பட்டு ரூ.9,999-விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ரியல்மி 5 ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.11,999-ஆக இருந்தது,தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு ரூ.10,999-விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

அருமையான டிஸ்பிளே

அருமையான டிஸ்பிளே

ரியல்மி 5 ஸ்மார்ட்போன் ஆனது 6.5-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது,பின்பு 720x1600பிக்சல் திர்மானம் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 3பிளஸ் பாதுகாப்பு அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. மேலும்வாட்டர் டிராப் டிசைன் இருப்பதால் பார்ப்பதற்கு அருமையாக இருக்கும்.

சிப்செட் வசதி

சிப்செட் வசதி

இந்த ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 665சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது, பின்பு ஆண்ட்ராய்டு 9.0 உடன்கலர் ஒஎஸ் 6.0 இயங்குதளங்களை கொண்டு வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும் என்றே கூறலாம்.

கேமரா வசதி

கேமரா வசதி

இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் 12எம்பி பிரைமரி கேமரா +8எம்பி வைடு ஆங்கிள் லென்ஸ் +2எம்பி மேக்ரோ லென்ஸ் +2எம்பி போர்ட்ரைட் லென்ஸ் என நான்கு கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் 13எம்பி செல்பீ கேமரா, எல்இடி
பிளாஸ் உள்ளிட்ட பல்வேறு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

பேட்டரி மற்றும் இணைப்பு ஆதரவுகள்

பேட்டரி மற்றும் இணைப்பு ஆதரவுகள்

ரியல்மி 5 ஸ்மார்ட்போனில் 5000எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு வைஃபை, ஜிபிஎஸ், மைக்ரோ யுஎஸ்பி போர்ட், டூயல் சிம், 4ஜி வோல்ட்இ, உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம். மேலும் இந்த சாதனத்தின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

Best Mobiles in India

English summary
Realme 5 price slashed in India: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X