இந்த ரியல்மி மாடல் யூஸ் பண்றீங்களா?- உங்களுக்கு ஒரு நற்செய்தி!
ரியல்மி கடந்த வாரம் நார்சோ 30 ப்ரோ 5ஜி சாதனத்துக்கான ஆண்ட்ராய்டு 11 அடிப்படையிலான ரியல்மி யுஐ 2.0 ஸ்டேபிள் அப்டேட்டை வெளியிட்டது. இந்த நிலையில் தற்போது ரியல்மி 30ஏ சாதனத்துக்கு அப்டேட் அறிவித்துள்ளது.

ஆண்ட்ராய்டு 11 ரியல்மி யுஐ 2.0
ரியல்மி நிறுவனம் சாதனத்துக்கான வரவேற்பு மக்களிடையே அதிகரித்து வருகிறது. இந்த புதுப்பிப்பானது புதுப்பிக்கப்பட்ட யுஐ மற்றும் ஆண்ட்ராய்டு 11 ரியல்மி யுஐ 2.0 அம்சத்தோடு வருகிறது. இதில் நோட்டிப்பிகேஷன் ஹிஸ்டரி, சாட் பப்பிள்ஸ், மூன்று வகையான டார்க் மோட் ஸ்டைல் உள்ளிட்ட அம்சங்களோடு வருகிறது. புதிய ஃபார்ம்வேர் பதிப்பு எண் ஆர்எம்எக்ஸ்3171_11.C..0 உடன் வருகிறது. உங்கள் ரியல்மி ஸ்மார்ட்போன் தற்போது யுஐ 2.0 அப்டேட்டை வழங்குகிறது.

விரைவில் அனைவருக்கும் அப்டேட்
இந்த புதுப்பிப்பான தற்போது இந்தியாவில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பயனர்களுக்கு மட்டுமே தற்போது வழங்குகிறது. தற்போது அம்சம் கிடைக்கப்பெறாத பயனர்களுக்கு விரைவில் அப்டேட் கிடைக்கும் என்பது கவனிக்கத்தக்க ஒன்று.

3 ஜிபி ரேம் மற்றும் 4 ஜிபி ரேம்
ரியல்மி நார்சோ 30ஏ ஸ்மார்ட்போன் 3 ஜிபி ரேம் மற்றும் 4 ஜிபி ரேம் அம்சத்தோடு வருகிறது. இது 13 எம்பி முதன்மை கேமரா, 2 எம்பி இரண்டாம் நிலை கேமரா என டூயல் கேமரா அம்சத்தை கொண்டுள்ளது. இதன் முன்புறத்தில் 8 எம்பி செல்பி கேமரா இருக்கிறது. இது மீடியாடெக் ஹீலியோ ஜி 85 சிப்செட், 6.5 இன்ச் டிஸ்ப்ளேவுடன் வருகிறது. இது 6000 எம்ஏஎச் பேட்டரி அம்சத்தோடு வருகிறது.

ரியல்மி 30 5ஜி சாதனம்
சமீபத்தில் ரியல்மி நிறுவனம் ரியல்மி 30 5ஜி சாதனத்தை அறிமுகம் செய்தது. ரியல்மி நார்சோ 30 5ஜி ஸ்மார்ட்போன் மாடல் 6.5-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு1080 x 2400 பிக்சல் தீர்மானம், 180 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட், 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 600 நிட்ஸ் ப்ரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்புவசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது

ஆண்ட்ராய்டு 11 பயன்பாடு
மேலும் ஆண்ட்ராய்டு 11 சார்ந்த realme UI 2.0 இயங்குதளத்தை அடிப்படையாககொண்டு வெளிவந்துள்ளது இந்த புதிய ரியல்மி நார்சோ 30 5ஜி ஸ்மார்ட்போன் மாடல். ரியல்மி நார்சோ 30 5ஜி ஸ்மார்ட்போனில் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி உள்ளது. மேலும் ரேசிங் ப்ளூ மற்றும் ரேசிங் சில்வர் நிறங்களில் வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

48எம்பி முதன்மை கேமரா
ரியல்மி நார்சோ 30 5ஜி ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பிரைமரி சென்சார் + 2எம்பி மேக்ரோ சென்சார் +2எம்பி monochrome portrait lens என மொத்தம் மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் வீடியோ கால் அழைப்புகளுக்கு என்றே 16எம்பி செல்பீ கேமராவைக் கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல். மேலும் எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு ஆதரவுகளைகொண்டுள்ளது இந்த ரியல்மி நார்சோ 30 5ஜி ஸ்மார்ட்போன் மாடல்.

5000 எம்ஏஎச் பேட்டரி
ரியல்மி நார்சோ 30 5ஜி ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி மற்றும் கைரேகை சென்சார் வசதியைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன் மாடல்.


Click it and Unblock the Notifications