மார்ச் 4: 4230எம்ஏஎச் பேட்டரியுடன் களமிறங்கும் ரியல்மி 3.!
வெளியிடப்பட்ட ரியல்மி 3 ஸமார்ட்போனின் டீசர்கள் அடிப்படையில் டூயல் பிரைமரி கேமரா செங்குத்தாக பொருத்தப்பட்டிருக்கிறது என்பது தெரியவந்துள்ளது.
ஒப்போ நிறுவனத்தின் துணை நிறுவனம் ரியல்மி வரும் மார்ச் 4-ம் தேதி தனது ரியல்மி 3 ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. அதன்படி இந்த ஸ்மார்ட்போன் இந்தியா முழுவதும் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது
என்று தான் கூறவேண்டும்..

ரியல்மி 3 ஸ்மார்ட்போன் மாடல் பிளிப்கார்ட் வலைதளத்தில் மட்டுமே விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் இந்த ஸ்மார்ட்போனின் சில அம்சங்கள் தற்சமயம் ஆன்லைனில் வெளியிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

டியூ-டிராப் நாட்ச் டிஸ்பிளே
ரியல்மி 3 ஸ்மார்ட்போன் பொதுவாக டியூ-டிராப் நாட்ச் டிஸ்பிளே வடிவமைப்புடன் வெளிவரும், பின்பு கார்னிங் கொரில்லா கிளாஸ் ஆதரவு கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். மேலும் பெசல்ஸ் வடிவமைப்புடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும் என அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிப்செட்:
ஆக்டோ-கோர் மீடியாடெக் ஹீலியோ பி70 சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல், பின்பு ஆண்ட்ராய்டு 9 பை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும் என்பதால் பயன்படுத்துவதற்கு
மிகவும் அருமையாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேமரா:
வெளியிடப்பட்ட ரியல்மி 3 ஸமார்ட்போனின் டீசர்கள் அடிப்படையில் டூயல் பிரைமரி கேமரா செங்குத்தாக பொருத்தப்பட்டிருக்கிறது என்பது தெரியவந்துள்ளது. மேலும் முந்தைய ஸ்மார்ட்போன்களில் டூயல் கேமரா செட்டப் கிடைமட்டமாக பொருத்தப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

கைரேகை சென்சார்
பின்பு ரியல்மி 3 ஸ்மார்ட்போனின் பின்புறம் கைரேகை சென்சார், டைமண்ட கட் வடிவமைப்பு வழங்கப்பட்டுள்ளது, இதற்கு முன்பு கூட ரியல்மி 1 மற்றும் ரியல்மி 2 ஸ்மார்ட்போன்களில் டைமண்ட் கட் வடிவமைப்பு வழங்கப்பட்டிருந்தது என்பது
குறிப்பிடத்தக்கது.

பேட்டரி:
4230எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் ஆதரவு கொண்ட பேட்டரி ரியல்மி 3 ஸமார்ட்போனில் இடம்பெற்றுள்ளது, அதேசமயம் பட்ஜெட்
விலையில் இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.


Click it and Unblock the Notifications