ரெட்மி நோட், கேலக்ஸிஎம் 20 உடன் போட்டி போடும் ரியல்மி 3.!
ரியல்மி நிறுவனம் இந்தியாவில் ஏராளமான ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகின்றது. காலத்திற்கு ஏற்றார் போல் புதிய டிசைன்களையும் ரியல்மி நிறுவனம் அறிமுகம் செய்து வருகின்றது.
ரியல்மி நிறுவனம் இந்தியாவில் ஏராளமான ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகின்றது. காலத்திற்கு ஏற்றார் போல் புதிய டிசைன்களையும் ரியல்மி நிறுவனம் அறிமுகம் செய்து வருகின்றது.

இந்நிலையில் மற்ற சாம்சங் கேலக்ஸி எம் 20, சியோமி ரெட்மி நோட் 7 போன்களுடன் போட்டி போடும் வகையில் ரியல்மி 3 ஸ்மார்ட்போன் இருக்கின்றது.

ரியல்மி 3:
தற்போது அறிமுகமாகியுள்ள இந்த ஸ்மார்ட்போனில் 6.2 இன் ச் நாட்ச் டிஸ்பிளே, மீடியாடெக் ஹிலிகோ பி70 புராசஸர், 3ஜிபி/4ஜிபி ரேம், 32 ஜிபி, 64ஜிபி மெமரி உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளது.

ரூ.8,999:
கலர் ஓஎஸ் 6.0 ஆன்ட்ராய்டு பீ, 13 எம்பி + 2எம்பி ரியல் கேமரா, 12 எமப் செல்பி கேமரா, 4, 230 எம்ஏஹச் பேட்டரி உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளன. ரூ.8,999 கிடைக்கும்.

தெறிக்கவிடும் ரியல்மி மாடல்கள்:
ரியல்மி நிறுவனம் இந்தியாவில் ஏராளமான மாடல்களை அறிமுகம் செய்து வருகின்றது.
இதில், ரியல்மி 2 புரோ, ரியல்மி யூ, இந்த வரிசையில் களமிறங்கியுள்ளது ரியல்மி 3 மாடல்.

ரெட்மி நோட்7, கேலக்ஸி எம் 30க்கு போட்டி:
சியோமி நிறுவனம் ரெட்மி நோட் 7 சாம்சங் கேலக்ஸி எம்30க்கு உடன் போட்டி போடும் வகையில், ரூ.8999 தனது ரியமில் 3யை அறிமுகம் செய்துள்ளது.
மேலும், இதில் ஹெலிகோ பி70, புரோசஸர், டூயல் ரியல் கேமரா உள்ளிட்டவை அந்த நிறுவனங்களுடன் போட்டி போடும் வகையில் உள்ளது.

வடிவமைப்பு:
ரியல்மி 3 ஸ்மார்ட்போன் 3டி தொழில் நுட்பத்தின் உதவியோடு வடிவமைக்கப்பட்டுள்ளது.இதில் உள்ள அம்சங்கள் மற்றவர்களை கவர்ந்திழுக்கும் வகையில் இருக்கின்றது.

கேமரா:
ரியல்மி 3 கேமரா 13 எம்பி கேமரா, 2எம்பி சென்சார், எப் 1.8 அப்ரேசர், 5பி லென்ஸ், ஹைபிர்டு ஹெச்டிஆர், க்ரோமா, பூஸ்ட், போர்ட்ரைட்மோடு, 1.12யூஎம்எம், ஏஐ பியூடிப்பிகேஷன், ஹெச்டிஆர், ஏஐ பேசியல் அன்லாக் உள்ளிட்டவை இருக்கின்றன.

புகைப்படங்கள்:
இதில் உள்ள கேமரா தொழில்நுட்பத்தின் மூலம் புகைப்படங்களையும் அரிய வகையில் காண முடியும். இரவு-பகல் என புகைப்படங்களையும் அழகாக எடுக்கலாம்.


Click it and Unblock the Notifications