ரியல்மி இந்த மாடல் பயனரா நீங்கள்: உங்களுக்கு ஒரு நற்செய்தி!
ரியல்மி 3 ப்ரோ ஸ்மார்ட்போனுக்கு ஆண்ட்ராய்டு 11 புதுப்பிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனானது ஆண்ட்ராய்டு 9 சாஃப்ட்வேர் உடன் 2019 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. ரியல்மி 3 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 11 அப்டேட்டை பெற்றுள்ளது.

ஆண்ட்ராய்டு 10 அப்டேட்
இந்த ஸ்மார்ட்போனுக்கு கடந்த ஆண்டு ஆண்ட்ராய்டு 10 அப்டேட் வழங்கப்பட்டது. இந்த ஸ்மார்ட்போன் ஆனது இரட்டை கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. ரியல்மி 3 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது ஆண்ட்ராய்டு 11 அடிப்படையிலான ரியல்மி யுஐ 2.0 புதுப்பிப்பின் நிலையான பதிப்பை இந்தியாவில் பெறுகிறது. ரியல்மி 3 ப்ரோ 2019-ல் அறிமுகப்படுத்தப்பட்டது.

ரியல்மி யுஐ-க்கு புதுப்பிப்பு
இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 9 பை மூலம் அறிமுகப்படுத்தப்பட்டது. பின் ஆண்ட்ராய்டு 10 அடிப்படையிலான ரியல்மி யுஐ-க்கு புதுப்பிக்கப்பட்டது. ரியல்மி 3 ப்ரோ ஸ்மார்ட்போனுக்கு ஆண்ட்ராய்டு 11 அப்டேட் வழங்கப்படுகிறது. புதிய உருவாக்கமானது RMX1851EX_11.F.05 பதிப்புடன் ஒரு சமூக வலைப்பதிவு இடுகையின் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. புதுப்பிப்பு தோராயமாக குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பயனர்களுக்கு மட்டுமே கிடைக்கிறது. முக்கியமான பிழைகள் இல்லை எதுவும் இதில் கண்டறியவில்லை என்பதை உறுதி செய்த பிறகு இது பரந்த அளவிலான பயனர்களுக்கு கிடைக்கும் என தெரிவிக்கப்படுகிறது.

முக்கிய பிழைகள் நீக்கம்
புதுப்பித்தலுக்கு பிறகு முக்கிய பிழைகள் நீக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. வரும் நாட்களில் முழு வெளியீடு கிடைக்கும் எனவும் புதுப்பிப்பு செயல்திறனை மேம்படுத்தி வழங்குகிறது. பயனர்கள் தங்கள் சாதனம் புதுப்பிப்பை பெற்றிருக்கிறதா என்பதை சரிபார்க்க செட்டிங்ஸ் பயன்பாட்டுக்குள் சென்று சாஃப்ட்வேர் அப்டேட் என்ற தேர்வுக்குள் சென்று செக் செய்து கொள்ளலாம். இதன் புதுப்பித்தலை தொடர்ந்து பாதுகாப்பு இணைப்பு நிலை கிடைக்கும்.

ஆண்ட்ராய்டு 11 அடிப்படையிலான ரியல்மி யுஐ 2.0
இந்த புதுப்பிப்பு ஆண்ட்ராய்டு 11 அடிப்படையிலான ரியல்மி யுஐ 2.0 ரியல்மி நார்சோ 30-க்கான புதிய அம்சங்களை கொண்டுள்ளது. இந்த புதிய மேம்படுத்தப்பட்ட டார்க் பயன்முறை, புதிய ஆப் டிராயர், சிஸ்டம், க்ளோனர், விரைவு ரிட்டர்ன் பபிள், மூன்றாம் தரப்பு ஐகான் ஆதரவு உள்ளிட்ட அணுகலை இந்த மேம்பாடு கொண்டுள்ளது.

ரியல்மி 3 ப்ரோ சிறப்பம்சங்கள்
ரியல்மி 3 ப்ரோ ஸ்மார்ட்போன் பொறுத்தவரை டூயல் ரியர் கேமரா, செயற்கை நுண்ணறிவு அம்சம் போன்ற பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டது. ரியல்மி 3 ப்ரோ ஸ்மார்ட்போன் பொதுவாக 6.3-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 1080 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு அம்சங்களுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் என்று
தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரியல்மி 3 ப்ரோ ஸ்மார்ட்போனில் 6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி இடம்பெற்றுள்ளது, பின்பு கூடுதலாக
மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் உள்ளது. மேலும் இந்த சாதனத்தின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தப்பட்டது. இந்த ரியல்மி 3 ப்ரோ ஸ்மார்ட்போனில் 16எம்பி + 5எம்பி டூயல் ரியர் கேமரா மற்றும் எல்இடி பிளாஸ் ஆதரவும் உள்ளது. பின்பு 16எம்பி செல்பீ கேமரா,செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்கள் கொண்டு இந்த ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வந்தது. ரியல்மி 3 ப்ரோ சாதனத்தில் 4230எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது,

6.3 இன்ச் முழு எச்டி ப்ளஸ் டிஸ்ப்ளே
ரியல்மி 3 ப்ரோ ஸ்மார்ட்போனானது 6.3 இன்ச் முழு எச்டி ப்ளஸ் டிஸ்ப்ளே 2340 x 1080 பிக்சல்கள் ஆதரவோடு வருகிறது. 90.8 சதவீதம் ஸ்க்ரீன் டூ பாடி விகிதம் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு உடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போனானது குவால்காம் ஸ்னாப்டிராகன் 710 எஸ்ஓசி மூலம் இயக்கப்படுகிறது. 4 ஜிபி ரேம் மற்றும் 6 ஜிபி ரேம் வண்ண விருப்பத்தோடு வருகிறது. இந்த ஸ்மார்ட்போனானது 4045 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications