6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரியுடன் ரியல்மி 3 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம்.!
4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி கொண்ட ரியல்மி 3 ப்ரோ ஸ்மார்ட்போனின் விலை ரூ.13,999-ஆக உள்ளது.
கடந்த வாரம் இந்தியாவில் ரியல்மி 3 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது, குறிப்பாக 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி, பின்பு 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி என இருவித வேரியண்ட்களில் கடந்த வாரம் அறிமுகம் செய்யப்பட்டது.

புதிய வேரியன்ட்
இந்நிலையில் புதிய வேரியன்ட் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது ரியல்மி நிறுவனம், அதன்படி 6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி வசதியுடன் ரியல்மி 3 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல் இன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ரியல்மி 3 ப்ரோ விலை:
4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி கொண்ட ரியல்மி 3 ப்ரோ ஸ்மார்ட்போனின் விலை ரூ.13,999-ஆக உள்ளது.
6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி கொண்ட ரியல்மி 3 ப்ரோ ஸ்மார்ட்போனின் விலை ரூ.16,999-ஆக உள்ளது.
6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி கொண்ட ரியல்மி 3 ப்ரோ ஸ்மார்ட்போனின் விலை ரூ.15,999-ஆக உள்ளது.

விற்பனை:
வரும் ஏப்ரல் 29-ம் தேதி அன்று பிளிப்கார்ட் வலைதளத்தில் இந்த ரியல்மி 3 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல் விற்பனைக்கு
வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, பின்பு ரியல்மி 3 ப்ரோ ஸ்மார்ட்போன் கார்பன் கிரே, நைட்ரோ புளு மற்றும் லைட்னிங் பர்ப்பிள் உள்ளிட்ட நிறங்களில் கிடைக்கும்.

அம்சங்கள்:
டிஸ்பிளே: 6.3-இன்ச் எப்எச்டி டிஸ்பிளே கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு
சிப்செட்: ஸ்னாப்டிராகன் 710 உடன் அட்ரினோ 616ஜிபியு
ரேம்: 4ஜிபி/6ஜிபி
மெமரி: 64ஜிபி/128ஜிபி செல்பீ
கேமரா: 25எம்பி ரியர் கேமரா: 16எம்பி பிரைமரி சென்சார் + 5எம்பி செகன்டரி சென்சார்
பேட்டரி: 4045எம்ஏஎச்
இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 9 பை
மைக்ரோ யுஎஸ்பி போர்ட், வைஃபை, என்எப்சி, ஜிபிஎஸ்
3.5எம்எம் ஆடியோ ஜாக், 20வாட் VOOC 3.0 சார்ஜர்


Click it and Unblock the Notifications