ரூ.8,999-விலையில் அதிரடியாக களமிறங்கிய ரியல்மி 3 ஸ்மார்ட்போன்.!
ரியல்மி 3 ஸ்மார்ட்போனின் சிப்செட் வசதிக்கு தனி கவனம் செலுத்தப்பட்டுள்ளது, அதன்படி மீடியாடெக் ஹீலியோ பி70 2.1ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் உடன் மாலி ஜி72 ஜிபியு வசதி இவற்றுள் அடக்கம்.
ரியல்மி நிறுவனம் இன்று தனது ரியல்மி 3 ஸ்மார்ட்போன் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது, மேலும் இந்த ஸ்மார்ட்போன் மாடல் பட்ஜெட் விலையில் சிறந்த அம்சங்களுடன் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக வரும் மார்ச் 12-ம் தேதி முதல் பிளிப்கார்ட் வழியே ரியல்மி 3 ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரியல்மி 3 ஸ்மார்ட்போன் பொதுவாக கருப்பு, நீலம், டைனமிக் கருப்பு, போனற நிறங்களில் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, குறிப்பாக சியோமியை விட விற்பனையில் முதல் இடம் பெறுவதற்கு அதிக தரத்துடன் பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல். மேலும் ரியல்மி 3 இந்த சாதனத்தின் பல்வேறு சிறப்பம்சங்களை பார்ப்போம்.

டிஸ்பிளே:
ரியல்மி 3 ஸ்மார்ட்போன் 6.2-இன்ச் எப்எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 1520 x 720 பிக்சல் திர்மானம் மற்றும் 19:9 என்ற திரைவிகிதம் அடிப்படையில் இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. குறிப்பாக
கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு கொண்டுள்ளது இந்த சாதனம்.

சிப்செட்:
ரியல்மி 3 ஸ்மார்ட்போனின் சிப்செட் வசதிக்கு தனி கவனம் செலுத்தப்பட்டுள்ளது, அதன்படி மீடியாடெக் ஹீலியோ பி70 2.1ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் உடன் மாலி ஜி72 ஜிபியு வசதி இவற்றுள் அடக்கம். மேலும் ஆண்ட்ராய்டு பை
இயங்குதளம் கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளதால் இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

சேமிப்பு:
ரியல்மி 3 ஸ்மார்ட்போன்
3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரி
4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி ஆதரவுகளுடன் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கேமரா:
இக்கருவியில் 13எம்பி + 2எம்பி டூயல் ரியர் கேமரா பொறுத்தப்பட்டள்ளது,பின்பு 13எம்பி செல்பீ கேமரா,எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்கள் இவற்றுள் அடக்கம். மேலும் பேஸ் அன்லாக் வசதி கொண்டு இந்த
ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

பேட்டரி:
இந்த ஸ்மார்ட்போனில் 4230எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு 4ஜி எல்டிஇ, ஜிபிஎஸ், வைஃபை, மைக்ரோ யுஸ்பி போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

விலை:
3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரி கொண்ட ரியல்மி 3 ஸ்மார்ட்போன் விலை ரூ.8,999-ஆக உள்ளது.
4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி கொண்ட ரியல்மி 3 ஸ்மார்ட்போன் விலை ரூ.10,999-ஆக உள்ளது.


Click it and Unblock the Notifications